
ஷாம்புக்களில் இருக்கும் வேதிப்பொருட்களும், ஷாம்பு நுரைப்பதற்காக கலக்கப்படும் பொருட்களும் தலைக்கு பல பாதிப்புகள். ஏற்படுகின்றன. இதனால் இயற்கை சமநிலை கெட்டு தலை முடி வறண்டு போவது, முடி உடைவது / சிக்கு, பொடுகு போன்ற பிரச்னைகள் வருகின்றன. இயற்கை ஷாம்புகள் குப்படி செய்வது இல்லை. நீங்கள் வீட்டிலேயே இதனை எப்படி செய்யலாம் என்பதை பார்ப்போம்.
பொடுகு + அதிக எண்ணெய் பிசுக்கு நீங்க:
பொடுகையும் அதிக எண்ணெய் பிசுக்கையும் நீக்கும் இயற்கை ஷாம்பூ இது ஒரு டேபிள் ஸ்பூன் சமையல் சோடா மாவு எடுத்து ஒரு கப் தண்ணீரில் கரைக்க வேண்டும். ஷாம்பு போலவே பசையாக கரைத்து தலை முடியில் பூசி சில நிமிடங்கள் ஊறவிட்டு அலசினால் கூந்தலில் எண்ணெய் பிசுக்கு நீங்கி பொடுகும் போய் முடியும் பளிச்சிடும்.
மக்காச்சோளம் மாவு + சமையல் சோடா:
வறண்ட கூந்தல் என்றால் சமையல் சோடா பசையில் ஒரு டீஸ்பூன் மக்காச்சோள மாவு கலந்து தண்ணீர்போல குழைத்து தலையில் பூசி கால் மணி நேரம் கழித்துக் குளித்தால் கூந்தல் மென்மையாகும்.
பாசிப்பருப்பு:
ஒரு கப் பாசிப்பருப்பை மிக்ஸியில் ஒன்று இரண்டாக உடைத்து இரவு தண்ணீரில் ஊறவைத்து மறுநாள் காலையில் இதை மிக்ஸியில் அரைத்து பசைபோல் ஆக்கி கூந்தலை கற்றைகளாக பிரித்து எல்லா இடங்களிலும் பரவலாக பூசி அரை நேரம் ஊறவைத்த பின் பச்சை தண்ணீரில் கூந்தலை அலசினால் உங்கள் கூந்தல் மென்மையாகி பளபளப்பாகும்.
வெள்ளரி + எலுமிச்சை பழம்:
ஒரு வெள்ளரிக்காய் தோல் சீவி எடுத்து, எலுமிச்சம் பழத்தையும் தோல் உரித்து எடுத்து கொண்டு இரண்டையும் மிச்சியில் போட்டு தண்ணீர் ஊற்றாமல் பசைபோல் அரைத்து மண்டையில் நன்றாக ஊறும் அளவுக்கு கொண்டு கொஞ்சமாக தலையில் தேய்த்து ஊற விடவேண்டும். நன்கு ஊறிய பின் தலையை குளிர்ந்த நீரால் முடியை அலசுங்கள். எலுமிச்சை கூந்தலை பொடுகு வராமலும் சுத்தம் செய்யும். வெள்ளரி கூந்தலுக்கு ஊட்டம் தரும்.
சாமந்திப் பூ:
3 கப் கொதிக்கும் நீரில் ஒரு கை சாமந்திப் பூவை ஒருமணி நேரம் ஊறவைத்து வடிகட்டி அந்தத் தண்ணீரில் கூந்தலை அலசினால் கூந்தல் பொடுகையும் எண்ணெய் பிசியும் நீக்கி கூந்தல் மென்மையாகி பளபளக்கும்.
நெல்லிக்காய் + சீயக்காய் + பூந்திக்காய்:
இந்த மூன்றும் ஒரு கை அளவு எடுத்து ஒரு லிட்டர் தண்ணீரில் முதல் நாள் மாலை ஊறவைத்து, மறுநாள் காலை மிதமான தீயில் அதை கொதிக்க வைத்து, தண்ணீர் பாதியாக சுண்டும் அளவு கொதித்த வைத்த பின் ஆறவைத்து சுத்தமான துணியில் வடிகட்டவும். ஷாம்பு போல நுரைக்கும் இதை தலைக்கு தேய்த்து குளித்தால் முடி உதிராது. மீதி தண்ணீர் இருந்தால் பிரிட்ஜில் வைத்து அடுத்தடுத்த நாட்களில் பயன்படுத்தலாம்.
இப்படி அந்தந்த நேரத் தேவைக்காக செய்வதுபோல இல்லாமல், வேறு முறையில் மொத்தமாக சீயக்காய், வெந்தயம், பச்சை பயிறு, பூந்திக்காய், கருவேப்பிலை துளசி, எல்லாத்தையும் வெயிலில் காய வைத்து உலர்த்தி அரைத்து வைத்து இந்த பொடியை ஈரம் படாத பாட்டிலில் கொட்டிவைத்து தேவைப்படும்போது சிறிது எடுத்து தண்ணீர் ஊற்றி படைபோல கரைத்து தலையில் பூசி குளித்தால் கூந்தல் பட்டுபோல மென்மையாகும்.