லிப்ஸ்டிக், நெயில் பாலிஷ் தேர்ந்தெடுக்கும்போது கவனிக்க வேண்டியது!

லிப்ஸ்டிக்...
லிப்ஸ்டிக்...

ப்பொழுதெல்லாம் அளவுக்கு அதிகமாக எல்லோருமே லிப்ஸ்டிக் அண்ட் நெயில் பாலிஷ் பயன்படுத்துவது வழக்கத்தில் உள்ளது. அதை எப்படி தேர்ந்தெடுக்க வேண்டும் என்பதை இப்பதிவில் காண்போம். 

டால்கம் பவுடருக்கு அடுத்தபடியாக மிகப் பெரும்பான்மையோரால் பயன்படுத்தப்படும் அழகு சாதனங்கள் லிப்ஸ்டிக் மற்றும் நெயில் பாலிஷ்தான். நெயில் பாலிஷின் தரம் அதன் நீடித்து நிலைக்கும் தன்மையைப் பொறுத்து அமைகிறது. நல்ல தரமான நெயில் பாலிஷ்கள் ஒரு வாரத்திற்கு அதே பளபளப்புடனும் பொலிவுடன் இருப்பதுடன் உரிந்தும் போகாது. இவ்வகை நெயில் பாலிஷ்களை தீட்டி நெடுநாட்கள் ஆனாலும் அது தனது மங்கிய நிறத்தையோ அல்லது நகங்கள் சிதைவுற்றதைப் போல் தோற்றம் தரும் மஞ்சள் நிறத்தையோ படியச் செய்வது இல்லை. 

இதையும் படியுங்கள்:
இந்தியாவில் மறைந்து தோன்றும் கடற்கரை எங்குள்ளது தெரியுமா?
லிப்ஸ்டிக்...

விலை குறைந்த நெயில் பாலிஷ்கள் நகம் மற்றும் சருமத்திற்கு கெடுதலை ஏற்படுத்துவதுடன், நகங்களின் க்யூட்டிகளில் நுண்மத் தொற்றின் பாதிப்பையும் உண்டாக்கி நகங்களை விழச் செய்து விடும். எனவே கட்டாயமாக இவற்றை பயன்படுத்தக் கூடாது.

நெயில் பாலிஷ் போடுவதற்கு முன் கை கால்களை இளஞ்சூட்டு நீரில் கழுவி துடைத்து பிறகு பாலிஷ் போட்டால் நகம் மின்னும். 

ஆலிவ் எண்ணெயை லேசாக சூடாக்கி விரல்களின் மீது தேய்த்து ஊற வைத்தால் நகங்கள் உடையாமல் இருக்கும். 

வெள்ளை ஜலட்டின் கால்சியம் சத்துள்ளது .இரண்டு ஸ்பூன் எடுத்து நான்கு ஸ்பூன் இளஞ்சூடான நீரில் கரைத்து விரல்களின் மீது பூசி தேய்த்து 10 நிமிடம் கழித்து கழுவி வர நகங்கள் உடையாது. 

நெயில் பாலிஷ்...
நெயில் பாலிஷ்...

நகங்களைச் சுற்றி தடித்த வலி இருந்தால் வெது வெதுப்பான நீரில் டெட்டால் பெப்பர்மின்ட் ஆவியில் சேர்த்து சிறிது நேரம் ஊற வைத்து கழுவினால் வலி நீங்கி நகம் சுத்தமாகும். இளம் சூடான நீரில் துளசி மற்றும் புதினாவை போட்டு விரல்களை 10 நிமிடம் வைத்தால் கிருமிகளில் இருந்து நகம் சுத்தமாகும். விரல்கள் மற்றும் நகங்கள் சொரசொரப்பு நீங்கி பளபளப்பாக நல்லெண்ணையை கொண்டு மசாஜ் செய்யலாம். 

வெற்றிலையில் சிறிது சுண்ணாம்பு கலந்து அரைத்து நகத்தில் வைத்து கட்டினால் நகத்தை சுற்றி வரும் புண் குணமாகும் .உடலில் கால்சியம் சத்து குறைவதால் நகங்கள் பாதிக்கப்படுகிறது. கால்சியம் மாத்திரை களையோ அல்லது கால்சியம் சத்து நிறைந்த உணவையோ உட்கொள்ள வேண்டும். முருங்கைக்கீரை பப்பாளி மாம்பழம் பேரிச்சம்பழம் போன்ற உணவுகளை எடுத்துக் கொண்டால் நகங்கள் நல்ல பாதுகாப்புடன் இருக்க உதவும்.

நெயில் பாலிஷ்...
நெயில் பாலிஷ்...

இது போன்ற பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுத்துக் கொண்ட பின் நகங்களை சுத்தம் செய்து நெயில் பாலிஷ் போட்டால் நகங்கள் மிகவும் அழகாகவும் பளபளப்புடனும் மின்னும். 

டார்க் ஷேடு உள்ள லிப்ஸ்டிக் பூசினால் உதடுகளை மெலிதாக்கி காட்டலாம். 

வெளிர் நிறமானவற்றை பூசினால் உதடுகள் கனமாக தோன்றும். உதடுகளின் வெளி ஓரங்களை லைட் ஷேடினாலும் மற்ற பாகத்தை டார்க் கலர் லிப்ஸ்டிக் கலரிலும் பூசலாம். மிகவும் பளபளப்பானதை உபயோகிக்காதிருப்பது நல்ல து. உதடுகளின் வெடிப்புகளை க்ரிம் பூசி மறைத்து லிப்ஸ்டிக் தடவலாம். லிப்ஸ்டிக் ரொம்ப நேரம் நிலைத்திருக்க முதலில் பவுடர் பூசி பிறகு சாயம் தீட்ட வேண்டும். ஒழுங்கற்ற உதடுகளுக்கு அதன் ஓரங்களை நேச்சுரல் கலர் ஷேடு உபயோகித்து அட்ஜஸ்ட் செய்யலாம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com