மேக்கப் போடாமலேயே மேக்கப் லுக் கிடைக்க இந்த சன்ஸ்க்ரீன் போதுமே!

Tinted sunscreen
Tinted sunscreen
Published on

மேக்கப், லேயரிங் என எதுவும் இல்லாமல், கொஞ்சமாக மேக்கப் போட்டதுபோல் எப்போதும் இருக்க வேண்டும் என்று நினைப்பவர்களுக்கே இந்த சன்ஸ்க்ரீன்.

பலர் அதிகப்படியான மேக்கப்களை விரும்பமாட்டார்கள். அதுவும் குறிப்பாக ஃபௌண்டேஷன் போடுவதை விரும்பவே மாட்டார்கள். அதிகம் மேக்கப் போட்டது தெரியாமல், அழகாக இருக்கவே பலர் விரும்புவார்கள். அந்தவகையில் உங்கள் சருமத்தை காக்கவும் அதேசமயம் சிறிதளவு மேக்கப் லுக்கையும் கொடுக்கவும் உதவும் ஒன்றுதான் tinted sunscreen. இந்தவகையான சன்ஸ்க்ரீனில்   zinc oxide, ironoxide மற்றும் titanium dioxide போன்ற தாதுக்கள் உள்ளன. சூரிய ஒளியிலிருந்து சருமத்தை பாதுகாப்பத்தில் iron oxide பெரிய பங்கு வகுக்கிறது.

இந்த சன்ஸ்க்ரீன் மற்ற சன்ஸ்க்ரீன்களைவிட மிகவும் தனித்துவமானது. இந்த சன்ஸ்க்ரீன் போடும்போது அது சருமத்தில் இருப்பதுபோலவே தெரியாது.

பலருக்கு தொல்லையாக இருக்கும் ஒரு விஷயம் சரும நிறத்திற்கு ஏற்ற மேக்கப் போடவில்லை என்றால், அது ஒரு மாதிரி பெயின்ட் அடித்த மாதிரி இருக்கும். குறிப்பாக டார்க் ஸ்கின் உள்ளவர்களுக்கு அந்தமாதிரி கவலைகள் ஏற்படும். இந்த தொல்லைகள் அனைத்திற்கும் ஒரு முற்றுப்புள்ளிதான் இந்த சன்ஸ்க்ரீன். சரும நிறத்திற்கு ஏற்ற tinted sunscreen ஐ  நீங்கள் பயன்படுத்தலாம். இதனால், மேக்கப்பை அள்ளிப் போட்டது போலவும் தெரியாது.

அதேசமயம் சூரிய ஒளியிலிருந்தும் உங்கள் சருமத்தையும் பாதுகாக்கலாம். டார்க் ஸிகின் உள்ளவர்கள் solasafe என்ற tinted sunscreen ஐ பயன்படுத்துவது நல்லது என்று சொல்லப்படுகிறது. அதேபோல் SPF 30 அல்லது அதற்கு மேல் குறிப்பிடபட்ட சன்ஸ்க்ரீன் வாங்குவது நல்லது. Universal அல்லது adaptive என்று குறிப்பிடப்பட்ட சன்ஸ்க்ரீன் அனைத்து நிறம் கொண்டவர்களும் பயன்படுத்தலாம். அந்த சன்ஸ்க்ரீனை முகத்தில் பயன்படுத்தும்போது உங்கள் நிறத்திற்கு ஏற்ற தோற்றத்தை கொடுக்கும்.

இதையும் படியுங்கள்:
பெண்கள் கூந்தலை பராமரித்து அழகாக வைத்திருப்பதற்கான அழகு குறிப்புகள்!
Tinted sunscreen

சன்ஸ்க்ரீனைப் பயன்படுத்தும் முறை:

சன்ஸ்க்ரீன் பயன்படுத்துவதற்கு முன் முகத்தை சுத்தமாக கழுவுவது நல்லது. முதலில் சிறிதளவு எடுத்துக்கொள்ளவும், அதனை முக்கியமான இடங்களில் அதாவது நெற்றியில் மூக்கின் மேற்பகுதி போன்ற இடங்களில் தடவவும். முகத்தின் அனைத்து இடங்களிலும் கழுத்திலும் முழுவதுமாக பயன்படுத்த வேண்டும். விட்டுப்போன பகுதிகளில் கொஞ்சமாக எடுத்து தேய்க்கலாம். ஒருவேளை இதற்கு பிறகு வேறு எதாவது மேக்கப் போடுவதாக இருந்தால், காய விடுவது அவசியம்.  

இவற்றை மனதில் வைத்து tinted sunscreen ஐ வாங்கிப் பயன்படுத்துங்கள். ஒருமுறை தோல் மருத்துவரிடம் ஆலோசித்து வாங்குவது நல்லது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com