முடிகொட்டுற கவலைய விடுங்க... ட்விஸ்டட் பிரெய்ட்ஸ் போட்டு ஹீரோயின் மாதிரி மாற இதை படிங்க!

Twisted Braids
Twisted Braids
Published on

பெண்கள் சாதாரணமாக வெளியே செல்வதற்கோ அல்லது பிரம்மாண்டமான பார்ட்டிகளுக்கு செல்வதற்கோ என எல்லா இடங்களுக்கும் பக்காவாக செட் ஆகும் ஒரு ஹேர் ஸ்டைல் என்றால் அது ட்விஸ்டட் பிரெய்ட்ஸ் (Twisted Braids) தான். பார்ப்பதற்கு மிகவும் நேர்த்தியாகவும், ரொம்பவே மாடர்னாகவும் இருக்கும் இந்த ஸ்டைலை நாமே சுலபமாக வீட்டில் போட்டுவிடலாம். 

ஆரம்பத்தில் கொஞ்சம் சிரமமாகத் தெரிந்தாலும், சில நுணுக்கங்களை கற்றுக் கொண்டால் நீங்களும் இதில் அசத்தலாம். அப்படிப்பட்ட சில பிரத்தியேக டிப்ஸ்களை இந்தப் பதிவில் பார்க்கலாம்.

சரியான பொருட்களை தேர்ந்தெடுங்கள்!

எந்த ஒரு ஹேர் ஸ்டைலாக இருந்தாலும் அதன் பேஸ் ரொம்ப ஸ்ட்ராங்காக இருக்க வேண்டும். முடிக்கு சரியான நரிஷ்மென்ட் கொடுக்க ஒரு தரமான Leave-in Conditioner பயன்படுத்துவது மிக மிக அவசியம். இது முடியை சிக்கில்லாமல் ரொம்பவே சாஃப்ட்டாக வைத்திருக்கும். அதேபோல, நீங்கள் போடும் அந்த முறுக்கல்கள் அப்படியே கலையாமல் இருக்க லைட்டான ஸ்டைலிங் ஜெல் அல்லது க்ரீம் தடவிக் கொள்ளலாம். இந்த வேலைகளை ஆரம்பிக்கும் முன், தலைமுடி சுத்தமாகவும் ஈரம் இல்லாமலும் இருப்பதை உறுதி செய்து கொள்ளுங்கள்.

ட்விஸ்ட் செய்யும் நுணுக்கங்கள்!

முதலில் உங்கள் தலைமுடியை உங்களுக்குத் தேவையான தடிமனுக்கு ஏற்ப சிறுசிறு பிரிவுகளாக நேர்த்தியாகப் பிரித்துக் கொள்ள வேண்டும். இப்போது இரண்டு முடி இழைகளை மட்டும் கைகளில் எடுத்துக்கொண்டு, வேர்ப் பகுதியில் இருந்து நுனி வரைக்கும் கொஞ்சம் டைட்டாக முறுக்கிக் கொண்டே வர வேண்டும். 

பார்ப்பதற்கு அழகாக இருக்க வேண்டும் என்றால், ஒவ்வொரு ட்விஸ்ட்டும் ஒரே அளவிலும் ஒரே இறுக்கத்திலும் இருப்பது ரொம்பவே முக்கியம். முதல் முறையே பெர்ஃபெக்ட்டாக வராவிட்டாலும், கொஞ்சம் பொறுமையாகப் பழகினால் இது மிக எளிதாக வந்துவிடும்.

புதுமையான ஸ்டைல்கள்!

இந்த பேசிக் ட்விஸ்டிங் முறையில் நீங்கள் கை தேர்ந்துவிட்டால், உங்களின் கற்பனைத் திறனுக்கு ஏற்ப பல வித்தைகளை முடியில் காட்டலாம். சாதாரணமாக முறுக்குவதோடு விட்டுவிடாமல், அதனுடன் கொஞ்சம் எக்ஸ்ட்ரா முடிகளைச் சேர்த்து Fishtail மாடலில் முயற்சி செய்தால் உங்களின் லுக் வேற லெவலில் இருக்கும். இதைத் தவிர, பிரெஞ்சு பிரெய்ட்ஸ் அல்லது டச் பிரெய்ட்ஸ் போன்ற பிரபலமான ஸ்டைல்களோடு இந்த ட்விஸ்ட்டை இணைத்து ஒரு தனித்துவமான மாடலை நீங்களே உருவாக்கலாம்.

இதையும் படியுங்கள்:
இனி கஷ்டப்பட்டு சாலட் சாப்பிட வேண்டாம்! உங்கள் சாலட்டை 'ரெஸ்டாரண்ட் ஸ்டைல்' ஆக மாற்றும் ரகசிய வித்தை!
Twisted Braids

பராமரிக்கும் முறைகள்!

கஷ்டப்பட்டு போட்ட இந்த ஹேர் ஸ்டைல் நாள் முழுவதும் கலையாமல் இருக்க சில பராமரிப்பு முறைகளை ஃபாலோ செய்வது கட்டாயம். இரவு தூங்கச் செல்லும்போது முடியில் ஏற்படும் உராய்வைத் தவிர்க்க, தலையில் ஒரு ஸ்கார்ஃப் கட்டிக்கொள்ளலாம். பகல் நேரங்களில் முடியை அடிக்கடி இழுப்பதையோ அல்லது கலைப்பதையோ முற்றிலும் தவிர்த்து விடுங்கள். 

முறுக்கப்பட்ட அந்த முடிகளுக்கு அடியில் இருக்கும் ஸ்கால்ப் பகுதியையும் ஆரோக்கியமாக வைத்திருக்க, தேங்காய் எண்ணெய் அல்லது ஆலிவ் ஆயில் போன்ற இயற்கையான எண்ணெய்களை லேசாகத் தடவி ஈரப்பதத்தை மெயின்டெயின் செய்வது உங்களின் முடியை  பாதிப்பு ஆகாமல் பாதுகாக்கும்.

இதையும் படியுங்கள்:
நிமிடங்களில் மாறும் லுக்! - எந்த முக அமைப்பிற்கு எந்த வகை கொண்டை அழகு?
Twisted Braids

உங்களின் முக அமைப்பையே மாற்றி மிகவும் அழகாகக் காட்டக்கூடிய அற்புதம் இந்த ட்விஸ்டட் பிரெய்ட்ஸ் ஹேர் ஸ்டைலிடம் உள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com