நோ மேக்கப் லுக்: இயற்கையான பொலிவைப் பெற சில எளிய வழிகள்!


Get a natural glow
Get a natural glow
கே.எஸ்.கிருஷ்ணவேனி

Iam a graduate from Vaishnav College in the year 1984. My writings were published in Mangayar Malar,Aval Vikadan,Kumudham Sneghethi since 1992 and received many prizes. Now I am writing in Kalki Publications. Cooking, writing, playing Shuttle cock & making fur dolls are my passions.

Updated on

ளபளப்பான சருமத்தைப்பெற தினமும் 3-4 லிட்டர் தண்ணீர் குடிப்பது, விட்டமின் சி சீரம் பயன்படுத்துவது மற்றும் சன்ஸ்கிரீன் போடுவது ஆகியவை அவசியம். அத்துடன் ஆரோக்கியமான உணவுகள், தேவையான தூக்கம் போன்றவையும் பொலிவான சருமத்திற்கு அவசியம்.

பளபளப்பான சரும (Glowy/Dewy Skin) மேக்கப் ட்ரெண்டில் முதலிடத்தில் உள்ளது. இது சருமத்திற்கு ஈரப்பதம், ஆரோக்கியமான, கண்ணாடியைப் போன்ற(Glass Skin)பிரகாசத்தைத் தருகிறது. கனமான பவுண்டேஷன்களுக்கு பதிலாக சருமத்தை சுவாசிக்க வைக்கும் லேசான தயாரிப்புகள், ஹைலைட்டர்கள் மற்றும் ஈரப்பதமூட்டும் மேக்கப் பயன்படுத்தப்படுகிறது.

மரினேட்டட் மேக்கப் (Marinated Makeup):

மேக்கப் போடுவதற்கு முன் சரும பராமரிப்பு (moisturizer, serum) பொருட்களை சருமத்தில் தடவி 20 நிமிடங்கள் கழித்து மேக்கப் செய்வதன் மூலம் நீண்ட நேரம் பளபளப்பு கிடைக்கும். இது செயற்கைத்தன்மை இல்லாமல், சருமம் இயற்கையாகவே ஈரப்பதத்துடனும், ஆரோக்கியமாகவும், கண்ணாடி போல மின்னும் தோற்றத்தையும் வழங்குகிறது.

சாடின் ஃபினிஷ் (Satin Finish): 

சாட்டின் ஃபினிஷ் என்பது மேட் மற்றும் பளபளப்பான தோற்றத்திற்கு இடைப்பட்ட, இயற்கையான, மென்மையான மற்றும் லேசான பிரகாசத்தைக் கொடுக்கும். இது சருமத்திற்கு ஈரப்பதம் அளிப்பதுடன் ஆரோக்கியமான மற்றும் 'உள்ளிருந்து ஒளிரும் '(glow-from-within) தோற்றத்தைத் தருகிறது. அதிகப்படியான பளபளப்பை தவிர்த்து, மென்மையான ஃபோகஸ் மற்றும் ஏர்பிரஷ்டு (Airbrushed) தோற்றத்தைத் தரும் சாடின் பவுண்டேஷன்கள் ட்ரெண்டில் உள்ளன. இது தினசரி பயன்பாட்டிற்கு மிகவும் ஏற்றது.

இதையும் படியுங்கள்:
ஆறு கஜ அதிசயம்: இந்திய மாநிலங்களின் சேலை அலங்காரங்கள்!

Get a natural glow

டியூவி/கிளாஸி ஸ்கின் (Dewy/Glass Skin):

சருமம் நீர்ச்சத்துடனும், பனிக்கட்டி போன்ற பிரகாசத்துடனும் இருக்க, ஹைலூரோனிக் அமிலம் (Hyaluronic acid) கொண்ட சீரம் மற்றும் லேசான பவுண்டேஷன்களைப் பயன்படுத்தவும். இது சருமத்தை ஈரப்பதமாகவும், ஆரோக்கியமாகவும் காட்டும் ஒரு ஸ்டைல். கொரியன் அழகுக்கலை மூலம் புகழ்பெற்ற இது, சருமத்தை கண்ணாடிபோல மென்மையாகவும் பளபளப்பாகவும் மாற்றுவதாகும்.

இலுமினேட்டர் மற்றும் ஹைலைட்டர்: 

முகத்தின் உயரமான பகுதிகளான கன்னத்து எலும்புகள், மூக்கின் முனை மற்றும் புருவ எலும்புகளில் ஹைலைட்டரை தடவுவது கூடுதல் பொலிவைத்தரும். திரவ அல்லது கிரீம் சார்ந்த ஹைலைட்டர்களை கன்னம் மற்றும் புருவ எலும்புகளில் பயன்படுத்தி இயற்கையான பளபளப்பை சருமத்தில் கொண்டு வருவது ட்ரெண்டாகி உள்ளது.

ஜூசி உதடுகள் (Jluicy/Glossy Lips):

பளபளப்பான மேக்கப்பிற்கு ஏற்றவாறு உதடுகளில் லிப் க்ளாஸ் அல்லது ஆயில் பயன்படுத்துவது இப்போதைய ட்ரெண்ட். பளபளப்பான மற்றும் குண்டான உதடுகளைப்பெற, ஈரப்பதமூட்டும் லிப் பாம் தடவிய பின் நல்ல தரமான லிப் கிளாஸ் அல்லது ஷிம்மர் லிப்ஸ்டிக் பயன்படுத்தலாம். உதடுகளை மென்மையாக வைத்திருக்க அடிக்கடி ஈரப்பதமூட்டவும், வாட்டர்-ஜெல் லிப் டின்ட்கள் பளபளப்பான தோற்றத்தைத் தரும். உதடுகளில் உள்ள காய்ந்த தோலை நீக்க (exfoliate) மென்மையான ஸ்க்ரப் பயன்படுத்துவது உதடுகளை பளபளப்பாக்கும்.

நோ மேக்கப் லுக் (No Makeup Look):

இது அதிக மேக்கப் போடாதது போன்ற தோற்றத்தை அளிக்கும். மிகக்குறைந்த அழகு சாதனப் பொருட்களைப் பயன்படுத்தி மேக்கப் போடாதது போன்ற இயற்கையான, பொலிவான தோற்றத்தை உருவாக்கும் கலை இது. முகத்தில் உள்ள சிறு குறைகளை மறைத்து, இயல்பான அழகை மேம்படுத்திகாட்ட உதவும்.

இதையும் படியுங்கள்:
க்ளாஸ் ஸ்கின் முதல் நீல ஐ ஷேடோ வரை: 2026-ன் லேட்டஸ்ட் மேக்கப் கையேடு!

Get a natural glow

பளபளப்பான சருமத்தை பெறுவதற்கு மேக்கப் செய்வதற்கு முன்பு வைட்டமின் சி ஃபேஸ்வாஷ் மற்றும் சருமத்தை நன்கு மாய்ஸ்சரைஸ் செய்யவேண்டியது அவசியம். வெயில் காலத்தில் சருமத்தை பாதுகாக்க SPF  உள்ள ப்ரைமர்களை பயன்படுத்துவதும் அவசியம். பவுடர் தயாரிப்புகளுக்கு பதிலாக லிக்விட் ஹைலைட்டர், ப்ளஷ் மற்றும் பவுண்டேஷனை தேர்ந்தெடுக்கவேண்டும். மேக்கப் நீண்ட நேரம் பளபளப்பாக இருப்பதற்கு செட்டிங் ஸ்ப்ரேயைப் பயன்படுத்தவும்.

logo
Kalki Online
kalkionline.com