

-அ. அனீஸ் பாத்திமா
சருமம் எப்படி இருந்தால் என்ன.. அதற்கேற்ற பராமரிப்பு இருந்தால் எப்போதுமே ஜொலிக்கும். என்னவெல்லா செய்யலாம் பார்க்கலாம்.
அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்ற பழமொழிக் கேற்ப பெண்கள் தங்கள் சரும பராமரிப்பிற்கு முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். பெண்கள் தமது அன்றாட பணிகளில் மிகவும் பிசியாக இருந்து வருகிறார்கள். ஆனாலும்,பெண்கள் தங்கள் அழகை பராமரித்துக் கொள்ளும் ஆசைக்கு முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். அதன் விளைவாகவே பல்வேறு அழகு தயாரிப்பு சாதனங்கள் பொருட்கள் செயற்கையானவை மிகவும் அதிகமாக வலம் வருகிறது.
எனவே நாம் இயற்கையாக எவ்வாறு முகத்தை பராமரிப்பது என்பதை அறிந்து கொள்வோம். நாம் இப்போது வீட்டில் உள்ள பொருட்களைக் கொண்டு எப்படி நம்முடைய அழகை பராமரிப்பு செய்வது என்பதை பார்ப்போம்.
பாலாடை
பொதுவாகவே நாம் அனைவரும் வீட்டில் பால் என்பது கண்டிப்பாக இருக்கும். பாலைக் காய்ச்சும்போது கிடைக்கும் ஆடையை தனியே எடுத்து, அதனை ஒரு காற்று புகாத பாட்டிலில் அடைத்து, குளிர்சாதனப் பெட்டியில் வைத்து (1 மணி நேரம்) குளிரூட்ட வேண்டும். பின்பு அந்த ஆடையில் ( முகத்தில் தேய்க்கும்) மஞ்சள் கலந்து, நன்றாக முகத்தில் தேய்த்து மசாஜ் செய்ய வேண்டும். பிறகு அரைமணி நேரம் ஆன பிறகு குளிர்ந்த நீரில் முகத்தை கழுவ வேண்டும். முன்பு இருந்ததைவிட இப்பொழுது உங்கள் முகம் பொழிவாக இருப்பதை உணர்வீர்கள்.
தக்காளி
பொதுவாகவே சமையலில் தக்காளி உபயோகப் படுத்தாமல் எந்த சமையலும் செய்வதில்லை. அவ்வாறு நாம் உபயோகப்படுத்தும் தக்காளியை இரண்டு துண்டுகளாக நறுக்கி, அதில் சிறிதளவு காப்பி பொடியை கலந்து முகத்தில் தேய்க்கவேண்டும். அவ்வாறு தேய்த்த பிறகு 15 நிமிடம் கழித்து முகத்தை கழுவவும். இப்பொழுது உங்கள் சருமம் பளிச்சென்று இருப்பதை கண்கூடாக காணலாம்.
உளுந்து
பொதுவாகவே நம்முடைய சருமம் அடிக்கடி வெயில்படுவதால் கருப்பாக தோற்றமளிக்கும். அதனை நிரந்தரமாக தடுப்பதற்கு, நாம் உளுந்தினை உபயோகப்படுத்தலாம். பெண்கள் அனைவரும் கண்டிப்பாக மாவு அரைக்க அரிசி, உளுந்தை பயன்படுத்துவோம்.
அவ்வாறு அரைக்கும் உளுந்தினை, கொஞ்சம் கூடுதலாக அரைத்து காற்று புகாத பாட்டிலில் அடைத்து குளிர்ச்சாதனப் பெட்டியில் சேமித்து, குளிக்கப் போவதற்கு அரைமணி நேரத்திற்கு முன்பு, முகத்தில் நன்றாக இந்த உளுந்தமாவினை கொண்டு மசாஜ் செய்து நன்றாக காய்ந்த பிறகு குளிக்கவும். மேலும் வெயில் படும் கை, கால்களிலும் இதனை உபயோகப்படுத்திப் பயன்பெறலாம்.