ட்ரெண்ட் ஆகிவரும் பெண்களுக்கான கண்கவர் ஹெட்பேண்ட்கள்!

headbands
headbandspixabay.com

தொன்றுதொட்ட காலம் முதலாகவே, பெண்களுக்கு அணிகலன்கள் மீது அலாதி பிரியம் உண்டு. ஒவ்வொரு உடல் பாகத்திற்கும் ஒவ்வொரு அணிகலன்களை விரும்பி அணிவார்கள். கைக்கு வலையல், காலுக்கு கொலுசு, இடுப்பிற்கு ஒட்டியாணம், கழுத்திற்கு நெக்லஸ், மார்பிற்கு ஆரம், புஜங்களுக்கு வங்கி, நெற்றிக்கு நெற்றிச்சுட்டி என்று ஒவ்வொரு நகையையும் ரசித்து அணிந்து கொண்டார்கள் என்றே கூறலாம்.

ஆனால் தலைக்கு பெண்கள் எதுவும் பயன் படுத்தவில்லையா? சூரிய பிரபை மற்றும் சந்திர பிரபையை அணிந்து கொண்டார்கள். இப்போது அதில் மாற்றம் ஏற்பட்டு ஹேர்பேண்ட்களாக வடிவெடுத்துள்ளது. தற்போது தலைக்கு ஹேர்பேண்ட் அனிவதே பேஷனாகும். இப்போதுள்ள பெண்களை கவருவதற்கு விதிவிதமான மற்றும் வித்தியாசமான ஹேர்பேண்ட்கள் சந்தையில் வந்துவிட்டது. அவற்றில் சிலவற்றை பற்றி தான் இன்று பார்க்க உள்ளோம்.

1. பீட்ஸ் ஹெட்பேண்ட் (Beads headband)

Beads headband
Beads headbandpixabay.com

இந்த வகை ஹெட்பேண்ட்களில் ஓரடுக்கு முதல் ஐந்தடுக்குகள் வரை மணிகளும், கற்களும் பதிக்கப்பட்டிருக்கும். இவ்வகை ஹெட்பேண்ட்களை புடவையுடன் அணிவது சிறந்ததாக இருக்கும்.

 

2. டெரகோட்டா ஹெட்பேண்ட் (Terracotta headband)

Terracotta headband
Terracotta headbandpixabay.com

இவ்வகை ஹெட்பேண்ட்கள் டெரகோட்டாவில் கண்ணாடி பதிக்கப்பட்டவையாகும். நம்மிடம் உள்ள ஆடைகளுக்கு ஏற்ற நிறங்களில் சந்தையில் கிடைக்கும். கவுன் மற்றும் லெஹாங்கேயுடன் அணிந்தால் மிகவும் சிறப்பாக இருக்கும்.

3. குந்தன் ஹெட்பேண்ட் (Kundan headband)

Kundan headband
Kundan headbandpixabay.com

இவ்வகை ஹெட்பேண்ட்கள் குந்தன் கற்களால் ஆனதாகும். பூக்களை தலையில் அடுக்கினாற்போல காட்சியளிக்கும். மின்னும் கற்களுடன் கண்ணை பறிக்கும் அழகுடன் இருக்கும். இதை புடவை மற்றும் ஸ்லீவ்லெஸ் ஆடையுடன் சேர்த்து அணியலாம்.

4. ரெயின்ஸ்டோன் ஹெர்பேண்ட் (Rhines tone headband)

Rhinestone headband
Rhinestone headbandpixabay.com

இந்த ஹெட்பேண்ட் பார்ப்பதற்கு பலவித கற்களை கொண்டு அடுக்கி வைத்தது போல இருக்கும். இந்த வகை ஹெட்பேண்ட் இளம்பெண்களிடம் மிகவும் பிரபலமாக உள்ளது. பலவித வண்ண கற்கள் மிண்ணும் இவ்வகை ஹெட்பேண்ட்கள் முகத்தை பிரகாசமாக காட்டும். இதை லெஹான் போன்ற ஆடைகளுடனும், கவுன் போன்ற உடையுடனும் சேர்த்து அணியலாம்.

