Pasta
Pink Sauce Pasta

Pink Sauce Pasta: குழந்தைகள் விரும்பி சாப்பிடும் சூப்பர் உணவு! 

Published on

நீங்கள் கிரீமி மற்றும் சுவையான பாஸ்தா உணவுகளை விரும்பி சாப்பிடுபவராக இருந்தால் Pink Sauce Pasta ரெசிபியை கட்டாயம் முயற்சிக்க வேண்டும். தக்காளி சாஸ் மற்றும் கிரீமின் சூப்பரான கலவையில் செய்யப்படும் இந்த சுவையான பாஸ்தா ரெசிபி, உங்களுக்கு ஒரு திருப்திகரமான உணர்வை ஏற்படுத்தும். உங்களுக்கு சமைக்கத் தெரியவில்லை என்றாலும் பரவாயில்லை, இந்த ரெசிபியை எளிதாக செய்துவிடலாம். 

தேவையான பொருட்கள்:  

  • 250 கிராம் பாஸ்தா 

  • ஸ்பூன் ஆலிவ் எண்ணெய் 

  • 2 பல் பூண்டு 

  • ஒரு வெங்காயம் 

  • 1 கப் தக்காளி பேஸ்ட் 

  • 1/2 கப் கிரீம் 

  • உப்பு தேவையான அளவு 

  • சிறிதளவு மிளகுத்தூள் 

  • மேலே அழகுபடுத்த சீவிய சீஸ்

செய்முறை: 

முதலில் ஒரு பெரிய பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி கொஞ்சமாக உப்பு சேர்த்து கொதித்ததும் பாஸ்தாவை சேர்த்து வேகவைத்து, தண்ணீரை வடிகட்டி தனியாக வைத்துக் கொள்ளவும். 

பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து ஆலிவ் எண்ணெய் சேர்த்து சூடானதும், நறுக்கிய பூண்டு மற்றும் வெங்காயத்தை சேர்த்து வதக்கவும். அடுத்ததாக தக்காளி பேஸ்ட்டை அதில் சேர்த்து கிளறவும். குறைந்த வெப்பத்தில் இந்த சாஸை சுமார் ஐந்து நிமிடங்கள் லேசாக கொதிக்க விடவும். 

அடுத்ததாக க்ரீமை அதில் சேர்த்து, உப்பு மிளகுத்தூள் போன்றவற்றையும் சேர்த்து நன்கு கிளறவும். இப்போது இந்த கலவையை 5 நிமிடங்கள் அப்படியே வேக விடுங்கள். 

இப்போது வேக வைத்த பாஸ்தாவை அதில் சேர்த்து, சாஸ் எல்லா பக்கமும் படும்படி கிளருங்கள். இதை அப்படியே மூன்று நிமிடங்களுக்கு வேக வைக்கவும். 

இதையும் படியுங்கள்:
Term Insurance என்றால் என்ன? இது என்ன அவ்வளவு முக்கியமா? 
Pasta

இறுதியில் நீங்கள் எதிர்பார்க்கும் பதத்திற்கு பாஸ்தா வந்ததும், அதை பரிமாறும் தட்டுக்கு மாற்றி, அதன் மேலே துருவிய சீஸ் தூவினால், சூப்பரான Pink Sauce Pasta தயார். இதை குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள். எனவே, உங்கள் வீட்டில் சுட்டீஸ் இருந்தால், இன்றே இந்த ரெசிபியை செய்து கொடுத்து அசத்துங்கள். 

logo
Kalki Online
kalkionline.com