கருவளையம், கரும்புள்ளி மறைக்கும் கன்சீலர்: சரும நிறம், கலர் கரெக்டிங் வரை முழு வழிகாட்டி!

எண்ணெய், வறண்ட, கலவையான சருமத்துக்கு தனித்தனி கன்சீலர் தேர்வு; திரவம், ஸ்டிக், கேக் வகைகளின் வித்தியாசங்கள் மற்றும் நீண்டநேர மேக்கப்புக்கான சரியான பயன்பாடு.
ultimate-concealer
ultimate-concealer
கே.எஸ்.கிருஷ்ணவேனி

Iam a graduate from Vaishnav College in the year 1984. My writings were published in Mangayar Malar,Aval Vikadan,Kumudham Sneghethi since 1992 and received many prizes. Now I am writing in Kalki Publications. Cooking, writing, playing Shuttle cock & making fur dolls are my passions.

Updated on: 

மேக்கப்பில் கன்சீலர் (Concealer) என்பது கருவளையம், கரும்புள்ளிகள், முகப்பரு மற்றும் சரும நிற வேறுபாடுகளை மறைத்து முகம் பளபளப்பாகவும், சமமாகவும் (even tone) இருக்க உதவும் ஒரு முக்கியமான பொருளாகும்.

சரும நிறம் (Shade Selection):

கண்களுக்கு கீழ் உள்ள கருவளையங்களுக்கு சரும நிறத்தைவிட ஒன்று அல்லது இரண்டு நிழல்கள் (shades) இலகுவான (lighter) கன்சீலரைத் தேர்ந்தெடுக்கவும். இது கண்களுக்கு கீழே உள்ள பகுதியை பிரகாசமாக்கும். முக்கோண வடிவில் தடவுவது இயற்கையான தோற்றத்தைத் தரும்.

முகப்பரு / தழும்புகளுக்கு சரும நிறத்துடன் (Skin tone) சரியாகப் பொருந்தக்கூடிய கன்சீலரை தேர்ந்தெடுக்கவும். முகப்பரு, கரும்புள்ளிகள், தழும்புகளுக்கு அவை உள்ள இடங்களில் மட்டும் சிறிய அளவில் தடவி ஒரு பிரஷ் கொண்டு அதை நன்றாக பரப்பி விடவும்.

சரும வகை(skin type): 

எண்ணெய் சருமம்(oily skin): 

எண்ணெய் சருமத்திற்கு மேட் (matte) அல்லது பவுடர் பினிஷ் கொண்ட கன்சீலரை பயன்படுத்தவும். இது நீண்ட நேரம் நிலைத்திருக்கும் தன்மை கொண்டது.

வறண்ட சருமம் (dry skin): 

பளபளப்பான தோற்றத்திற்கு திரவ அல்லது கிரீம் அடிப்படையிலான கன்சீலர்கள் சிறந்தது. இவை முகத்தை பொலிவாகவும் ஈரப்பதமாகவும் காட்டும்.

வண்ணத் திருத்தம் (colour correcting): மிகவும் கருமையான கறைகளை மறைக்க ஆரஞ்சு அல்லது பீச் நிற கலர் கரெக்டரைப் பயன்படுத்திய பின், சருமநிற கன்சீலரைப் பயன்படுத்தவும்.

உதடுகளுக்கு லிப் லைனரை பயன்படுத்துவதற்கு முன்பும், லிப் பாம் தடவிய பின்பும் உதடுகளை கன்சீலர் கொண்டு மென்மையாகத் தடவ லிப்ஸ்டிக்கிற்கு ஒரு சீரான அடித்தளம் கிடைக்கும். இதனால் லிப்ஸ்டிக் போடும்பொழுது அதன் நிறம் ஒரே சீராகப் பரவும்.

இதையும் படியுங்கள்:
முகப்பரு மற்றும் கரும்புள்ளிகளை விரட்டும் இயற்கை 'சீட்' (Seed) ஃபேஸ் பேக்குகள்!
ultimate-concealer

பயன்படுத்தும் முறை: 

முகத்தை சுத்தப்படுத்தி மாய்ஸ்சரைசர் மற்றும் பிரைமர் தடவவும். கன்சீலருக்கு முன் பவுண்டேஷன் பயன்படுத்தினால் குறைவான கன்சீலர் மட்டுமே தேவைப்படும். கன்சீலரை தகுந்த இடங்களில் சிறிய புள்ளிகளாக வைக்கவும். பிளெண்டர் (beauty blender) அல்லது விரல்களைப் பயன்படுத்தி மெதுவாக தட்டி கலக்கவும். தேய்க்கக்கூடாது. கன்சீலர் மங்காமல் இருக்க லூஸ் பவுடர் அல்லது காம்பேக்ட் பவுடர் கொண்டு லேசாக செட் செய்யவும்.

தனித்துவமான சரும நிறத்திற்கு ஏற்ற சரியான நிறத்தைப் பெறுவதற்கு பவுண்டேஷன் அல்லது கன்சீலர்களின் இரண்டு நிறங்களைக் கலந்து பயன்படுத்துவது ஒரு பொதுவான நடைமுறையாகும்.

கன்சீலர்கள் திரவ, ஸ்டிக் மற்றும் கேக் வடிவங்களில் கிடைக்கின்றன. திரவ கன்சீலர்கள், பிரஷ் அப்ளிகேட்டர் மூடிகளுடன் கூடிய சிலிண்டர் வடிவிலோ அல்லது பிரஷ் பேனா வடிவிலோ கிடைக்கிறது. இவை பயணத்தின் பொழுது விரைவாக மேக்கப் செய்துகொள்ள விரும்புபவர்களுக்கு மிகவும் ஏற்றது.

கலவையான சருமத்திற்கு க்ளோரிஃபையிங் கன்சீலர்கள் சிறந்தவை. ஏனெனில் அவை கலவையான சரும வகைகளில் உள்ள வறண்ட, எண்ணெய்ப் பசை மற்றும் உணர்திறன் மிக்க பகுதிகளுக்கு ஏற்ப நன்கு பொருந்தக்கூடிய சரும பராமரிப்பு பொருட்களைக் கொண்டுள்ளது.

logo
Kalki Online
kalkionline.com