சுருட்டை முடி என்பது இயற்கையின் அழகான படைப்புகளில் ஒன்று. இம்முடியானது பலருக்கு அழகான தோற்றத்தை கொடுத்தாலும், அதைப் பராமரிப்பது மிகவும் சவாலானது. சராசரி முடி பராமரிப்பு முறைகள் சுருட்டை முடிக்கு எப்போதுமே பொருந்தாது. எனவே, சுருட்டை முடியை ஆரோக்கியமாகவும் அழகாகவும் பராமரிக்க சில வழிமுறைகளை இப்பதிவில் பார்க்கலாம்.
சுருட்டை முடிகளில் அடர்த்தியான சுருள், மென்மையான சுருள், இறுக்கமான சுருள் என பல வகைகள் உண்டு. ஒவ்வொரு முடி வகைக்கும் தனித்தன்மை வாய்ந்த பராமரிப்பு தேவை.
ஈரப்பதத்தை தக்க வைத்தல்: சுருட்டை முடி எளிதாக வறட்சி அடையக்கூடியது. எனவே அதில் ஈரப்பதத்தை தக்க வைப்பது மிகவும் முக்கியம். ஷாம்பு பயன்படுத்தும் போது அதிக ரசாயனங்கள் இல்லாத மிதமான ஷாம்பு பயன்படுத்த வேண்டும். வாரத்திற்கு ஒன்று அல்லது இரண்டு முறை ஹேர் மாஸ்க் பயன்படுத்துங்கள். மேலும் முடியை ஈரப்பதத்துடன் வைத்துக் கொள்ள Leave-in கண்டிஷனர் பயன்படுத்தவும்.
சரியான ஸ்டைலிங்: சுருட்டை முடியை ஸ்டைல் செய்யும்போது அதிக வெப்பத்தைத் தவிர்க்க வேண்டும். குறிப்பாக ஸ்ட்ரெயிட்னர் சாதனங்களை குறைவாகவே பயன்படுத்தவும். ஈரமாக இருக்கும் முடியை அதிக அழுத்தம் கொடுத்து சீவ வேண்டாம். அகலமான பற்கள் கொண்ட சீப்பு பயன்படுத்தி முடியை பிரித்து, இயற்கையான முறையில் முடியை உலர்த்தவும்.
சரியான ப்ராடக்ட் தேர்வு செய்யவும்: சுருட்டை முடிக்கு பயன்படுத்துவதற்காகவே சில சிறப்பு தயாரிப்புகள் உள்ளன. எனவே, அவற்றிற்கு ஏற்ற Sulfate, Paraben இல்லாத ஷாம்பூ மற்றும் கண்டிஷனர் தேர்ந்தெடுத்து பயன்படுத்தவும்.
வாரத்தில் ஒருமுறையாவது புரோட்டின் டிரீட்மென்ட் செய்யுங்கள். தலைமுடியை ஆரோக்கியமாக பராமரிக்க ஹேர் ஜெல், கண்டிஷனர், Curl கிரீம் போன்ற ஸ்டைலிங் தயாரிப்புகளைப் பயன்படுத்தவும்.
சுருட்டை முடி பராமரிப்புக்கான சில கூடுதல் குறிப்புகள்:
உங்களது தலையணையை முடியுடன் அதிகம் உராய்வு ஏற்படுத்தாத பட்டு துணியால் செய்யப்பட்டதாக மாற்றவும். தூங்கும்போது, தலையில் ஸ்கார்ப் அல்லது மென்மையான தொப்பி அணிந்து தூங்கவும். இது தேவையில்லாத சிக்கல்களைத் தடுக்கும். வெளியே செல்லும்போது சூரிய ஒளியிலிருந்து முடியை பாதுகாக்க Sun Protection பயன்படுத்தவும். முடியின் முனைகளை அவ்வப்போது ட்ரிம் செய்து ஆரோக்கியமாக வைத்திருங்கள்.
மேலே குறிப்பிட்ட விஷயங்களை சரியாகப் பின்பற்றி உங்களது சுருட்டை முடியை ஆரோக்கியமாகவும் அழகாகவும் நீங்கள் வைத்திருக்க முடியும்.