
நம் சரும ஆரோக்கியத்திற்கு பலவித சத்துக்கள் காரணமாக உள்ளன. அதில் ஒன்றுதான் கொலாஜன் எனப்படுவது. உடலில் உள்ள ஒரு வகையான புரதம் கொலாஜன். (Collagen) இது சரும பளபளப்பிற்கு உதவுகிறது. எலும்பு மூட்டுக்கள், ரத்தக் குழாய்கள், செரிமானப் பாதையிலும் கொலாஜன் உற்பத்தி ஆகிறது .
இயற்கையாக நம் உடலில் இருக்கும் கொலாஜன் குறைந்தால் அதனால் பல பிரச்னைகளை உருவாக்கும். ஏன் கொலாஜன் சரியாக சுரக்க வேண்டும் என்ற எண்ணம் நமக்கு வரும். உடலில் கொலாஜன் குறைந்தால் சருமத்தில் சுருக்கம், முதுமை தோற்றம் உண்டாகும்.
கொலாஜன் சருமத்தை மிருதுவாகவும், அழகாகவும், ஈரப்பதத்துடனும் வைத்திருக்க உதவுகிறது. இந்த சத்து குறையும் போது சருமத்தில் சுருக்கங்கள், கண்களை சுற்றி சிறுசிறு கோடுகள் வர ஆரம்பிக்கும். சருமம் தொய்வடைந்து முதுமை தோற்றத்தை கொடுக்கும்.
சரியான உணவு பழக்கத்தை கடைபிடிக்க சருமம் நார்மலாக அதன் இயல்பில் இருக்கும். இந்த சத்து குறையும்போது மருத்துவரின் ஆலோசனைப்படி கொலாஜன் உற்பத்தியை அதிகரிக்க மாத்திரைகளை பரிந்துரைப்பார். குறிப்பிட்ட காலத்திற்கு மட்டுமே எடுக்க எந்தவித பக்க விளைவுகளையும் தராமல் நல்ல நிவாரணம் கொடுக்கும்.
கொலாஜனை அதிகரிக்கும் உணவுகளாக பச்சைக் காய்கறிகள், கீரைகள், ப்ரோக்கோலி, குடைமிளகாய், தக்காளி, பூண்டு போன்றவை பலன் கொடுக்கும். வைட்டமின் சி மிகுந்துள்ள சிட்ரஸ் பழங்கள், ஆரஞ்சு, எலுமிச்சை, பெர்ரி பழங்கள், கொய்யா போன்ற பழவகைகள் கொலாஜனை அதிகரிக்கும் தன்மை கொண்டவை. தொடர்ந்து இவற்றை எடுத்துக்கொள்ள சருமத்தில் நல்ல மாற்றம் தெரியும்.
வளரும் குழந்தைகளுக்கும், இளம் பெண்களுக்கும் மீன், முட்டை, சிப்பி மீன் போன்றவற்றை கொடுக்க கொலாஜன் உற்பத்தி அதிகரித்து சரும ஆரோக்கியத்தை மேம்படுத்தும். வெள்ளை உணவுகளை குறைத்து கொண்டு சமச்சீரான உணவுகளை அதிகம் எடுத்துக்கொள்ள சருமத்தில் உள்ள சுருக்கங்களை நீக்கி சரும பளபளப்பிற்கு உதவும்.
மருத்துவரின் ஆலோசனைப்படி கொலாஜன் கிரீம், லோஷனை எடுத்துக்கொள்ள சரும சுருக்கம், வறட்சியை போக்கி பொலிவு தரும். நல்ல தூக்கம், உடற்பயிற்சி, சமச்சீரான உணவு என நம் ஆரோக்கியத்தை பாதுகாக்க சருமத்தை இளமையாகவும் பளபளப்பாகவும் வைக்கும் கொலாஜன் போன்ற சத்துக்கள் சரியாக சுரந்து நம்மை இளமையாக வைத்திருக்கும்.