பட்டுப்போல மின்னும் சருமம் பெற... கிச்சனில் இருக்கும் அழகு ரகசியங்கள்!

tamil-beauty-tips
tamil-beauty-tips
Published on

தலை அரிப்பு

ஒரு கைப்பிடி வேப்பிலையுடன் மூன்று சின்ன வெங்காயம் சேர்த்து, நைசாக அரைத்து தலையில் தடவி ஊறவைத்து கால் மணிநேரம் கழித்து தலையை அலசினால் வெயில் நாட்களில் தலையில் ஏற்படும் அரிப்பு நீங்குவதுடன் கூந்தலும் மென்மையாக இருக்கும்.

பொடுகு நீங்க

வெயில் காலத்தில் வியர்வையால் தலையில் பொடுகு தொல்லை ஏற்படும். அதற்கு விளக்கெண்ணெய்யும் ஆலிவ் எண்யையும் ஒன்றுக்கு இரண்டு என்ற விதத்தில் கலந்து சூடுபடுத்தி தலையில் ஆயில் மசாஜ் செய்யவும். பின் தலை அலசலாம் வாரம் மூன்று முறை இதனை செய்து குளிக்கலாம் இதனால் பொடுகு தொல்லை நீங்கும்.

முகம் எண்ணெய் வழிவது குறைய

எண்ணெய் பசை சருமம் உள்ளவர்கள் வெயிலில் சென்று வீடு திரும்பியதும் தயிர், கடலை மாவு, எலுமிச்சைசாறு ஆகிய மூன்றையும் கலந்து முகத்தில் பூசி சிறிது நேரம் கழித்து கழுவினால் எண்ணெய் வழிவது குறைந்து முகம் பளபளக்கும்.

காலையில் குளிப்பதற்கு முன்பு வெள்ளரிக்காயை துண்டுகளாய்க்கி முகத்தில் தேய்த்துவிட்டு பத்து நிமிடங்கள் கழித்து முகத்தை கழுவினால்  முகத்தில் அதிகமாக எண்ணெய் வழிவதை தவிர்க்கலாம்.

வறண்ட சருமம் மென்மையாக

வெயிலில் சென்று வீடு வந்ததும்  வெதுவெதுப்பான தேங்காய் பால் அல்லது வாசலின் எடுத்து முகத்தில் தடவி விட்டுமசாஜ் செய்யவும். 15 நிமிடங்கள் கழித்து வெது வெதுப்பான நீரில் முகம் கழுவினால் வறண்ட சருமத்தை மென்மையாக மாற்றும்.

சருமம் பட்டுப்போல மின்ன

சிறிது எலுமிச்சைசாறுடன் சமஅளவு பன்னீர், மஞ்சள் தூள் கலந்து இக்கலவையை முகத்தில் மாஸ்க் போலப் பூசி அரை மணி நேரம் கழித்து முகம் கழுவினால் வெயிலால் பாதிப்படைந்த உங்கள் சருமம் பட்டுபோல ஜொலிக்கும்.

இதையும் படியுங்கள்:
நோ மேக்கப் லுக்: இயற்கையான பொலிவைப் பெற சில எளிய வழிகள்!
tamil-beauty-tips

முகம் கறுப்பாவதை தடுக்க

கிர்ணிப் பழம் அல்லது தர்ப்பூசணி பழத்தின் சாறை முகத்தில் பூசி ஊற விட்டு 10 நிமிடங்கள் கழித்துக் கழுவினால் முகம் கருப்பாவதை தடுக்கலாம்.

சோர்வு, முகச்சுருக்கம் நீங்க

வெயிலில் சென்று வீடு திரும்பியதும் முகத்தில் முட்டையின் வெள்ளைக்கருவை மட்டும் மாஸ்க் போல பூசி ஊறவிட்டு 10 நிமிடம் கழித்து முகத்தை கழுவினால் முகத்தில் இருக்கும் சோர்வு, முகச் சுருக்கங்கள் நீங்கும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com