கண்களைச் சுற்றியுள்ள கருவளையம் நீங்க..!

Dark Circles
Dark Circles
Published on

முகத்துக்குக் கண்களின் பிரகாசம் முக்கியம். கண்களைச் சுற்றி ஏற்படும் கருவளையம் முகத்தின் அழகையே கெடுத்துவிடும். கண்களைச் சுற்றி ஏற்படும் கருவளையமானது, பரம்பரையாக வருவது, ஓய்வின்மையால் வருவது, ரத்தம் அளவு குறைபாட்டால் வருவது என மூன்று காரணங்களால் ஏற்படும்.

இரும்புச் சத்து நிறைந்த உணவுகளைத் தினமும் உணவில் சேர்த்துக்கொள்வதால்  இதனை சரிசெய்ய முடியும். உடனடி தீர்வு வேண்டும் என நினைப்பவர்கள், மருத்துவரின் உதவியுடன் இரும்புச் சத்து மாத்திரைகளைப் பயன்படுத்தலாம். இதை முழுவதுமாகக் குணப்படுத்த முடியாது எனினும், கருவளையம் அதிகமாகத் தெரிவதை குறைக்கலாம். 

புதினா சாறு, கேரட் சாறு இரண்டையும் சம அளவில் எடுத்து ஒன்றாகக் கலந்து, தினமும் காலை மற்றும் மாலையில் கண்களைச் சுற்றி அப்ளை செய்துகொண்டால், கருமை மேலும் பரவுவதைத் தவிர்க்கலாம்.

வெள்ளைத் தாமரை இலையுடன், 10 டீஸ்பூன் விளக்கெண்ணெய் சேர்த்து மிக்ஸியில் பேஸ்ட்டாக அரைத்துக்கொள்ளவும். இத்துடன் 2 டீஸ்பூன் நாட்டுச்சர்க்கரை கலந்து, கண்களைச் சுற்றித் தேய்த்து, 10 நிமிடம் கழித்து கழுவிவிட, கோலிக்குண்டாகக் கண்கள் மிளிரும்.

க்ரீன் டீ பையினை, அரை டம்ளர் தண்ணீரில் ஊறவிடவும். இதிலிருந்து கிடைக்கும் திக்கான டிக்காஸனுடன், 2 டீஸ்பூன் சர்க்கரை கலக்கவும். ஒரு மென்மையான காட்டன் துணியை இதில் நனைத்து, கண்களின் மேலே போட்டு, 10 நிமிடம் கண்களுக்கு ஓய்வு கொடுக்கவும். இதுபோல தினமும் செய்துவர, கண்கள் பிரகாசமாக இருக்கும்.

விட்டமின் ஈ கேப்சூலை வாங்கி, அதில் உள்ள எண்ணெய்யுடன் சம அளவில் பாதாம் எண்ணெய் சேர்க்கவும். இதை, மோதிர விரலில் தொட்டு மெதுவாகக் கண்களைச் சுற்றி மசாஜ் செய்தால், கருவளையம் நீங்கும்.

4 டீஸ்பூன் அதிமதுர பொடியுடன், 3 டீஸ்பூன் விளக்கெண்ணெய், 3 சொட்டு தேன் கலந்து கண்களைச் சுற்றி பேக் செய்துகொள்ளவும். அரை மணி நேரம் கழித்து கண்களைக் கழுவ, கருமை நீங்குவதுடன். கண்கள் அழகால் மிளிரும்.

அவகேடோ பழத்தின் சதைப் பகுதி, வாழைப்பழம் இரண்டையும் மிக்ஸியில் அரைத்து பேஸ்ட் செய்துகொள்ளவும். இத்துடன், 2 சொட்டு கேரட் ஆயில் சேர்த்து, கண்களைச் சுற்றி பேக் போட்டுக்கொள்ளவும். அரை மணி நேரத்துக்குப் பிறகு, கண்களைக் குளிர்ந்த நீரால் கழுவ, இமைகள் பிரகாசமாக இருக்கும்.

இதையும் படியுங்கள்:
கண்களுக்கு கீழ் வரும் கருவளையத்தைக் குறைக்க பயனுள்ள 6 டிப்ஸ்!
Dark Circles

துருவிய அன்னாசிப் பழத்தை ஒரு சுத்தமான துணியில் இறுக்கிப் பிழிந்து சாறு எடுக்கவும். இதில், ஒரு டீஸ்பூன் சோளமாவு சேர்த்துக் கரைத்து, ஒரு டீஸ்பூன் விளக்கெண்ணெய் சேர்த்து அடுப்பில் வைத்து லேசாகச் சூடேற்றவும். பிறகு, அடுப்பிலிருந்து இறக்கி ஆறியதும், ஒரு சொட்டு தேன், 3 சொட்டு எலுமிச்சை சாறு கலந்து, மோதிர விரலில் தொட்டு கண்களைச் சுற்றி லேசாக மசாஜ் செய்யவும். பிறகு, ஒரு சுத்தமான துணியைக் குளிர்ந்த நீரில் நனைத்து, கண்களின் மீது போட்டுக்கொண்டு சிறிது நேரம் ஓய்வு எடுக்கவும். வாரம் ஒருமுறை இதைச் செய்ய, கண்கள் அழகில் மிளிரும். கருவளையம் காணாமல் போகும்.

எலுமிச்சை இலையை அரைத்து சாறு எடுக்கவும். இத்துடன் சாதம் வடித்த கஞ்சி, கிளிசரின், விளக்கெண்ணெய், தேன் ஆகியவற்றைச் சம அளவில் கலந்து, கண்களில் தேய்த்து மசாஜ் செய்தாலும், கண்களைச் சுற்றியுள்ள கருவளையம்  நீங்கும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com