குளியல் மற்றும் ஆவி பிடிப்பதால் சருமம் அழகு பெறுமா?

beauty tips
To get skin beauty
Published on

வெளியில் அலைந்துவிட்டு வந்தால் உடம்பில் தண்ணீர் ஊற்றிக் கொண்டு வருகிறேன் என்று கூறுவார்கள். அப்படி குளித்தால்தான் அசதி நீங்கும். இப்பொழுதும் சளி பிடித்து மூக்கடைத்திருந்தால் வெந்நீரில் யூகலிப்டஸ் ஆயிலை போட்டு ஆவி பிடிப்போம். சிறிது நேரத்தில் மூக்கடைப்பு நீங்கி சரியாகும். அதுபோல் உடல் அழகை பேணி காக்கவும் ஆவி பிடிப்பது அவசியம். அவற்றைப் பற்றி இப்பதிவில் காண்போம். 

குளியல் ஒவ்வொரு மனிதனின் வாழ்க்கையில் ஒவ்வொரு நாளும் நடக்க வேண்டிய அற்புதமான அனுபவம். குளியல் உங்களுக்குள் முடங்கி கிடக்கும் சோம்பலை அடித்து விரட்டுவது. குளியல் இதுவரை இல்லாத புத்துணர்ச்சி தருகிறது. நம் சருமத் சுத்தமாக்குவதுடன் புதிய பொலிவையும் தருகிறது. சூடான தண்ணீரில் குளிக்கும் பழக்கம் உள்ளவர்கள் கொஞ்சம் சாதாரண தண்ணீரில் குளிப்பது சருமத்துக்கு ஒளி வீசும் தன்மையைக் கொடுக்கும்.

வீட்டில் விசேஷங்களில் ரோஜாப் பூ மாலையை அதிகம் பயன்படுத்துவோம். அதை அப்படியே தூக்கி குப்பையில் போடாமல் ரோஜா பூக்களை எடுத்து இதழ்களை பிரித்து தண்ணீர் போட்டு சிறிது நேரம் அடுப்பில் வைத்து நன்கு கொதிக்கவிடவும். பிறகு அந்த தண்ணீரை நாம் குளிக்கும் தண்ணீருடன் சேர்த்து குளிக்கலாம் உடம்பில் நல்ல வாசம் வரும். 

ஒரு பாத்திரத்தில் நல்ல ஆவி பொங்கும் நீரை கொட்டி அதிலிருந்து வரும் ஆவியை முகத்தின் மீது படும்படி கண்களை மூடிக்கொண்டு அந்த ஆவிக்கு நேராக முகத்தை கவிழ்த்துக்கொள்ள வேண்டும். ஆவி பக்கவாட்டில்  வெளியேறிவிடாதபடிக்கு போர்வை அல்லது துண்டினால் நான்கு பக்கமும் நன்கு மறைத்துக்கொண்டு  விட வேண்டும். ஆவி பிடிப்பவர்களுக்கு சூடு பொறுக்கும் அளவுக்கு இருக்கவேண்டும்.

இதையும் படியுங்கள்:
மெஹெந்தியை விரைவாக நீக்க வேண்டுமா? இதோ சில உடனடி டிப்ஸ்!
beauty tips

நீராவியில் இப்படி வேது பிடிப்பது சருமத்திற்கு சிறந்த பாதுகாப்பு. உடல் துவாரங்கள் திறக்கப்படுகின்றன. அதன் பின்னர் நல்ல டவலால் முகத்தை துடைத்து விட்டு தினசரி உபயோகிக்கும்  சோப்பினால் முகத்தைக் கழுவினால் சருமம் சுறுசுறப்படையும். இவ்வாறு அடிக்கடி செய்து வந்தால் உடல் சருமம் நல்ல கலராக மாறும். சரும அழகை மேம்படுத்த இது நல்ல சிறந்த பயிற்சியாகும். கிராமப்புறங்களில் இதை அடிக்கடி செய்வதுண்டு. 

எண்ணெய் சருமம் உள்ளவர்கள் சுடுநீரில் சுத்தமான வேப்பிலை போட்டு ஆவி பிடித்தால் சரும துவாரங்கள் திறந்து உள்ளே உள்ள அழுக்குகள் வெளியேறும். திறந்த துவாரங்கள் மறுபடியும் மூட குளிர்ந்த நீரால் முகத்தில் பளீர் என்று அடித்துக் கழுவவேண்டும்.

பாதாம் எண்ணெய்யை வாரத்திற்கு ஒருமுறை உடலில் நன்றாக தேய்த்து ஊறவைத்த பின் குளியல் பொடி தேய்த்து குளித்தால் சருமம் பட்டுபோல் மென்மையாகவும் சிவப்பாகவும் மாறும். 

அதிகமானோர் முகத்துக்கு சோப்பை அதிகமாக போட்டு கொஞ்சம் தண்ணீரில் கழுவுகின்றனர். அது தவறு. கொஞ்சம் சோப்பை குழைத்து நிறைய தண்ணீர் ஊற்றி கழுவுவதே சரும பராமரிப்புக்கு சிறந்தது. 

இதையும் படியுங்கள்:
மகிழ்ச்சியான மண வாழ்க்கைக்கான 3 மந்திரங்கள்!
beauty tips

அன்றாடம் அல்லது மூன்று நாட்களுக்கு ஒருமுறை இளஞ்சூடான வெந்நீரை அகலமான பாத்திரத்தில் நிரப்பி, பாதங்களை அதில் அரைமணி நேரம் ஊறவைத்து தேய்த்து கழுவினால் பாதங்கள் பளபளப்பாகும். பிறகு தேங்காய் எண்ணெய் தேய்த்து வர வெடிப்பு வராமல் இருக்கும். 

கைகள் சொரசொரப்பாக உள்ளவர்கள் கிளிசரின், எலுமிச்சம்பழம் சாறும் கலந்த கலவையில் சிறிது நேரம் கைகளை ஊறவைத்து, பின்னர் சோப்பு போட்டு கழுவி துடைத்து, இரவிலும் காலையிலும் இப்படி செய்தால் கைப்பகுதியில் உள்ள சருமம் பளபளப்பாகும். சிவப்பாக மாறும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com