
பொடுகு, முடி உதிர்தல், அரிப்பு என்ற பல பிரச்னைகளுக்கு கெமிக்கல் கலந்த ஷாம்பூ பயன்படுத்துகிறீர்களா? அட அதெல்லாம் வேண்டாம். இயற்கைப் பொருட்களைக் கொண்டு தயாரிக்கப்பட்ட ஷாம்பூ பயன்படுத்துங்க. சிலிகான், பாராபென் போன்ற கேடு விளைவிக்கும் கெமிக்கல் இல்லாத தயாரிப்புகள் பற்றிப் பார்ப்போமா?.
சுத்தமான தண்ணீர் கால் கப்புடன் லிக்விட் காசில் சோப் எடுத்து அதில் அரை டீஸ்பூன் ஜோஜோபா ஆயில் மற்றும் அரை டீஸ்பூன் கிரேப் சீட் ஆயில் சேர்க்கவும். இதை நன்றாக குலுக்கிவைத்து ஒரு பாட்டிலில் வைக்கவும். இது கடையில் வாங்கும் ஷாம்பூ போல் கெட்டியாக இருக்காது. இதை தலைக்குப் பயன்படுத்திப் பாருங்கள். நீங்கள் ஆச்சரியம் அடைவீர்கள்.
உங்களுக்கு மிகவும் வறண்ட முடியா?
அப்படியென்றால் இந்த இயற்கை ஷாம்பூ பயன்படுத்துங்க. கால் கப் சுத்தமான நீரில் லிக்விட் காசில் (castle) சோப், ஒரு டேபிள் ஸ்பூன் ஆலோவேரா ஜெல், அவகேடோ ஆயில் மற்றும் ஒரு டீஸ்பூன் க்ளிசரின் இவற்றை நன்றாகக் கலந்து பாட்டிலில் வையுங்கள்.
பயன்படுத்துவதற்கு முன் பாட்டிலை நன்றாக குலுக்கி பிறகு உபயோகியுங்கள். இதை முடி முழுவதும் தடவி நன்றாக குளிர்ந்த நீரில் அலசுங்கள்.
உங்கள் முடி பளபளப்பாக இருக்க வேண்டுமா?
சுத்தமான கால்கப் தண்ணீரில் எலுமிச்சை வாசம் உள்ள லிக்விட் காசில் சோப் இரண்டு டேபிள் ஸ்பூன், காய்ந்த ரோஸ்மேரி, ஆல்மண்ட் ஆயில் ஒரு டீஸ்பூன், மற்றும் கால் டீஸ்பூன் lemon essential ஆயில் எடுத்துக் கொள்ளவும். தண்ணீருடன் ரோஸ்மேரி இலை கலந்து கொதிக்க விடவும். இதை வடிகட்டி மேற்கூறிய பொருட்களை சேர்த்து நன்கு கலந்து இதை பயன்படுத்தவும். உங்கள் முடி பளபளப்போடு நறுமணம் மிகுந்ததாக இருக்கும்.
பொடுகுப் பிரச்சனையா?
பொடுகு பிரச்சனை, ஹார்மோன்களின் சமச்சீரின்மையால் உண்டாகலாம். கால்கப் சுத்தமான நீருடன் லிக்விட் காசில் சோப், ஜோஜோபா ஆயில், கிரேப் சீட் ஆயில், ஆப்பிள் சிடார் வினீகர், ஆப்பிள் ஜூஸ், பொடி செய்த கிராம்பு இவற்றை அரைத்து நீருடன் சேர்த்து நன்கு கலந்து பயன்படுத்தவும். நல்ல பலன் தெரியும். முடி மென்மையாகும்.
சமோமைல் ஷாம்பு:
ஒரு கப் சுத்தமான நீரில் லாவண்டர் வாசனையுள்ள காசில் லிக்விட் சோப், சமோமைல் டீ பாக் 6, அரை டீஸ்பூன் க்ளிசரின் எடுக்கவும். சமோமைல் டீ பேக்குகளை நீரில் 20 நிமிடம் கொதிக்க விடவும். பிறகு பேக்கை (bags) எடுத்துவிட்டு அந்த நீரில் காசில் சோப் மற்றும் க்ளிசரின் சேர்த்து கலக்கவும். இதை பயன்படுத்த உங்கள் முடி ஆரோக்கியமாகவும் பளபளப்பாகவும் இருக்கும்.
எந்த வித பக்கவிளைவுகளையும் ஏற்படுத்தாத மேற்கூறிய இயற்கை ஷாம்பூ உபயோகித்து பயனடையுங்கள்.