
ஆண், பெண் என இருவருக்கும் முடி உதிர்தல், வலுவிழந்த முடி, வறண்ட முடி, பொடுகு மற்றும் நரை முடி போன்ற பிரச்சனைகள் இருக்கிறது. இன்றைய நாளில் பெரும்பாலானவர்கள் சந்திக்கும் முக்கிய பிரச்சினையாக இருந்து வருகிறது. இயற்கை முறையில் நரை முடியை கருப்பாக மாற்ற மருதாணி இலைகளை பயன் படுத்தலாம். மருதாணி இலை இளநரை மறையவும் கருமையான கூந்தலுக்காகவும் பயன்படுத்தப்படுகிறது.
கூந்தலுக்கு ஊட்டச்சத்து மற்றும் முடி வளர்ச்சியை அதிகரிப்பது உள்ளிட்ட பல நன்மைகளை மருதாணி வழங்குகிறது. கூந்தலுக்கு மருதாணி மட்டும் பயன்படுத்துவது கூந்தலில் சிவப்பு மற்றும் பழுப்பு நிற கறைகளை உண்டாக்கிவிடும். எனினும் ரசாயனங்கள் கலந்த கலவைக்கு பதிலாக மருதாணி பயன்படுத்துவது சிறந்தது.
கூந்தலுக்கு மருதாணி விலை மதிப்பற்ற இயற்கை பொருள். இதை சரியான முறையில் பயன்படுத்துவதன் மூலம் மென்மையான கருமையான கூந்தலைப் பெறலாம்.
மருதாணி இலையை அரைத்து அதன் விழுதை ஒரு கப்பில் எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும். அத்துடன் எலுமிச்சம் பழச்சாறு தேங்காய் எண்ணெய் மற்றும் நெல்லி முள்ளி பொடி மற்றும் தயிர் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும். இந்த கலவையை இரவு முழுவதும் ஒரு பாத்திரத்தில் மூடி வைத்துவிட வேண்டும். பின்னர் இதனை காலையில் எழுந்து தலைமுடியில் தேய்த்துக் கொள்ள வேண்டும். சுமார் ஒன்றரை மணி நேரம் வரை காய வைத்துவிட்டு பின்னர் சீயக்காய் தேய்த்து குளிக்க வேண்டும்.