காலையில் எழுந்ததும் முதலில் நாம் தேடுவது பெட் காபியேயாகும். காபி குடிப்பதால் உடலிலும், மனதிலும் ஒரு புத்துணர்ச்சி ஏற்படுகிறது. காபி சுவைக்கென்றே ஒரு தனி ரசிகர்கள் கூட்டம் உண்டு. ஹோட்டலுக்கு சென்று உணவருந்திய பிறகு கடைசியாக ஒரு காபியுடன் முடிப்பவர்கள் பலர் உண்டு. இப்படி காபியின் சிறப்பை பற்றி நாம் சொல்லிக்கொண்டே போகலாம். இந்த பதிவில் காபியில் எத்தனை பிரபலமான வகையிருக்கிறது என்பதைப் பற்றித்தான் காணவுள்ளோம்.
1.எக்ஸ்பிரஸோ காபி (Expresso coffee)
எக்ஸ்பிரஸோ காபியை மிஷின் இல்லாமல் பண்ண முடியாது. அந்த மிஷினில் என்ன நடக்கும் என்றால், காபி பவுடரை மிஷினில் வைப்பார்கள். நன்றாக கொதிக்கும் நீரும், High pressure நீராவியும் சேர்த்து காபி பவுடரை ஒரு கிரீமியான பேஸ்ட் போல ஆக்கிவிடும். அதுதான் எக்ஸ்பிரஸோ காபியாகும்.
2. அமேரிக்கனோ காபி (Americano coffee)
இந்த காபியின் பெயரை வைத்தே சொல்லி விடலாம் இது அமேரிக்கன் ஸ்டைல் காபியாகும். கிரீமியாக செய்து வைத்த எக்ஸ்பிரஸோ 1 பங்கும் சுடு தண்ணீர் 3 பங்கும் சேர்த்தால் அமேரிக்கனோ காபி தயார். இது பிளேக் காபி ஸ்டைலில் இருக்கும்.
3. பிளேட் ஒயிட் காபி (Flat white coffee)
இது ஆஸ்டிரேலியன் ஸ்டைல் காபியாகும். இதில் 1 பங்கு எக்ஸ்பிரஸோவும், 3 பங்கு பாலும் பயன்படுத்தப்படுகிறது. இந்த கிரீம் பால் மென்மையான, வெல்வெட் போன்ற அமைப்பை உருவாக்கும்.
4.லேட்டே காபி (Latte coffee)
லேட்டே இத்தாலியன் ஸ்டைல் காபியாகும். இதில் 1 பங்கு எக்ஸ்பிரஸோ, 3 பங்கு பால் அதன் மேலே பால் நுரையை மட்டும் ஒரு லேயராக சேர்த்தால் அதற்கு பெயர் தான் லேட்டே காபியாகும். பால் நுரை வேண்டாம் என்றால் ஓட்ஸ், தேங்காய்ப்பால் போன்றவற்றை பயன்படுத்தலாம்.
5.மக்கியாட்டோ காபி (Macchiato coffee)
இந்த மக்கியாட்டோ காபியில் 1 பங்கு எக்ஸ்பிரஸோவும், 1 பங்கு பால் நுரையை கொண்டு செய்யப்படும் காபியாகும். இந்த காபி மிகவும் கிரீமியாக இருக்கும்.
6.கேப்பச்சினோ காபி (Cappuccino coffee)
கேப்பச்சினோவில் 1 பங்கு எக்ஸ்பிரஸோ, 1 பங்கு பால், மீதம் பால் நுறை சேர்த்து செய்யப்படுவது தான் கேப்பச்சினோ. இது மிகவும் பிரபலமான காபியாகும். இது சுவைப்பதற்கு மென்மையாகவும், க்ரீமியாகவும், இனிப்பாகவும் இருக்கும்.
7.மோக்கா காபி (Mocha coffee)
மோக்கா காபி செய்வதற்கு 1 பங்கு எக்ஸ்பிரஸோ, 1 பங்கு சாக்லேட் சிரப், 2 பங்கு பால் சேர்த்து காபி செய்துவிட்டு இதன் மீது Whipped cream ஐ போடுவார்கள்.
8.விய்யன்னா காபி (Vienna coffee)
ஆஸ்ட்டிரியா என்னும் நாட்டில் இருந்து வந்ததுதான் இந்த காபி. இதில் 1 பங்கு எக்ஸ்பிரஸோ மீதி Whipped cream ஐ சேர்த்து செய்யப்படுவதாகும். இதுவும் கிரீமியான காபியாகும்.
9.ஐரிஸ் காபி (Irish coffee)
இந்த காபி செய்ய மூன்றில் 1 பங்கு பிளாக் காபி, 1 விஸ்கி மற்றும் சுகர் மற்றும் 1 பங்கு கிரீம். இந்த வகை காபியில் விஸ்கி சேர்க்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த காபி அருந்தும்போது, ஸ்வீட் அன்ட் ரிச்சான சுவையை கொடுக்கும்.
எத்தனை வகை காபிகள் வந்தாலும் நம்ம ஊர் பில்டர் காபிக்கு இணையாக எந்த காபியாலும் வரமுடியாது என்பதே உண்மை. என்ன சொல்றீங்க?