உங்கள் முக சருமத்தை பராமரிக்க தினமும் பயன்படுத்த வேண்டியவை...!

skin care
skin carepixabay.com
Published on

பொதுவாக பெண்கள் தினமும் வேலைக்கு செல்வதால் தினமும் முக சருமத்தை பராமரிக்க அவர்களுக்கு நேரம் கிடைப்பதில்லை. எப்போதாவது ஒரு நிகழ்ச்சிக்கு செல்ல வேண்டும் என்றால், அப்போதுதான் முகத்தை ஒரேடியாக அழகாக்கப் பார்ப்பார்கள். ஆனால் அப்படி செய்வதனால் எந்த பயனும் இல்லை. கொஞ்ச நேரத்திலேயே முகப்பொலிவு நீங்கிவிடும். அதேபோல் நமது முகத்தை தினமும் பராமரிப்பது மிக மிக அவசியம். ஏனெனில் வயசாக ஆக, கொலேஜன் மற்றும் எலாஸ்டின் ஆகியவை குறைய ஆரம்பிக்கும். கொலேஜன் மற்றும் எலாஸ்டின் முக சருமத்தின் ஆரோக்கியத்திற்கும் மென்மைக்கு உதவுகிறது. ஆகையால் உங்கள் சருமம் சுருக்கம் விழாமல் இருக்க, நிறம் மாறாமல் இருக்க, பொலிவு குறையாமல் இருக்க, சருமம் உலராமல் இருக்க , பருக்கள் வராமல் இருக்க முகத்தை அன்றாடம் பராமரிப்பது அவசியம்.

க்ளென்ஸர்:

முகத்தில் அதிகமாக மேக்கப் போட்டுவிட்டு அதனை களைக்கும்போது க்ளென்ஸர் பயன்படுத்த வேண்டும். இது  அந்த மேக்கப் சருமத்தில் இருக்கும் ஓட்டைக்குள் செல்லாமல் தடுக்க உதவும். இதனால் சருமம் பல விளைவுகளிலிருந்து பாதுகாக்கப்படும்.

எக்ஸ்ஃபோலியேஷன்:

வாரத்திற்கு இரண்டு முறை எக்ஸ்ஃபோலியேஷன் (Scrub Process) செய்ய வேண்டும். இது உங்கள் சருமத்தில் உள்ள இறந்த செல்களை நீக்க உதவும். ஆகையால் பருக்கள் வராமல் தடுத்து, சருமத்தை மென்மையாக வைத்துக்கொள்ள உதவும். மேலும் சூரிய ஒளியால் முகத்தில் ஏற்படும் நிற மாற்றத்தைத் தடுத்து பிரகாசமாக வைத்துக்கொள்ளும். உங்கள் சருமத்திற்கு ஏற்றவாறு எக்ஸ்ஃபோலியேஷன் தேர்ந்தெடுப்பது நல்லது. அதேபோல் எக்ஸ்ஃபோலியேஷன் செய்துவிட்டு மாய்ஸ்சரைசர் பயன்படுத்துவது அவசியம்.

எக்ஸ்ஃபோலியேஷன்
எக்ஸ்ஃபோலியேஷன்freepik

சன்ஸ்கிரீன்:

து பயன்படுத்தவில்லை என்றாலும் சரி கட்டாயம் தினமும் சன்ஸ்கிரீன் பயன்படுத்துவது அவசியம். ஏனெனில் சூரியனிலிருந்து வரும் யூவி கதிர் நம் ஆரோக்கியத்தை மட்டுமல்ல நமது சருமத்தையும் பாதிக்கும். அதனால் வெளியில் செல்பவர்கள் கட்டாயம் சன்ஸ்கிரீன் தினமும் பயன்படுத்த வேண்டியது அவசியம்.

இதையும் படியுங்கள்:
குளிர்காலத்தில் முகத்திற்கு ஆவி பிடிப்பதன் அவசியம் என்ன?
skin care

ரெட்டினால் :

முகத்திற்கு ரெட்டினால் சீரம் அல்லது க்ரீம் பயன் படுத்துவது சருமத்தில் கொலேஜனை அதிகரிக்கும். கொலேஜன் சருமத்தை வயதான தோற்றம் அடைவதிலிருந்து தடுக்கும். ரெட்டினால் சீரத்தில் ‘Non irritating’, ‘Non exfoliating’ என்று குறிப்பிட்டிருக்கிறதா என்று பார்த்து வாங்குவது அவசியம்.

ஹைலூரோனிக் அமிலம்:  

ருமம் உலராமல் இருக்க ஹைலூரோனிக் அமிலம் கொண்ட அழகுப் பொருட்களைப் பயன்படுத்துவது நல்லது. மாய்ஸ்சரைசரை விட இது அதிக நேரம் சருமம் உலராமல் இருக்க உதவும்.

ஹைலூரோனிக் அமிலம்
ஹைலூரோனிக் அமிலம்tamil.abplive.com

விட்டமின் A & விட்டமின் C: விட்டமின் A மற்றும் C ஆகியவற்றில் ஆன்டி ஆக்ஸிஜன் உள்ளதால், இது அனைத்து விதமான சரும சேதத்திலிருந்தும் தடுக்கும். கொலேஜன் அதிகரிக்கவும் சருமம் பள பளப்பாகவும் இருக்கும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com