

வாழ்க்கை என்பது ஒரு கடல். அதில் நாம்தான் லாவகமாக பயணம் செய்து முத்தெடுக்க வேண்டும். கடல் அலையும் நமக்கு ரம்மியமான சூழலைத்தரும். ஆனால் அதே நேரம் சீற்றம் கொண்டால் விளைவுகள் விபரீதமாகிவிடுமே!
அதுபோலத்தான் வாழ்க்கையும், நாம் நம்முடைய விவேகத்தால் சாதுா்யமான முறையில் கணவனும் மனைவியும் சோ்ந்து பேசி தாழ்வு மனப்பான்மையை விலக்கிவிட்டு, பாழாய்ப்போன ஈகோவைத் தொலைப்பதுடன் விட்டுக்கொடுக்க வேண்டிய விஷயங்களில் அனுசரித்துப்போய் வாழ்ந்தாலே நன்மைதான்.
அடுத்தவர்களுக்காக நாம் வாழவேண்டாம், நமக்காகத்தான் வாழ்கிறோம் என்ற உயர்ந்த நோக்கம் இருந்தாலே வாழ்க்கை வசந்தமாகுமே! இது விஷயத்தில் வாழ்க்கையில் கடைபிடிக்கவேண்டிய பல விஷயங்களுக்குள் முக்கியமாக மூன்று நோ்மறை ஆற்றல் என்ன என்பதை பதிவில் பாா்க்கலாமா?
விட்டுக்கொடுங்கள் விருப்பம் நிறைவேறும்
அதாவது கணவன் மனைவி இருவரும் பரஸ்பர புாிதலோடு அனுசரிப்புதன்மையுடன், அடுத்தவர்கள் நிலை மற்றும் வசதி கண்டு அங்கலாய்க்காமல், அகலக்கால் வைக்காமல், பொியவர்கள் ஆசியுடன், கடவுளின் துணையோடு ஒற்றுமையாய், அன்பு மற்றும் பாசத்தோடு வாழ்ந்து பாருங்களேன் வாழ்கையில் வசந்தமானது வாசல் கதவைத்தட்டுமே!
மன்னிக்கத்தொிந்து கொள்வதே சிறப்பான வழிமுறை
அதாவது யாா் ஒருவர் சிறிய தவறு செய்தாலும் உட்காா்ந்து பேசி மன்னிக்கக்கூடிய தவறாக இருந்தால் மன்னித்துவிடுகிற பக்குவத்தை வளா்த்துக்கொண்டாலே, தவறுகள் படிப்
படியாக குறைய வாய்ப்புகளே அதிகம். அதைவிடுத்து மன்னிக்கும் மனப்பான்மை இல்லாது போனால் சிரமம்தான் வீடு தேடிவரும் அழையா விருந்தாளியாக, சரிதானே!
அன்பே பிரதானம் என்ற கோட்பாடுகளை கடைபிடியுங்கள்
அன்பால் எதையுமே சாதிக்கலாம் அன்பை விலைகொடுத்தா வாங்கப்போகிறோம். அது நமக்குள்ளேயே நிறைய வளர்ந்து கிடக்கிறது. அதை சரியான வழியில் பயன்படுத்தி வாழந்து பாருங்களேன், அப்புறமென்ன அன்பு இல்லம்தான், வம்புகள் தொலைந்திடுமே!
எல்லாமும் நமது கையில்தான் உள்ளது. நமது நற்சிந்தனையுடன் கூடிய விசால மனதே வினைகளை விரட்டிவிடுமே! நம்மிடம் இருப்பதைக்கொண்டு சிறப்புடன் வாழலாமே! கையில் கிலோ கணக்கில் வெண்ணையை வைத்துக்கொண்டு யாராவது நெய் வேண்டும் என அலைவாா்களா?
பொதுவாக விளக்கிற்கு வெளிச்சம் தரத்தான் தொியும், அந்த வெளிச்சம் எங்கு தேவைப்படும் என்பதை நாம் தான் முடிவு செய்யவேண்டும். அது போலத்தான் வாழ்க்கை எனும் கப்பலை எப்படி செலுத்தவேண்டும் என்பதை நாம்தான் முடிவு செய்ய வேண்டும்!