பட்டுப்புடவை எத்தனை வருஷம் ஆனாலும் புதுசு போலவே இருக்க சில டிப்ஸ்!

Tips to keep the silk saree as new
Tips to keep the silk saree as new
Published on

பட்டுப்புடவை என்றாலே அது பெண்களின் அடையாளம். அது வெறும் உடை மட்டுமல்ல, தமிழர்களின் கலாச்சாரம், பாரம்பரியம். காலங்கள் மாறினாலும் பட்டுப் புடவையின் மீதான ஈர்ப்பு இன்றளவும் குறையவில்லை. ஆனால், இந்த அழகான பட்டுப் புடவையை எப்படி நீண்ட காலம் புதுமையாக வைத்திருப்பது என்பது பலருக்கும் ஒரு கேள்வியாகவே இருக்கும். இந்தப் பதிவில் பட்டுப்புடவையை எப்படி நீண்ட காலம் புதுமையாக வைத்திருப்பது என்பது குறித்து சில பயனுள்ள குறிப்புகளைப் பார்க்கலாம். 

பட்டுப்புடவையின் சிறப்புகள்: பட்டுப்புடவைகள் தனித்துவமான இயற்கை இழைகளால் ஆனவை. இவை மிகவும் மென்மையாகவும் பளபளப்பாகவும் இருக்கும். பட்டுப்புடவைகள் வெப்பத்தை எளிதில் கடத்தாது என்பதால், கோடை காலத்தில் இதமாக இருக்கும். இவை நீண்ட காலம் உழைக்கும் தன்மை கொண்டவையாக இருந்தாலும் சரியாக பராமரிக்காவிட்டால் அவற்றின் அழகு குறைந்துவிடும். 

பட்டுப்புடவையை பராமரிப்பதற்கான முறைகள்: 

பட்டுப்புடவைகளை நீங்களாகவே வீட்டில் துவைப்பதைத் தவிர்க்க வேண்டும். அதன் பளபளப்பு என்றும் மங்காமல் இருக்க ஒரு நம்பகமான ட்ரை கிளீனரிடம் கொடுத்து துவைக்கவும். ஒருவேளை நீங்களே துவைக்க விரும்பினால், பட்டுப் புடவையின் துணி துவைக்கும் குறிப்புகளை கவனமாக படிக்கவும். 

பட்டுப்புடவையை துவைப்பதற்கு மென்மையான டிடர்ஜென்ட் மட்டுமே பயன்படுத்தவும். அதிகமாக அழுத்தி தேய்க்காமல் மென்மையாக கையாளுவது நல்லது. துணியை துவைத்ததும் அதிகப்படியான நீரை லேசாகப் பிழிந்து நிழலில் உணர்த்தவும். குறிப்பாக, பட்டுப் புடவைகளை உலர்த்தும்போது ஒரு தட்டையான மேற்பரப்பில் விரித்து உலர்த்தவும். இது பட்டுப் புடவையில் அதிகப்படியான சுருக்கங்கள் இல்லாமல் பார்த்துக் கொள்ளும். 

அடுத்ததாக பட்டுப் புடவைகளை அயன் செய்யும்போது குறைந்த வெப்பநிலையை பயன்படுத்தவும். அயன் செய்யும்போது பட்டுப் புடவையின் மீது ஒரு துணியை போட்டு அயன் செய்வது நல்லது. இது பட்டுப்புடவை சேதமடையாமல் பார்த்துக்கொள்ளும். 

இதையும் படியுங்கள்:
உங்கள் உடல் பட்டு போல மாற, தினமும் இதைப் பயன்படுத்தினாலே போதும்! 
Tips to keep the silk saree as new

பின்னர் பட்டுப் புடவைகளை வீட்டில் சேமிக்கும் இடத்தை சுத்தமாக வைத்துக் கொள்ளுங்கள். அதை மடித்து பருத்தி துணிகளுக்கு இடையே வைத்து சேமித்தால் அதன் தன்மை மங்காமல் இருக்கும். அதிகப்படியான பட்டுப் புடவைகளை ஒன்றாக சேர்த்து வைக்க வேண்டாம். பூச்சிகளிடமிருந்து பாதுகாக்க ரசக்கற்பூரம் பயன்படுத்துவது நல்லது. 

பட்டுப்புடவை என்பது ஒரு அழகான மதிப்புமிக்க உடை. சரியான பராமரிப்பு முறையைக் கையாண்டால் பட்டுப்புடவையை நீண்ட காலம் புதுமையாக வைத்திருக்க முடியும். மேற்கண்ட குறிப்புகளைப் பின்பற்றுவதன் மூலம் உங்கள் பட்டுப்புடவைகளை எப்போதும் நீங்கள் புதிது போலவே வைத்திருக்கலாம். 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com