தினமும் புருவங்களைப் பராமரிக்க நீங்கள் செய்ய வேண்டியது என்ன தெரியுமா?

Maintain your Eyebrows.
Maintain your Eyebrows.Imge credit: amar ujala

புருவங்கள் நம் முகத்தை அழகாகக் காண்பிக்க மிகவும் முக்கியமானது. பியூட்டி பார்லர் சென்றாலும், வீட்டிலேயே பராமரித்தாலும் புருவங்கள் பரமாரிப்பதைப் பற்றி சில விஷயங்கள் தெரிந்துக்கொள்வது அவசியம்.

சரியான வடிவமைப்பு: புருவ வடிவமைப்பு என்பது முகத்தின் வடிவமைப்பிற்கு ஏற்ற வகையில் தேர்ந்தெடுக்கும் ஒன்று. ஆகையால் உங்கள் முகம் சதுர வடிவமா, ஹார்ட் வடிவமா, நீள் வட்ட வடிவமா, வட்ட வடிவமா என்பதை தெரிந்துக்கொண்டு அதற்கேற்றவாறு புருவத்தின் வடிவைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்.

முடி அகற்றுவதில் கவனம்: உங்களுக்கு இயற்கையாகவே  ஒரு புருவ வடிவம் இருக்கும். உங்களுடைய முகத்திற்கு அதுதான் சரியானதாகவும் இருக்கும். ஆகையால் அதனை முழுவதுமாக மாற்றிவிடாமல், சுற்றி வளரும் தேவையற்ற  முடிகளை மட்டும் கவனமாக அகற்றிவிட வேண்டும். ஒருவேளை உங்கள் முக வடிவத்திற்கு ஏற்ற வேறு ஒரு புருவ வடிவத்தை மாற்றி வைத்துக்கொள்ள வேண்டுமென்று ஆசைப்பட்டால், அதற்கேற்றவாறு முடிகளை கவனத்துடன் அகற்ற வேண்டும்.

ஸ்பூலி பிரஷ்: புருவங்களுக்கான ஸ்பூலி பிரஷ் பயன்படுத்தி தினமும் புருவ முடிகளை சீர் செய்யவும். மேலும் எண்ணெய் சேர்த்து ஸ்பூலி பிரஷ் பயன்படுத்தினால் முடிகள் சீராக இருப்பதோடு அடர்த்தியாக வளரவும் உதவும். அதன்பிறகு நீங்கள்  தேவையற்ற முடிகளை அகற்றிவிடலாம்.

புருவ முடிக் கொட்டினால்: இந்த புருவ முடிகள் கொட்டி சில இடங்களில் மட்டும் முடி இல்லாமல் இருந்தால் அதற்கு ஐப்ரோ பென்சில் பயன்படுத்தி நிரப்பலாம். உங்கள் புருவ முடிக்கு ஏற்ற நிறத்தைப் பார்த்து வாங்குவது நல்லது.

ஜெல் பயன்படுத்தலாம்: எப்படி தலை முடி சீராக இருப்பதற்கு ஜெல் உதவுகிறதோ அதேபோல் புருவங்கள் சீராக இருப்பதற்கும் ஜெல் உதவுகிறது. இது புருவ முடிகளை நேர்த்தியாக வைக்கிறது. புருவ முடி சீரமைப்பிற்கு எண்ணெய் அல்லது ஜெல் பயன்படுத்திக் கொள்ளலாம்.

இதையும் படியுங்கள்:
பழங்காலம் முதல் லேட்டஸ்ட் டிரெண்ட் வரை, தோடுகளில் இத்தனை வகைகளா?
Maintain your Eyebrows.

காயங்கள் இல்லாமல் பார்த்துக்கொள்ளவும்: புருவங்களின் தேவையற்ற முடிகளை எடுப்பதற்கு கூர்மையான பொருட்களை கவனமாக பயன்படுத்தவும். மிகவும் அழுத்தி பயன்படுத்தினீர்கள் என்றால் அது காயத்தை ஏற்படுத்தி தழும்பு விழ காரணமாகிவிடும். அதேபோல் இப்போது பலரும் ஃபேஷனிற்காக வேண்டுமென்றே புருவங்களில் கோடுகளைப் போட்டுக்கொள்கின்றனர். அதனை முற்றிலுமாகத் தவிர்ப்பது நல்லது.

புருவ எலும்பை முன்னிலைப்படுத்தவும்: உங்கள் புருவங்களை உயர்த்தி காண்பிப்பதற்கு புருவ எலும்பு இருக்கும் இடத்தில் ஹைலைட் அல்லது லேசான ஷேடோவை பயன்படுத்துங்கள். இது உங்கள் புருவத்தை அழகாக எடுத்து காண்பிக்கும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com