5. வெல்வெட் ஹெட்பேண்ட் (Velvet headband)

Velvet headband
Velvet headbandpixabay.com

வெல்வெட் ஹெட்பேண்ட்கள் பார்ப்பதற்கு அழகாக இருப்பது மட்டுமில்லாமல், அணிந்து கொள்வதற்கு வசதியாகவும் இருக்கும். இதை அதிக காலம் பயன்படுத்தலாம் நன்றாக உழைக்க கூடியதாகும்.

இதையும் படியுங்கள்:
அதிக நேர தூக்கம் ஆரோக்கிய அபாயம் என்பதை அறிவீர்களா?
headbands

6. போவ் ஹெட்பேண்ட் (Bow headband)

Bow headband
Bow headbandpixabay.com

இது 1950ல் ஹாலிவுட் நடிகைகள் அணிந்திருந்த ஹெட்பேண்ட் வகைகளாகும். இன்னும் அதன் மவுசு குறையாமல் இருக்கிறது. இந்த வகை ஹெட்பேண்ட்களை பார்டிகளுக்கு அணிந்து செல்வது சிறந்ததாகும்.

7. அலைஸ் இன் தி ஒன்டர்லேன்ட் ஹெட்பேண்ட் (Alice in the wonderland headband)

Alice in the wonderland headband
Alice in the wonderland headbandpixabay.com

Alice in the wonderland மிகவும் புகழ்பெற்ற நாவலாகும். அதில் வரும் அலைஸ் என்னும் கதாப்பாத்திரம் அணிந்திருக்கும் ஹெட்பேண்ட் பெண்களிடம் மிகவும் பிரபலமானது. இதில் கருப்பு நிற ஹெட்பேண்ட் மிகவும் பிரபலமாகும். இதை கவுனுடன் அணியும் போது மிகவும் க்யூட்டாக இருக்கும்.

8. போல்கா டாட் ஹெட்பேண்ட் (Polka dot headband)

Polka dot headband
Polka dot headbandpixabay.com

இந்த வகை ஹெட்பேண்ட்கள் பெண்கள் மத்தியில் மிகவும் பிரபலமானது. இவ்வகை ஹெட்பேண்ட்களை கவுனுடன் அணிவது சிறப்பாகவும், ஸ்டைலிஷ் ஆகவும் இருக்கும். புள்ளிகள் வைத்து அழகாக இருக்கும் இவ்வகை ஹெட்பேண்ட் எப்போதுமே டிரெண்டில் உள்ளதாகும்.

9. பிரைடட் ஹெட்பேண்ட் (Braided headband)

Braided headband
Braided headbandpixabay.com

இவ்வகை ஹெட்பேண்ட்கள் தற்போதைய பேஷன் உலகில் மிகவும் பிரபலமானதாகும். இது எல்லா நிறங்களிலும் கிடைக்கிறது. இதை அணிந்தால் தலையை பிண்ணியது போலவே காட்சியளிக்கும். இதை முடி அடர்த்தியாக தெரிவதற்காக பெண்கள் அணிந்து கொள்கிறார்கள்.

10. மெட்டல் பிளவர் ஹெட்பேண்ட் (Metal flowered headband)

Metal flowered headband
Metal flowered headbandpixabay.com

இந்த வகை ஹெட்பேண்ட்களை ஒருகாலத்தில் ரோமானியாவில் உள்ள ஆண்கள் மற்றும் பெண்கள் அணிந்திருந்தார்கள். ஆனால் இன்று இது பெண்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக உள்ளது. தங்க நிற பூக்களும், இலைகளும் கொண்டு கற்களால் அலங்கரிக்கப்பட்டு தலையில் அணியும் போது கிரேக்க கடவுளை போன்று அழகை தரும். அதனால் பெண்கள் மத்தியில் இதன் மவுசு கூடியிருக்கிறது என்றே கூற வேண்டும்.

எனவே தற்போது உள்ள ஃபேஷனுக்கு ஏற்ற வகையில் உங்களுக்கு பிடித்த ஹேர்பேண்ட்களை வாங்கி அணிந்து மகிழுங்கள்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com