
கடலைமாவுடன் சிறிது மஞ்சள் தூள், எலுமிச்சை சாறு, ஒரு டேபிள் ஸ்பூன் பால் கலந்து முகத்தில் தடவி, காய்ந்தவுடன் மிதமான சுடுநீரில் கழுவ முகம் மிருதுவாகும்.
சந்தனம், முல்தானிமட்டி கலந்து "பேஸ் பேக்" உபயோகித்து வர, முகம் பொலிவாகவும், மிருதுவாகவும் மாறும்.
பச்சை உருளைக்கிழங்கின் சாற்றை முகத்தில் தடவி வர சூரியக்கதிர்களால் ஏற்படும் கருமை நிறம் மறையும்.
பூசணிக்காயை சிறு துண்டுகளாக்கி, அதைக் கண்களை சுற்றி வைக்க, கண்களை சுற்றி ஏற்படும் கருவளையம் மறைந்துவிடும்.
ஆலிவ் எண்ணெயுடன் சர்க்கரை கலந்து உள்ளங்கைகளில் தடவி வர உள்ளங்கைகளின் கடினத்தன்மை மறைந்து மிருதுவாகும்.
பப்பாளிப் பழத்தை அரைத்து முகத்தில் தொடர்ந்து தடவி வர முகப்பரு, கரும்புள்ளி ஆகியவை மறையும்.
தயிருடன் கடலைமாவு கலந்து முகத்தில் தடவி 15 நிமிடம் கழித்துக்கழுவிவர முகத்தில் ஏற்படும் சுருக்கங்கள் மறைந்துவிடும்.
தேன் மற்றும் எலுமிச்சைச் சாறு கலந்த கலவையை உதட்டின் மீது தொடர்ந்து தடவி வந்தால், தரம் குறைந்த லிப்ஸ்டிக் பயன்படுத்துவதால் ஏற்படும் கருமை நிறம் மறையும்.
வெள்ளரிச்சாறு, சந்தனப்பொடி, கடலை மூன்றையும் சம அளவு கலந்து முகத்திற்கு தினமும் போட்டு வந்தால் முகம் அழகாக இருக்கும்.
புளித்த மோரை முகத்தில் 15 நிமிடம் தடவி, மிதமான சுடுநீரில் கழுவ முகம் பொலிவு பெறும். இதைத்தொடர்ந்து இரண்டு வாரம் செய்து வர நல்ல பலன் கிடைக்கும்.
முழங்கை கருப்பாகவும், சொர சொரப்பாகவும் இருந்தால் தேங்காய் எண்ணெயுடன் எலுமிச்சைசாறு கலந்து தடவி வர மிருதுவாக மாறும்.
முகம் மிருதுவாகவும், ரோஸ் நிறத்துடன் இருக்க ரோஜாப்பூ இதழ்களை அரைத்து அதோடு பால், பச்சை பயிறு மாவு மற்றும் ரோஸ் வாட்டர் கலந்து முகம் மற்றும் கழுத்தில் தடவி வர சருமம் பளபளக்கும்.