

மெடிட்டரேனியன் உணவுகள் எப்போதும் உங்களை பளபளவென்று வைக்கக்கூடியது. பல நூற்றாண்டுகளாக க்ரீஸ், டர்க்கி, இத்தாலி மொராக்கோ போன்ற இடங்களில் மெடிட்டரேனியன் உணவுகள் மூலம் மிகப் பொலிவைப் பெற்று வருவது வழக்கம். நல்ல அந்த ஐந்து உணவுகள் என்னென்ன என்பதை இப்பதிவில் காண்போம்.
ஓட்டகப் பால்
மத்திய கிழக்கு நாடுகளில் ஓட்டகப்பால் என்பது பிரசித்தமானது உலக அழகியான க்ளியோபாட்ரா ஒட்டகப் பாலில்தான் தினமும் குளிப்பாராம். ஓட்டகப் பாலில் உடல் எக்ஸ்ஃபோலியேட் செய்யக்கூடிய பண்பைப் பெற்ற லாக்டிக் அமிலம் உள்ளது. சரும ஆரோக்கியத்திற்கும் தேவையான சத்து அதிகம் நிறைந்துள்ளது . சருமத்தை புதுப்பொலிவுடன் மிளிரச் செய்யவும் இந்த மிகவும் மிருதுவாகவும் இந்த பால் சருமத்தை வைக்கும். ஒட்டகப் பால் பௌடருடன் தேன் மற்றும் ரோஸ் வாட்டர் கலந்து சருமத்தில் தடவி 15நிமிடம் கழித்து வெதுவெதுப்பான நீரில் குளிக்க மாசு மருவற்ற சருமத்தை பெறுவீர்கள். இது முகத்தில் எந்தவித அழற்சி யும் தராமல் எக்ஸ்ஃபோலியேட் செய்யும்.
க்ரீக் யோக்ஹர்ட்
இந்தியர்கள் மலாய் பயன்படுத்துவது போன்று மெடிடெரேனியப் பெண்கள் க்ரீக் யோக்ஹர்ட் பயன்படுத்துகிறார்கள். இது அடர்த்தியாகவும் முகத்தைத் குளுமை படுத்தக்கூடிய பண்பை பெற்றது. இந்த க்ரீக் யோக்ஹர்ட்டில் சரும ஆரோக்கியத்திற்கான நல்ல பாக்டீரியாக்கள், பருக்களை தீர்க்கக்கூடிய துத்தநாகம் சத்து, மற்றும் சருமத்தை பளிச்சென்று ஆக்கக் கூடிய லாக்டிக் அமிலம் நிறைந்துள்ளன. இது முகத்தில் தடிமனான தன்மையை அகற்றி மென்மையாக்கும் கூடியது. இதை ஃப்ரிடஜ்ஜிலிருந்து எடுத்து முகத்தில் தடவவும். பத்து அல்லது 12நிமிடங்கள் கழித்துத் கழுவவும் உங்களுக்கு மிகுதியான பொலிவிற்கு மஞ்சள் பொடி மற்றும் தேன் சேர்க்கலாம். இது எந்த விதமான சருமத்திற்கும் ஏற்றது.அழற்சி அரிப்பு மற்றும் எரிச்சலைப் போக்கி மென்மையாக்குகிறது.
டர்க்கிஷ் காபி
எல்லோருமே காபி ஸ்க்ரப் பயன்படுத்துகிறார்கள் ஆனால் யார்க்கில் காபி தனித்தன்மை வாய்ந்தது. இது மென்மையாகவும் நல்ல வாசனையும் கொண்டது மெடிடேரேனியன் மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் டர்க்கிஷ் காபி ஸ்க்ரப் அதிக அளவில் பயன்படுத்தப் படுகிறது இது உடனடி பலன் கொடுக்கக் கூடியது. இந்த காபி பொடியோடு சிறிது தேன் மற்றும் ஆலிவ் ஆயில் கலந்து முகத்தில் மசாஜ் செய்ய வேண்டும். இது உங்கள் முகத்தை பொலிவாக்குவதோடு நல்ல நறுமணமும் தரும்.
ஆலிவ் ஆயில்
மெடிடெரேனிய நாடுகளில் இதை உடல் முழுவதும் தடவிக் குளிப்பார்கள். மேக்கப்பை கலைக்கவும் தலைமுடிக்கும் கூட பயன்படுத்தப்படுகிறது. இதில் ஆன்டி ஆக்சிடண்ட்ஸ்,வைட்டமின் சி மற்றும் ஆரோக்கிய கொழுப்புகள் நிறைந்தது இது சருமத்தை சரி செய்யக்கூடியது பொலிவற்ற சருமத்தை பளபளப்பாக ஆக்கக் கூடியது. இதை இரவு தடவி மசாஜ் சேர்வது நல்லது இது முகத்தை மென்மையாக்குவதுடன் முகத்திற்கு வெளிச்சம் போட்டால் போன்று ஆக்கக்கூடிய பண்பு பெற்றது.
தேன்
முக அழகிற்கு தேன் மிக உதவியாக இருக்கிறது. முகத்தில் அழற்சியைப் போக்குவதுடன் பருக்கள் வராமல் தடுக்கும். உங்கள் முகம் பொலிவைக் கூட்ட தேனுடன் சிறிது மஞ்சள் பொடி சேர்த்து மசாஜ் செய்து கழுவ முகம் கண்ணாடி போல் ஜொலிக்கும். இது பருக்களால் ஏற்படும் வடுக்களை நீக்குகிறது. முகம் சிவத்தல் தடுக்கும்.