

அதிகமானோர்க்கு முகப்பரு ஒரு பிரச்னையாக இருப்பது உண்டு. அது வந்துவிட்டால் அதை கிள்ளி கிள்ளி அதனால் அதிக இடம் பரவுவதற்கும் வழி செய்துவிடுவார்கள். அவற்றை தடுக்கும் வழிமுறைகளை இப்பதிவில் காண்போம்.
துளசி இலைகள் 10 வேப்ப இலைகள் 10 மஞ்சள் ஒரு டீஸ்பூன் தயிர் ஒரு டீஸ்பூன் எடுத்துக்கொண்டு, இலைகளை இடித்து மசித்து அத்துடன் தயிர் மற்றும் மஞ்சள் கலந்து முகத்துக்கு பேக் போட்டு குளிர்ந்த நீரில் கழுவி வர முகப்பரு முகவரி இல்லாமல் போகும்.
முகம் சோர்ந்து பளபளப்பு குறைந்து இருக்கும்போது பாலேட்டடை முகத்தில் பயன்படுத்தலாம். முக சருமத்துக்கு தேவையான ஊட்டச்சத்துக்களை அளித்து சருமத்தை ஈரத்தன்மை உடன் வைத்து இருக்கிறது. பாலேட்டை பயன்படுத்தி சருமத்துக்கு பளபளப்பு அளிக்கலாம். சரும சிகிச்சைகளுக்கு பயன்படுத்தலாம்.
சரும எரிச்சல் சருமத்தில் கருந்திட்டுகள், முகப்பரு, தோல் அலர்ஜி ஆகியவற்றுக்கும் பாலேட்டை தீர்வாகப் பயன்படுத்தலாம். கடலை மாவுடன் பாலேட்டை கலந்து பூசி வர முகப்பருக்கள் மறையும்.
வெங்காயத்தை அவ்வப்போதும் உணவுடன் பச்சையாக சாப்பிட்டு வந்தால் முகப்பருக்கள் மறையும். நீர் அதிகமாக பருகி மலச்சிக்கல் வராதவாறு பார்த்துக்கொள்ள வேண்டும்.
முகப்பருக்கள் வந்த இடத்தில் சிலருக்கு பள்ளம் போல் ஆகிவிடும். அந்த இடத்தில் சர்க்கரையுடன் கோதுமை மாவை கலந்து தேய்த்து வரும்போது பள்ளம் மறையும்.
இளநீரில் மஞ்சள் தூளை குழைத்து பருக்கள் மீது பூசி வந்தால் பருக்கள் மறைந்துவிடும்.
சிலருக்கு முகத்தில் அதிகமான பருக்கள் ஏற்படும். அப்பொழுது நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும் குங்குமாதி லேபத்தை வாங்கி முகத்தில் தடவி வர நல்ல பலன் கிடைக்கும்.
ஜாதிக்காய் அரைத்து எடுத்து அத்துடன் சிறிது சந்தனத்தை கரைத்து கலக்கி இரவில் படுக்கும் முன் முகத்தில் தடவி வைத்திருந்து பின் காலையில் முகத்தை கழுவி வந்தால் முகப்பருக்கள் மறைவதுடன் முகமும் பளபளப்பாக தோன்றும்.
வெள்ளைப் பூண்டை பாலில் போட்டு வேகவைத்து பிறகு அதை விழுதாக அரைத்து பருக்களின் மீது தடவி வந்தால் பருக்கள் மறையும்.
கொத்துமல்லியும் மஞ்சளும் சேர்த்து அரைத்து பூசி முகம் கழுவி வர பருக்கள் மறையும்.
கிரீன் டீயில் உள்ள ஆன்ட்டி ஆக்சிடென்ட் சருமத்தில் உள்ள பருக்களை போக்கும். ஆதலால் அந்த டிகாஷனை தேய்த்து பயன்பெறலாம்.