வெற்றி தள்ளிப்போகிறதா? இந்த 5 விஷயங்களை சரி செய்து கொள்ளுங்கள்!

Motivation image
Motivation imageImage credit - pixabay.com
Published on

வ்வொரு மனிதரும் தன் முயற்சியில் வெற்றி பெறுவதைத்தான் விரும்புவார். ஆனால் அறிந்தோ அறியாமலோ செய்யும் சில தவறுகளால் வெற்றி கிடைக்காமல் போகிறது. அவை என்ன எனபது பற்றி இந்தப் பதிவில் பார்க்கலாம்.

1. தள்ளிப் போடும் குணம்;

எந்த வேலையையும் தள்ளிப் போடுதல் நல்லதல்ல. கடைசி நிமிடம் வரை  ‘’அதை அப்புறம் பார்த்துக்கலாம்’’ என வேலையை செய்யாமல் தள்ளிப் போடும் பழக்கம் நிறைய பேருக்கு இருக்கிறது. இது ஒரு வகையான மன அழுத்தத்தை உண்டாக்கி முன்னேற்றத்தை தடுக்கிறது. குற்ற உணர்ச்சியை அதிகரிக்கிறது. எனவே வேலையை குறித்த நேரத்தில் செய்து முடிப்பது நல்லது. மேலும் சேர்த்து வைத்து எல்லாவற்றையும் ஒரே நேரத்தில் செய்யும்போது அது மனது மற்றும் உடலின் ஆற்றலை முழுவதும் பாதிக்கும். 

2. எதிர்மறை  எண்ணங்கள்;

‘’நான் இந்த காரியத்தை செய்ய லாயக்கற்றவன். என்னால் இது முடியாது’’ என்பது போன்ற எதிர்மறை எண்ணங்களை முதலில் தகர்த்து எறிய வேண்டும். இவை ஒரு மனிதனை செயல்பட விடாமல் தடுத்து முடக்கி விடும். எண்ணங்களே ஒரு மனிதனுக்கு செயல் வடிவம் தர உதவுகிறது. எனவே எதிர்மறை எண்ணங்களை முதலில் மனதில் இருந்து விரட்டி அடிக்க வேண்டும் அதுபோல தன்னை பற்றி எதிர்மறையாக சிந்திப்பதும் கூடாது. 

3. அரைகுறையாக ஒரு வேலையை செய்து முடிப்பது;

ஒரு வேலையை செய்து முடிக்காமல் அடுத்த வேலைக்கு செல்வது தவறான ஒரு காரியமாகும். ஒரு வேலையை செய்ய எடுத்துக் கொள்ளும் போது அதை முழுமூச்சாக முடித்துவிட்டுத்தான் அடுத்த வேலை செய்ய தொடங்க வேண்டும். அரைகுறையாக ஒரு வேலையை செய்து விட்டு,  அதை அப்படியே விடும்போது அது முழுமை அடையாமல் போகும். இது அடுத்த வேலை செய்வதையும் தடுக்கும். செய்ய வேண்டிய வேலைகளைப் பட்டியலிட்டு அந்த பணியை விரைந்து செய்துவிட்டுத்தான் அடுத்த வேலைக்கு செல்ல வேண்டும்.

4. கவனச்சிதறல்கள்;

 ஒரு மனிதனின் தோல்விக்கு முக்கிய காரணமாக கவனசிதறல்களை சொல்லலாம். எப்போதும் செயலில் இறங்கும்போது மனமும் உடலும் ஒரே புள்ளியில் குவிந்து செய்யும்போது தான் அந்த வேலை முழுமையாகும். மனது கவனசிதறல்களுக்கு உள்ளாகும் போது அது செய்யும் வேலையை தடுக்கிறது. எனவே வீண் அரட்டை அடிப்பது சமூக வலைதளங்களில் மூழ்குவது போன்றவற்றை தள்ளி வைத்துவிட்டு செயல்பட வேண்டும்.

இதையும் படியுங்கள்:
சருமத்திற்கு எக்ஸ்பாலியேட் செய்வது பற்றித் தெரியுமா? வாங்க தெரிஞ்சுக்கலாம்!
Motivation image

5. ஓய்வு இன்றி வேலை செய்வது;

ஓய்வு இல்லாமல் செயல்படும் போது எரிச்சல், மன அழுத்தம், விரக்தி, எதிலும் கவனமின்மை போன்ற குறைபாடுகள் தோன்றும். உடல் மற்றும் மன பேட்டரிகளை ரீசார்ஜ் செய்வதற்கு வேலையில்லா நேரம் அவசியம். இது உடலுக்கு, மனதிற்கு ஓய்வெடுக்கவும், புத்துணர்ச்சி பெறவும், வலுவாக மீண்டும் செயல்படவும் அனுமதிக்கிறது. எனவே நீங்கள் வெற்றிக்காக பாடுபடும் போது போதுமான ஓய்வு எடுப்பது அவசியம். வேலை நாளில் வழக்கமான இடைவெளிகளை எடுங்கள். உங்கள் வார இறுதி நாட்களை நீங்கள் விரும்பும் காரியங்களில் செலவிடுங்கள்.

இந்த ஐந்து விஷயங்களை சரி செய்து கொண்டால் வெற்றி தேடி வரும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com