Tips to tighten wrinkles.
Tips to tighten wrinkles.

முகச்சுருக்கங்களை இறுக்கமாக்க சில டிப்ஸ்! 

Published on

முகச்சுருக்கங்கள் என்பது நமக்கு வயதானதற்கான ஒரு இயற்கையான அறிகுறியாகும். இருப்பினும் சில காரணிகள் இந்த சுருக்கங்களை அதிகப்படுத்தி, இளம் வயதிலேயே வயதான தோற்றத்தை ஏற்படுத்தலாம். இந்தப் பதிவில் முகச்சுரக்கங்களுக்கு வழிவகுக்கும் முக்கிய காரணிகளைத் தெரிந்து கொண்டு அவற்றை தடுப்பதற்கு உதவும் சில நடைமுறைகள் பற்றி முழுமையாகப் பார்க்கலாம். 

முகச்சுருக்கங்களுக்கு வழிவகுக்கும் காரணிகள்: 

  • நாம் வயதாகும்போது சருமத்தின் கொலாஜன் மற்றும் எலாஸ்டின் உற்பத்தி குறைகிறது. இது சருமத்தை மென்மையாக்கவும் சுருக்கங்கள் ஏற்படவும் வழி வகுக்கும். 

  • சூரிய ஒளியில் உள்ள புற ஊதாக்கதிர்கள் சருமத்தில் சேதத்தை ஏற்படுத்தி, சுருக்கங்கள் மற்றும் நிறமாற்றத்தை ஏற்படுத்தக்கூடும். 

  • அதிகமாக புகைபிடித்தல் சருமத்திற்கு ஆக்ஸிஜனேற்ற சேதத்தை ஏற்படுத்தி நுண்ணிய கோடுகள் மற்றும் சுருக்கங்களை அதிகரிக்கலாம். 

  • சிலருக்கு இயற்கையாகவே அதிகமாக முக பாவனைகள் செய்வதால் நெற்றியில் சுருக்கங்கள், சிரிக்கும் போது கோடுகள் போன்ற சுருக்கங்கள் உருவாக்கலாம். இது தவிர, சிலருக்கு மரபணு காரணமாகவும் இளமையிலேயே முகச்சுருக்கம் ஏற்படும். 

  • மேலும், சரியான சருமப் பராமரிப்பு இல்லாததால் சருமம் வறண்டு, விரைவில் மென்மையாகி, சுருக்கங்களை அதிகரிக்கக்கூடும். 

முகச்சுருக்கங்களைத் தடுக்கும் நடைமுறைகள்: 

சூரிய ஒளியில் இருந்து உங்கள் சருமத்தை பாதுகாப்பது முகச்சுருக்கங்களை தடுப்பதற்கான மிகவும் முக்கியமான வழியாகும். எனவே தினசரி வெளியே செல்லும்போது SPF 30 அல்லது அதற்கு மேற்பட்ட SPF அளவு கொண்ட சன் ஸ்கிரீனைப் பயன்படுத்தவும். 

அதிகமாக புகைபிடிப்பது சருமத்திற்கு தீங்கு விளைவித்து சுருக்கங்களை அதிகரிக்கும் என்பதால், உடனடியாக புகைப்பிடிக்கும் பழக்கத்தை நிறுத்துவது நல்லது. இது சருமத்தின் ஆரோக்கியத்தை மேம்படுத்தி சுருக்கங்கள் குறைய உதவும். 

உங்கள் சரும வகைக்கு ஏற்ற முகப்ப பராமரிப்பு பொருட்களை தொடர்ச்சியாக பயன்படுத்துங்கள். ஒரு மென்மையான கிளென்சர், மாய்ஸ்ரைசர் மற்றும் சன் ஸ்கிரீன் ஆகியவற்றை தினமும் பயன்படுத்தவும். வாரத்திற்கு ஒரு முறை ஸ்கிரப் செய்து, ஃபேஸ் மாஸ்க் போன்றவற்றை பயன்படுத்துவதன் மூலம் சருமத்தை என்றும் புத்துணர்ச்சியுடன் வைத்திருக்கலாம். 

இதையும் படியுங்கள்:
Pink Sauce Pasta: குழந்தைகள் விரும்பி சாப்பிடும் சூப்பர் உணவு! 
Tips to tighten wrinkles.

இது தவிர சத்தான உணவுகளை உட்கொண்டு போதுமான தூக்கம் மற்றும் உடற்பயிற்சி ஆகியவற்றை செய்து வந்தாலே சருமத்தின் ஆரோக்கியம் மேம்படும். இதனால் சருமத்தில் சுருக்கங்கள் ஏற்படாமல் பார்த்துக் கொள்ளலாம். அதேநேரம் ஏற்கனவே இருக்கும் சுருக்கங்களைக் குறைக்கவும் ஆரோக்கியமான வாழ்க்கை முறை மாற்றங்கள் உதவும். 

இறுதியாக, நீங்கள் முயற்சிக்கும் எந்த யுக்திகளும் உங்களுக்கு பலனளிக்கவில்லை எனில், ஒரு சுகாதார நிபுணரை அணுகி மருத்துவ சிகிச்சை பெறுவது நல்லது. இதன் மூலமாகவும் விரைவாக உங்களது முகத்தில் உள்ள சுருக்கங்களை நீங்கள் போக்க முடியும்.  

logo
Kalki Online
kalkionline.com