
நம்முடைய வாழ்க்கையில் நல்ல நிலைக்கு முன்னேறுவதற்கு நம் முயற்சியும், கடவுளின் ஆசிர்வாதமும் மிகவும் முக்கியமாகும். அதுவும் குலதெய்வத்தின் ஆசிர்வாதம் மிகவும் முக்கியம். அந்த குலதெய்வத்தை வீட்டில் நிலை நிறுத்த நாம் செய்ய வேண்டிய எளிமையான பரிகாரத்தை பற்றி இந்தப் பதிவில் காண்போம்.
திறமைகள், வசதிகள் இருந்தும் வாய்ப்புகள் சரியாக கிடைக்காததால் ஒரு சிலருக்கு அங்கீகாரம் கிடைக்காது. வீட்டில் எல்லாம் இருந்தும் சந்தோஷம் இருக்காது. சரியான நேரத்தில் திருமணம், வேலை போன்றவை கிடைக்காமல் இருக்கும். இது வீட்டில் குலதெய்வத்தின் சக்தி குறைவாக இருப்பதால் ஏற்படலாம்.
உங்களுடைய இஷ்ட தெய்வம் பெருமாளாக இருந்தால், பெருமாளுக்கு உகந்த நாளான சனிக்கிழமையில் இரண்டு அகல் விளக்குகளை எடுத்துக் கொண்டு அதில் நல்லெண்ணெய் விட்டு இரண்டு பஞ்சு திரி போட்டு அந்த எண்ணெய்யில் பச்சைக் கற்பூரம், ஏலக்காய், கற்கண்டு இவற்றை வைத்து பெருமாளை வழிப்படும் போது அவரின் சக்தியை வீட்டில் நிலைநிறுத்தலாம். இந்த வழிப்பாட்டை காலை 6 முதல் 7 வரை செய்வதின் மூலம் பெருமாளின் ஆசிர்வாதம் அனுகிரகம் உங்களுக்கு நிறைவாக கிடைக்கும்.
ஒரு சிலருக்கு அம்மன் குலதெய்வமாக இருக்கும். சமயபுரத்து அம்மனோ அல்லது வராகி அம்மனோ... வெள்ளிக்கிழமை காலை 6 முதல் 7 வரை இந்த பூஜையை செய்யவும். மூன்று அகல் விளக்கை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் நல்லெண்ணெய் விட்டு பஞ்சி திரி போட்டு அதில் மஞ்சளை பிள்ளையார் பிடிப்பது போல பிடித்து எண்ணெய்யில் வைத்து அம்மனின் நாமத்தை கூறி வழிப்பாடு செய்ய வேண்டும்.
சிவபெருமானை இஷ்ட தெய்வமாக கொண்டவர்கள் ஒவ்வொரு திங்கள் கிழமையன்றும் ஒரு அகல் விளக்கில் நல்லெண்ணெய் ஊற்றி அதில் விபூதியை விநாயகர் போல பிடித்து அந்த எண்ணெய்யில் வைத்து சிவனுடைய நாமத்தை உச்சரித்து வழிப்பாடு செய்ய வேண்டும். இவ்வாறு செய்யும் போது சிவபெருமானின் அருள் முழுமையாக கிடைக்கும். சிவபெருமானை பொருத்தவரை நினைத்தாலே முக்தி அளிக்கக்கூடிய வல்லமை சிவபெருமானுக்கு உண்டு. தன் மீது உண்மையான பக்தியும், அன்பும் வைத்திருக்கும் பக்தர்கள் கேட்கக்கூடியதை அப்படியே வழங்கக்கூடிய கடவுள் சிவபெருமான் ஆவார்.
முருகனின் அருளும் ஆசியும் கிட்ட ஒவ்வொரு செவ்வாய் கிழமையும் ஐந்து அகல் விளக்குகளில் நல்லெண்ணெய் ஏற்றி வழிப்பாடு செய்ய வேண்டும். அகல் விளக்கு கீழ் கோலம் போட்டு அதை வைக்க வேண்டும். முருகனின் நாமத்தையும், திருமந்திரத்தையும் உச்சரித்து வழிப்பாடு செய்தால் மென்மேலும் வளர்ச்சி அடைவீர்கள்.
ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் நவகிரகங்களை நினைத்து ஒன்பது விளக்குகளை வைத்து வழிப்பாடு செய்யும் போது நவகிரகங்களின் ஆசியும் அருளும் கிடைக்கும். நவகிரகங்களில் அருள் நிறைவாக இருந்தால் வாழ்க்கையில் நல்ல நிலைக்கு செல்ல முடியும்.
சிலர் சித்தர்களை குருவாக நினைத்து வழிப்பாடு செய்வார்கள். ராகவேந்திரா, சாய்பாபா, ரமண மகரிஷி போன்றவர்களின் பொன்மொழிகளை வேத வாக்காக எடுத்துக் கொண்டு வாழ்வில் கடைப்பிடித்து வருவார்கள். அத்தகைய சித்தர்களின் ஆசி பரிபூரணமாக கிடைக்க காலை ஆறு முதல் ஏழு வரை வியாழக்கிழமையில் வீட்டில் அகல் விளக்கில் நல்லெண்ணெய் விட்டு பஞ்சி திரி ஏற்றி வழிப்பட்டால், அவர்களின் ஆசி நிறைவாக கிடைக்கும்.
இந்த பரிகாரங்கள் மிகவும் எளிமையானதே இதை செய்வதனால் தெய்வத்தின் ஆசி முழுமையாக கிடைக்கும். வாரத்திற்கு இருமுறையாவது விளக்கேற்றி இறைவழிப்பாடு செய்ய வேண்டும். எந்த வீட்டின் பூஜையறையில் தினமும் விளக்கு எரிகிறதோ அந்த வீட்டில் இறை சக்தி நிலைத்திருந்து அவர்களுக்கு தேவையான சகல சௌபாக்கியத்தையும் கொடுக்கும்.