சீப்பை பயன்படுத்தும் சரியான முறை இதுவே!

Comb
Comb
Published on

நாம் செய்யும் பல தவறுகளில் சீப்பை தவறாக பயன்படுத்துவதே முதல் தவறு.  நம்முடைய முடி மிகவும் உணர்திறன் மிக்கது. சற்று கவனமில்லாமல் சீவினால் கூட முடி உடையும் அபாயம் ஏற்பட்டுவிடும். சிக்கலாவதிலிருந்து முடியைக் காப்பாற்றும் முக்கிய பொறுப்பு சீப்புக்கே உள்ளது. சீப்பு நினைத்தால் கொத்து கொத்தாக முடியை இழுத்து சாகடித்துவிடும். ஆனால், அதற்கு முன்னர் சீப்பை உங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவருவது அவசியம்.

சீப்பில் சிக்கு மாட்டாமல் இருப்பதற்கு:

சிக்கு சீப்பில் மாட்டினாலோ அல்லது ஏற்கனவே முடி சிக்காக இருக்கிறது என்றாலோ முதலில் சீவாமல் அந்த சிக்கை எடுப்பதற்கான வழியை கையாளுங்கள். விரல்களை பயன்படுத்தி மென்மையாக முடிகளைப் பிரியுங்கள். முடிச்சை எளிதாக வெளியேற்ற ஸ்ப்ரேக்கள் கிடைக்கின்றன. இது முடிச்சை வெளியேற்ற செய்யும். நடுத்தர தடிமன் கொண்ட முடிக்கு லோஷன் பயன்படுத்தவும். முடி மிகவும் கரடு முரடாக இருந்தால் க்ரீம் வகைகள் பயன்படுத்தலாம்.

தலைக்கு குளிக்கும்போது:

தலைக்கு குளித்தப்பிறகு முடி சிக்கலாகாமல் இருப்பதற்கு, குளிப்பதற்கு முன் சீப்பை பயன்படுத்தி நன்றாக சிக்கு எடுத்துவிட வேண்டும். இதனால், முடி உடைதல் மற்றும் உதிர்தலை தடுக்கலாம்.

பெரிய சீப்பு:

சிக்கு முடியின் மீது ஸ்ப்ரே பயன்படுத்திய பிறகு முடிச்சு வெளியேற்ற அகலமான பல் கொண்ட சீப்பு பயன்படுத்தவும். இவை முடிச்சுகளை மென்மையாக அவிழ்க்க உதவும். எனினும் பிளாஸ்டிக் சீப்புகள் தவிர்க்க வேண்டும். அதற்கு மாற்றாக கூந்தல் ஈரமாக இருக்கும் போது ரப்பர் சீப்பையும் உலர்ந்த பிறகு மரச்சீப்பையும் பயன்படுத்துங்கள்.  

சிக்கு ஏற்பட்டிருக்கிறதா?

பெரிய முடிச்சுகள் இருக்கும் போது சீப்பு கொண்டு சீவினால் முடிக்கு சேதம் ஏற்படலாம். சிக்கு இருக்கும் இடங்களில் கை விரல்களை கொண்டு மென்மையாக முடியைப் பிரித்து மேலிருந்து கீழாக கைவிரல்களை இயக்க வேண்டும். சிக்கல் அதிகமாகி விரல்களால் விடுபட முடியவில்லை என்றால் அதிகம் சிரமப்பட வேண்டாம்.

இதையும் படியுங்கள்:
Curly Hair Tips: சுருட்டை முடியை பராமரிக்க சில டிப்ஸ்!
Comb

சுருள் முடி கொண்டவர்கள் கவனத்திற்கு:

1. சுருள் முடிக்கு ஆழமான கண்டிஷனர் பயன்படுத்தலாம்.

2.  மேலிருந்து கிழாக சீவ வேண்டாம். இது மேலும் சிரமத்தை உண்டாக்கும்.

3. சுருள் முடிக்கு எப்போதுமே பரந்த பல் கொண்ட சீப்பு அவசியம்.

4.  கீழிருந்து முடிச்சுகளை பிரித்து படிப்படியாக சீவுங்கள்.

5. உலர்ந்த முடியில் சீப்பு பயன்படுத்த வேண்டாம்.

இந்த முறைகளைப் பின்பற்றி விரல்கள் மற்றும் சீப்புகளை பயன்படுத்தி சிக்கலை சரி செய்யுங்கள். வாழ்க்கை சிக்கலைவிட கொடிய சிக்கல், இந்த முடி சிக்கல் என்பதை மறந்துவிடாதீர்கள்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com