பதின்பருவத்தினருக்கு பிடித்த ஜீன்ஸ் வகைகள்! Teens-Jeans-Types

Jeans types
Jeans types
Published on

டீன் ஏஜ் வயதினருக்கு மிகவும் பிடித்த உடைகளில் ஜீன்ஸ் பேன்டிற்கு கண்டிப்பாக தனி இடம் உண்டு. ஜீன்ஸ் பேன்ட் என்றதும் ஒரே மாதிரி இருக்கும் என்று நினைக்க வேண்டாம். அதில் பல்வேறு வகைகள் இருக்கின்றன. அவற்றைப் பற்றி விரிவாக இந்தப் பதிவில் காண்போம்.

1.Tappered fit

டேப்பர்ட் பிட் ஜீன்ஸ் இடுப்புப்பகுதியில் அகலமாகவும், கீழே குறுகலாகவும் இருக்கும். தொடைப்பகுதி வரை இந்த ஜீன்ஸ் வசதியாகவும், கணுக்கால் பகுதியில் டைட்டாகவும் இருக்கும்.  இதுதான் தற்போது டீன் ஏஜ் வயதினருக்கு ஃபேஷனாக இருக்கிறது.

2. Loose fit

இந்த வகை ஜீன்ஸ் பேன்ட் அதிகமாக இறுக்காமல் இயல்பாக மூச்சுவிட அனுமதிக்கும். இது தளர்வான உடையாகும். இது உங்கள் தொடையை சுற்றி இறுக்காமல் இருப்பதால் தொடையில் ஏற்படும் இறுக்கம் போன்ற அசௌகர்யங்கள் இந்த ஜீன்ஸை அணியும் போது ஏற்படாது. இடுப்பளவு பெரிதாக இருப்பவர்களுக்கு இந்த ஜீன்ஸ் அணிவது வசதியாக இருக்கும். இது தொடையை சுற்றி அதிக வியர்வையை எற்படுத்தாது. எனவே, இந்த ஜீன்ஸை அதிக நேரம் பயன்படுத்தலாம்.

3. Relaxed fit

உங்களுக்கு தடிமனான பெரிய தொடையிருந்தால் கண்டிப்பாக ரிலேக்ஸ்டு பிட் உங்களுக்கு கச்சிதமாக பொருந்தும். இதை அணியும் போது சௌகாரியமாக உடை அணியும் உணர்வை கொடுக்கும். அதிகப்படியான வியர்வையை தடுக்கும் வண்ணம் இந்த ஜீன்ஸ் அமைக்கப்பட்டுள்ளது.

4. Bootcut

90ஸ் கிட்ஸ்களுக்கு கண்டிப்பாக பூட் கட் பற்றி தெரிந்திருக்கும். பள்ளிப்பருவத்தில் இந்த பூட் கட் மாடலை அணியாதவர்கள் இருக்க முடியாது. தொடைப்பகுதி இயல்பாகவும், கால்பகுதி குழாய் போன்று விரிந்து இருப்பது தான் பூட்கட் மாடல். பாரம்பரிய பூட்கட் உயரம் அதிகமானதாக இருக்கும். ஆனால் தற்போது வரும் பூட்கட் உயரம் குறைவாகவே இருக்கிறது.

5. Slim fit

ஒல்லியான உடல்வாகைக் கொண்டவர்கள் விரும்பக்கூடிய உடையில் Slim fit இருக்கிறது. இது கால்களை ஷேப்பாக காட்ட உதவுகிறது. இந்த ஜீன்ஸ் குறுகலான, இறுக்கமானத் தன்மையைக் கொண்டது. இந்த வகை ஜீன்ஸ்கள் தொடையை சுற்றி நெருக்கமாக இருக்கும். இந்த வகை ஜீன்ஸூடன் டீ சர்ட்களுடன் அணிவது பொருத்தமாக இருக்கும். 

6. Low rise jeans

இது குறைந்த உயரமுள்ள ஜீன்ஸ் ஆகும். இது எல்லோருக்கும் பொருந்தாது. இந்த ஜீன்ஸை அணிவதற்கு சரியான பிட் தேவை. குறுகிய இடுப்பை உடையவர்கள் தங்கள் மேல் உடல் நீண்டதாக தோன்றுவதற்கு லோ ரைஸ் ஜீன்ஸ் அணிவது சிறந்த தேர்வாக இருக்கும்.

இதையும் படியுங்கள்:
சொடக்கு தக்காளி அவசியம் சாப்பிட வேண்டும் ஏன் தெரியுமா?
Jeans types

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com