
தற்போது உள்ள காலக்கட்டத்தில் வெயிலில் அதிகமாக அலைய வேண்டிய சூழ்நிலை உள்ளது. இதனால் சருமம் பாதிப்பது மட்டுமில்லாமல், சருமத்தில் சுருக்கம், கோடுகள், கரும்புள்ளிகள், பருக்கள் என்று அதிக பிரச்னைகள் ஏற்படுகின்றன. இதை சரிசெய்ய சிறந்த வழி Tretinoine க்ரீம் பயன்படுத்துவதாகும்.
Tretinoine என்பது ஒரு வகை செயற்கையான வைட்டமின் A ஆகும். இதை பயன்படுத்துவதற்கு முன்பு கண்டிப்பாக சரும நோய் மருத்துவரின் பரிந்துரையை கேட்க வேண்டியது அவசியமாகும். இதை சருமத்தில் தடவியது அரிப்பு ஏற்படும். இதன் மூலமாக பழைய செல்கள் இறந்து விரைவில் புதிய செல்கள் உருவாகத் தொடங்கும். இதை பயன்படுத்துவதால் சருமத்தில் Exfoliation Process வேகமாக செயல்பட்டு கொலாஜென் மற்றும் நெகிழ்வுத்தன்மையை அதிகரித்து சருமத்தை மிருதுவாகவும், பளபளப்பாகவும் மாற்றுகிறது.
இந்த க்ரீமை சருமத்தில் அதிகமாக பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். முகத்தில் அதிகமாக இருக்கும் முகப்பருக்கள், சுருக்கங்களை குறைத்து சருமத்தில் செல்களை புதுப்பிக்கிறது. மெலாஸ்மா, பிக்மெண்டேஷனை சரிசெய்து சருமத்தில் இருக்கும் கருப்பு திட்டுகளை போக்குகிறது. இதனால் சருமம் பளபளப்பாகவும், ஆரோக்கியமாக மாறுவதற்கு உதவுகிறது. Tretinoin க்ரீம் 0.025, 0.05, 0.1 என்று சருமத்தின் தன்மைக்கு ஏற்றப்படி வருகிறது.
இதில் எது உங்கள் சருமத்திற்கு உகந்ததாக இருக்கிறதோ அதை வாங்கிப் பயன்படுத்துவது சிறந்தது. கர்ப்பமாக இருக்கும் பெண்கள், குழந்தைக்கு பாலூட்டும் தாய்மார்கள், வெயிலில் அதிகமாக வேலை செய்பவர்கள், மருந்துகள் எடுத்துக் கொள்வர்கள் இதை பயன்படுத்துவதற்கு முன்பு கண்டிப்பாக சரும மருத்துவரை கலந்து ஆலோசிக்க வேண்டும்.
Tretinoine பயன்படுத்தும் முறை, முகத்தை நன்றாக சுத்தமாக கழுவிவிட்டு 30 நிமிடம் உலர விடவும். பிறகு விரல் நுனியில் சிறிதளவு Tretinoine க்ரீமை எடுத்து முகத்தில் பாதிப்பு ஏற்பட்டிருக்கும் இடத்தில் தடவ வேண்டும். அதிகமாக இந்த க்ரீமை பயன்படுத்துவது சருமத்தில் அரிப்பை ஏற்படுத்தும்.
தூங்க செல்வதற்கு முன் பயன்படுத்துவது சிறந்தது. ஒருநாளைக்கு ஒருமுறை மட்டுமே பயன்படுத்த வேண்டும். Tretinoine க்ரீமை பயன்படுத்திய பிறகு வெயிலில் அலைவதை தவிர்ப்பது நல்லது. இதை பயன்படுத்தி 2 அல்லது 3 வாரத்தில் சருமத்தில் நல்ல மாற்றத்தை காணலாம்.