புடவை கட்டினால் ஒல்லியாகத் தெரிவதற்கு சில டிப்ஸ்! 

Women in Saree.
Tips to Look Slim and Elegant in a Saree
Published on

இந்தியப் பெண்கள் புடவை கட்டுவதே அழகுதான் என்றாலும், புடவை கட்டிய பிறகு கூடுதல் அழகுடன் தெரிவதற்கு சில விஷயங்களை நாம் பின்பற்ற வேண்டியது அவசியம். சிலர் புடவை கட்டியதும் குண்டாக இருப்பது போல் உணர்வார்கள். ஏதேனும் சுப நிகழ்ச்சிகளில் புடவை கட்டி கலந்து கொள்ளும்போது புகைப்படம் எடுத்தால், ஒல்லியாக இருக்க வேண்டும் என்பது பலரது ஆசையாக இருக்கும். இந்தப் பதிவில் நீங்கள் புடவை கட்டினாலும் ஒல்லியாகத் தெரிவதற்கு சில தந்திரங்களைப் பற்றி தெரிந்து கொள்ளலாம்.  

  • நீங்கள் புடவை கட்ட ஆசைப்படுகிறீர்கள் என்றால் முதலில் சரியான துணியை தேர்ந்தெடுக்கவும். அதிக எடையில் இல்லாமல் மெலிதாக இலகு ரக துணிகளைத் தேர்வு செய்யவும். அது எளிதாக உடலோடு ஒட்டிக் கொள்ளும். உங்களது உருவத்தில் எவ்வித மாற்றத்தையும் ஏற்படுத்தாது.

  • அடுத்ததாக, உங்களது புடவை அடர் நேரத்தில் இருக்கும்படி தேர்ந்தெடுங்கள். இது உங்களுக்கு மெலிதான தோற்றத்தைக் கொடுக்கும். எனில் அடர் நிறங்கள் நீங்கள் மெலிதாக இருப்பது போன்ற மாயத் தோற்றத்தை ஏற்படுத்துவதால், புடவை கட்டினாலும் மெலிதாக இருப்பது போல தோன்றுவீர்கள். 

  • எப்போதுமே புடவையில் மேலிருந்து கீழாக பிரிண்ட் செய்யப்பட்ட வடிவங்கள் இருக்கும்படி பார்த்துக் கொள்ளுங்கள். இது உங்களை உயரமாகவும் மெலிதாகவும் காட்ட உதவும். ஹரிசாண்டல் கோடுகள் அல்லது பிரின்டிங் செய்யப்பட்ட புடவைகள் உங்களை குண்டாக தெரியவைக்கலாம். 

  • உங்களது பிளவுஸ் எப்போதும் சரியாக பொருந்தும்படி இருப்பதை உறுதி செய்யுங்கள். உங்களது புடவையின் அழகை நேர்த்தியாக எடுத்துக்காட்டுவது பிளவுஸ்தான். இது உங்களது ஒட்டுமொத்த தோற்றத்தை மேம்படுத்துவது மட்டுமின்றி, ஒல்லியாக தெரிவதற்கும் உதவும். 

  • புடவை கட்டுவதில் சரியான ஸ்டைலை தேர்ந்தெடுங்கள். ஸ்லிம் பிட் ஸ்டைலை தேர்வு செய்து, இருப்பைச்சுற்றி அதிகப்படியான துணிகள் சுற்றுவதைத் தவிர்க்கவும். இது தேவையில்லாமல் உங்களது உடல் அளவை பெரிதாக்கிக் காட்டலாம். 

  • உங்களது இடுப்பை மெலிதாகவும் கச்சிதமாகவும் காட்டுவதற்கு, ஒட்டியானம் இருந்தால் அணிந்து கொள்ளுங்கள். இது உங்களை ஒல்லியாகவும், புடவை கலையாமலும் பார்த்துக் கொள்ளும்.

  • புடவை கட்டும்போது ஹை ஹீல்ஸ் அணிந்தால் உங்களது உயரத்தைக் கூட்டி உடல் தோற்றத்தை மெலிதாகக் காட்டலாம். உங்களது புடவையின் நிறம் மற்றும் தோற்றத்தை ஒத்துப்போகும் படியான ஹை ஹீல்ஸ் காலணிகளைத் தேர்வு செய்யவும். 

  • உங்களது பிளவுஸ் நெக் லைனை கவனிக்கவும். V போன்ற வடிவத்தில் நெக்லைன் இருந்தால், அது நீங்கள் ஒல்லியாக இருப்பது போன்ற மாயத் தோற்றத்தை உருவாக்கி, பிறரது கவனத்தை ஈர்க்க உதவும். உயரமான நெக்லைன் கொண்ட பிளவுஸ்களைத் தவிர்க்கவும். 

  • இறுதியாக, நீங்கள் சேலை அணியும் போது எப்போதும் நல்ல தோரணையை பராமரிக்கவும். நல்ல தோரணை உங்களை நம்பிக்கையுடனும், ஒல்லியாகவும் காட்டும். இதன் மூலமாக பிறரது கவனத்தை நீங்கள் அதிகமாக ஈர்த்து, புடவையில் கனக்கச்சிதமான தோற்றத்தில் இருக்கலாம். 

இதையும் படியுங்கள்:
வெற்றி தள்ளிப்போகிறதா? இந்த 5 விஷயங்களை சரி செய்து கொள்ளுங்கள்!
Women in Saree.

இந்த வழிமுறைகளைப் பின்பற்றி, புடவை அணியும்போது நீங்கள் ஒல்லியான தோற்றத்தைப் பெற முடியும். இது தவிர, முறையான உடற்பயிற்சி செய்து நீங்கள் ஒல்லியாக இருந்தாலே, எப்படி புடவை கட்டினாலும் வேற லெவல் லுக்கில் இருப்பீர்கள். எனவே புடவையை வித்தியாசமாக கட்டி ஒல்லியாக தெரிவதற்கு பதிலாக, முறையான உணவுக் கட்டுப்பாடு உடற்பயிற்சி செய்து, உடல் எடையைப் பராமரிப்பது உங்களது ஆரோக்கியத்திற்கும் நல்லது. 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com