
பெண்கள் முகம் சுருக்கம் இல்லாமல் இருக்க, அப்படியே சுருக்கம் இருந்தாலும் முகச்சுருக்கம் நீங்கி முகம் பளபளப்பாக இருக்க, நம் வீட்டில் உள்ள சில பொருட்களை வைத்து அழகு செய்து கொள்ளலாம்.
தினமும் பாலில் தேவையான அளவு தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் எந்த நோய்களையும் எதிர்த்து நிற்கும் ஆற்றல் உடல் பெற்றுவிடும் முகம் அழகாகவும் உடல் பளபளப்பாகவும் இருக்கும்.
அதிகாலையில் வெறும் வயிற்றில் அத்திப்பழத்தை சாப்பிட்டு வந்தால் உடல் அழகும். இளமையும் நாளுக்கு நாள் அதிகமாகும்.
முகச்சுருக்கத்தைப் போக்க தேங்காய் எண்ணெயில் மஞ்சள்தூளை போட்டு குழைத்து உடம்பிற்கு தடவி பயத்த மாவை தேய்த்து குளித்தால் தோல் பளபளப்பாகவும் மிருதுவாகவும் இருக்கும்.
தினமும் முகத்தில் ஆலிவ் எண்ணெய் பூசி வர முகச்சுருக்கம் நீங்கி பளபளப்பாக மாறும்.
ஆரஞ்சு பழத்தை இரண்டாக வெட்டி முகத்தில் தேய்த்து பத்து நிமிடம் கழித்து சோப்பு போட்டு கழுவவேண்டும் தினமும் இவ்வாறு செய்து வந்தால் முகம் பளபளப்பாகும் இளமையுடனும் இருக்கும்.
உலர்ந்த ரோஜா இதழ்களுடன் சிறிது பன்னீரும் சந்தனமும் அரைத்து முகத்தில் தடவ தோலின் நிறம் பொலிவு பெற்று முகம் பளபளப்பாகும்.
பால் கடலை மாவு, மஞ்சள் சந்தனம் அனைத்தையும் கலந்து முகத்தில் தடவி முகத்தை கழுவினால் முகம் பளபளப்பாக மாறும் உடலில் தேய்த்து குளித்தால் சருமம் அழகாக பளபளப்பாக இருக்கும்.
தேங்காய் எண்ணெயை தடவி சிறிது நேரம் கழித்து குளித்தால் உடலும் முகமும் மென்மையாகி மேனி பளபளவெனமின்னும் .
பாலாடையை முகத்தில் தடவி சிறிது நேரம் கழித்து குளித்தோமானால் முகத்தில் சுருக்கம் ஏற்படாது.
இரண்டு தேக்கரண்டி தயிரில் ஒரு தேக்கரண்டி சந்தனபொடி கலந்து முகத்தில் தடவி அரைமணி நேரம் கழித்து முகத்தை குளிர்ந்த நீரினால் கழுவினால் முகம் பளபளவென மின்னும்.
ஆறு சுவைகளில் துவர்ப்பு சுவைதான் பெண்களின் இளமைக்கு பாதுகாப்பானதாக உள்ளது. வாழைப்பூ வாழைத்தண்டு மற்றும் பெரிய நெல்லிக்காய் போன்ற துவர்ப்பு சுவையுள்ள உணவுப் பொருட்களை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் இளமையின் ஆயுள் அதிகரிப்பதுடன் முகமும் உடலும் பளபளப்பாக இருக்கும்.
முகம் டல்லடிக்கிறதா?
புதினா இலையை மிக்ஸியில் அரைத்து அதனுடன் வாழைப்பழத்தை சிறிது சேர்த்து கலந்து முகத்தில் பூசி ஒரு மணி நேரம் ஊற விடவேண்டும் பிறகு அலம்பினால் முகத்தில் உள்ள மிகச்சிறிய ஓட்டைகளில் உள்ள அழுக்கு கூட வெளியேறி முகம் பளபளப்பாக ஆகிவிடும்.
முகத்தில் சுருக்கம் வராமல் இருக்க அந்தந்த சீசனில் கிடைக்கும் காய்கறிகள் மற்றும் பழங்களை தவறாமல் சாப்பிட்டு விட வேண்டும். ஏனெனில் இவற்றில் உள்ள வைட்டமின்கள் மற்றும் சத்துக்கள் தோலில் சுருக்கம் வருவதற்கு அனுமதி கொடுக்காது.
வாரம் ஒருமுறை அல்லது இரண்டு முறை ஆரஞ்சு ஜூஸோ அல்லது கேரட் ஜூஸோ குடித்து வந்தால் சருமம் ஈரப்பதத்துடன் பளபளப்பாகவும் இருக்கும் .
மன அழுத்தம் முகப்பொலிவை பெரும் அளவு பாதிக்கும் மனதை உற்சாகமாக வைத்துக்கொள்வதும் அழகை மேம்படுத்துவதற்கான முக்கியமான உத்தியாகும்.