மிருதுவான பாதங்களைப் பெற எளிய வீட்டுப் பராமரிப்பு குறிப்புகள்!

Beauty tips in tamil
To get soft feet
Published on

பதினைந்து நாட்களுக்கு ஒருமுறை இதைச் செய்யலாம்!

ரு அகலமான பிளாஸ்டிக் டப்பில், முழங்கால் மூழ்கும் அளவுக்கு வெந்நீர் நிரப்பி, அதில் ஒரு கைப்பிடி அளவு கல் உப்பு, 1 டீஸ்பூன் பாதாம் ஆயில் போட்டு, இரண்டு பாதங்களையும் வைத்துக்கொள்ளவும். கால்களுக்கு நல்ல ஓய்வு கிடைப்பதோடு, இறந்த சரும செல்கள் உதிர்ந்து, பாதங்களில் இயற்கையான ஈரப்பதம் உருவாகும்.

நகங்கள் உடைந்து, வெடிப்பும் கீறலுமாக இருந்தால் வாரம் ஒருமுறை செய்ய வேண்டியது:

ரை கப் காய்ச்சி ஆறிய பாலில் ஒரு டேபிள் ஸ்பூன் எலுமிச்சைச் சாறு விட்டுக் குழைத்து, காட்டன் பட்ஸில் தோய்த்து, கால் விரல்களின் நகங்களின் மீது பூசி வரவும். ரோஜா இதழ் போன்ற அழகு விரல்கள் அமைவது கேரண்டி! நகங்களை சதுர வடிவிலும், ஓரங்களை வட்ட வடிவிலும் வெட்டுவதுதான் சரியான முறை. மண் புகுந்து கொள்ளாது.

பாத அழகுக்கு ஹோம்-மேட் க்ரீம் செய்யும் விதம் இதோ:

வால்நட்டைப் பொடியாக்கி அதில் அரை டீஸ்பூன் வெண்ணெய் கலந்து குழைத்து, பாதத்தில் பூசி வர, பூம்பிஞ்சு பாதங்கள் உங்களுடையதே!

வெயில்பட்டு கால் மட்டும் கறுத்துப்போய் கடுப்படிக்கிறதா?

உருளைக்கிழங்கு இருக்க பயமேன்?

ருளைக்கிழங்கு ஜூஸ் 1/2 கப் + எலுமிச்சைச் சாறு- 1/4 கப் + காய்ச்சி ஆறிய பால் 1/4 கப் + 3 டீஸ்பூன் பார்லி பவுடர் கலந்து கால்களில் பூசி, இருபது நிமிடம் கழித்துப் பாருங்கள். பொன் போன்ற பாதங்கள் டாலடிக்கும்!

காலைக் கீழே ஊன்ற முடியாத அளவுக்குப் பித்தவெடிப்புத் தொல்லையா?

ம்பது கிராம் வெள்ளை எள்ளு + ஐம்பது கிராம் கசகசாவை மிக்ஸியிலிட்டு நைஸாகத் தூள் பண்ணவும். அந்தப் பொடியுடன் இருநூறு மில்லி நல்லெண்ணெய் கலந்து, கண்ணாடி பாட்டிலில் பத்திரப்படுத்தவும். காலையும், மாலையும் தடவி வர, பித்தவெடிப்பு ‘டாடா பை பை’ சொல்லிவிடும்.

இதையும் படியுங்கள்:
தலைமுடி உதிர்வைத் தடுக்க எளிய இயற்கைப் பராமரிப்பு முறைகள்!
Beauty tips in tamil

வறட்டு சருமம் மிரட்டுகிறதா? டிடர்ஜென்ட் அலர்ஜி, சேற்றுப் புண் போன்ற பிரச்னையும் சேர்ந்துள்ளதா?

பிஞ்சு கடுக்காயை நசுக்கி, வெந்நீரில் போட்டு கொதிக்க விடவும். அதில் இரண்டு ‘டீ பேக்ஸ்’ போட்டு சாறு இறங்கியதும், சிறு டவலை அதில் நனைத்து பாதங்களில் மீது கதகதப்பாகப் போட்டுக்கொள்ளவும். இப்படி தொடர்ந்து செய்வதன் மூலம் உங்கள் பாதங்களை பாதுகாக்கலாம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com