
பாதாம் பருப்பு சத்தான உணவாக மட்டுமில்லாமல் அழகை மேம்படுத்தவும் பயன்படுகிறது. பாதாமில் வைட்டமின் டி, ஆன்டி ஆக்ஸிடென்ட், கொழுப்பு அமிலம் இருக்கின்றன. இவை சருமத்தின் ஆழம் வரை சென்று ஊட்டமளிக்கிறது. சருமத்தில் நெகிழ்வுத்தன்மை ஏற்படுத்துகிறது. மேலும் விரைவாக முதுமை தோற்றம் ஏற்படுவதையும் தடுக்கிறது. இதனால் பல்வேறு அழகுசாதனப் பொருட்களில் பாதாம் பயன்படுத்துகிறார்கள். இத்தகைய பாதாமை இயற்கையாக சருமத்தில் பயன்படுத்தும் போது நல்ல பலனைப் பெற முடியும். பொலிவான சருமத்தை பெற பாதாமை எப்படியெல்லாம் சருமத்தில் பயன்படுத்தலாம் என்பதை பார்ப்போம்.
1.பாதாம் பால் face pack
இரவு தூங்குவதற்கு முன்பு 5 பாதாமை பாலில் ஊறவைக்க வேண்டும். மறுநாள் அவற்றை நன்றாக அரைத்து விழுதாக்க வேண்டும். பிறகு அதை முகத்தில் தடவி 20 நிமிடம் ஊற வைத்து பிறகு வெதுவெதுப்பான நீரில் முகத்தை கழுவினால் முகம் பளபளப்பாகவும், புத்துணர்ச்சியுடனும் இருக்கும்.
2. பாதாம் எண்ணெய்
பாதாம் எண்ணெய்யை சருமத்தில் பயன்படுத்தும் போது ஆழமாக சருமத்தில் நுழைந்து சருத்தை ஈரப்பதத்துடன் வைத்துக் கொள்ளும். சிறிதளவு பாதாம் எண்ணெய்யை எடுத்து இரவு தூங்குவதற்கு முன் முகத்தில் தடவி நன்கு மென்மையாக மசாஜ் செய்ய வேண்டும். இதை இரவு முழுவதும் முகத்தில் அப்படியே விட வேண்டும். இவ்வாறு இரவு தொடர்ந்து செய்து வந்தால் முகம் பளிச்சென்று இருக்கும்.
3. பாதாம் பன்னீர் டோனர்
முதலில் 5 பாதாமை முதலில் அரைத்து வடிகட்டி சாறு எடுத்துக் கொள்ள வேண்டும். பிறகு அதனுடன் சமஅளவு பன்னீரை கலந்துக் கொள்ள வேண்டும். பின்பு பஞ்சு பயன்படுத்தி இந்த டோனரை தினமும் முகத்தில் தடவி வந்தால் முகம் பளிச்சென்று மாறும், சருமத்தில் உள்ள துளைகள் இறுக்கம் அடைந்து முகத்தில் உள்ள மேடு பள்ளங்கள் மறையும்.
4. பாதாம் தேன் ஸ்க்ரப்
இந்த ஸ்க்ரப் செய்வதற்கு முதலில் 5 பாதாமை எடுத்து அரைத்து கொரகொரப்பாக பொடி செய்து வைத்துக் கொள்ள வேண்டும். பின்பு அதில் 1 தேக்கரண்டி தேன் சேர்த்து இந்த கலவையை முகத்தில் தடவி ஸ்க்ரப் செய்துவிட்டு பத்து நிமிடம் நன்றாக ஊற வைக்க வேண்டும். பிறகு குளிர்ந்த நீரால் முகத்தை கழுவ வேண்டும். இந்த ஸ்க்ரப்பை வாரத்திற்கு இருமுறை முகத்தில் பயன்படுத்தி வந்தால் முகம் நன்றாக பொலிவாவதை கண்க்கூடாக காணலாம்.
5. பாதாம் தயிர் பேஸ்பேக்
இந்த பேஸ்பேக் செய்வதற்கு ஒரு பவுலில் பாதாம் பொடியுடன் தயிர் சேர்த்து விழுதாக அரைத்து எடுத்துக் கொள்ளவும். பிறகு அதை முகத்தில் தடவி நன்றாக 20 நிமிடம் ஊற வைக்கவும். பிறகு குளிர்ந்த நீரால் முகத்தை நன்றாக கழுவ வேண்டும். இவ்வாறு செய்துவர முகம் நன்றாக கண்ணாடி போல ஜொலிக்கும்.