முகப்பரு மற்றும் கரும்புள்ளிகளை விரட்டும் இயற்கை 'சீட்' (Seed) ஃபேஸ் பேக்குகள்!

natural-seed-face-packs
natural-seed-face-packs
கே.எஸ்.கிருஷ்ணவேனி

Iam a graduate from Vaishnav College in the year 1984. My writings were published in Mangayar Malar,Aval Vikadan,Kumudham Sneghethi since 1992 and received many prizes. Now I am writing in Kalki Publications. Cooking, writing, playing Shuttle cock & making fur dolls are my passions.

Updated on

சருமத்தை சுத்தப்படுத்தி பொலிவாக்கும் சில ஃபேஸ் பேக் வகைகளை இப்பதிவில் காணலாம்.

பருக்களை விரட்டும் ஆளி விதை ஃபேஸ் பேக்:

ஆளி விதை 1 ஸ்பூன்

எலுமிச்சை சாறு 1/2 ஸ்பூன்

தேன் சிறிது

ஆளி விதைகள் சருமம், கூந்தல் இரண்டுக்கும் நன்மை செய்யும். ஆளி விதையை மிக்ஸியில் நன்கு பொடித்து எடுக்கவும். அல்லது முதல் நாள் இரவே தண்ணீரில் ஊறவைத்து காலையில் விழுதாக அரைக்கலாம். அத்துடன் சிறிதளவு எலுமிச்சைசாறு மற்றும் தேன் கலந்து நன்கு குழைக்கவும். இதனை முகம், கழுத்துப் பகுதிகளில் குறிப்பாக முகப்பரு மற்றும் கரும்புள்ளிகள் உள்ள இடங்களில் மென்மையாகத் தடவிவிடவும்.

சிறிது நேரம் கழித்து (20 நிமிடங்கள்) நன்கு காய்ந்ததும் குளிர்ந்த நீர் கொண்டு கழுவி வர சருமத்தில் உள்ள பாக்டீரியாக்கள் நீங்கி முகப்பருக்களை கட்டுப்படுத்தி கரும்புள்ளிகளையும் போக்க உதவும். தேன் சருமத்தில் உள்ள கோடுகள், சுருக்கங்களைக் குறைத்து இளமை தோற்றத்தை பெற உதவும். இதன் மூலம் முகம் பளிச்சென்று சுத்தமாகும்

சருமத்தை பளிச்சன மின்ன வைக்கும் பூசணி விதை ஃபேஸ் பேக்:

சருமத்தில் படிந்துள்ள அழுக்குகளைப் போக்கி முகத்தை பளிச்சென்று மின்ன வைக்கும் பூசணி விதை ஃபேஸ் பேக்.

பூசணி விதை

தேன் 1/2 ஸ்பூன்

ஜாதிக்காய் பவுடர் 1/2 ஸ்பூன்

டீ ட்ரீ ஆயில் 2 சொட்டுகள்

மிக்ஸியில் பூசணி விதையை நன்கு பொடித்துக்கொள்ளவும். அத்துடன் ஜாதிக்காய் பொடி, தேன் சேர்த்து நன்கு கலக்கவும். கடைசியாக சில சொட்டுகள் டீ ட்ரீ ஆயிலை சேர்த்து பேஸ்ட் பதத்திற்கு கலந்து முகம் மற்றும் கழுத்துப் பகுதிகளில் தடவி லேசாக மசாஜ் செய்யவும். 20 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீர் கொண்டு முகத்தைக் கழுவி வர முகம் பளிச்சென்று இருக்கும். இதனை வாரத்திற்கு இரண்டு முறை செய்து வரலாம்.

பூசணி விதைகளில் உள்ள விட்டமின் ஈ சருமத்திற்கு மெருகைக் கூட்டுவதுடன் எண்ணெய் சருமத்திற்கு ஏற்றதாகவும், சருமத்துளைகளின் அடைப்பை நீக்கவும், முகத்தில் தோன்றும் கரும்புள்ளிகளை போக்கவும் உதவும். ஜாதிக்காய் பவுடர் முகப்பருவை கட்டுப்படுத்தவும், சருமத்தில் தோன்றும் எரிச்சலை போக்கவும் உதவும் தேன் சிறந்த மாய்ஸரைசராக செயல்பட்டு பளிச்சென்ற தோற்றம் தரவும் உதவும்.

இதையும் படியுங்கள்:
50-லும் 25-ஆகத் தெரியலாம்! சுருக்கங்களை நீக்கி இளமையைத் தரும் மேஜிக் ஃபேஸ் மாஸ்க்!
natural-seed-face-packs

எண்ணெய் சருமத்திற்கேற்ற சப்ஜா விதை பேக்:

சப்ஜா விதைகள் 1 ஸ்பூன்

தயிர் 2 ஸ்பூன்

சப்ஜா விதைகளை ஒரு ஸ்பூன் அளவு எடுத்து சிறிது தண்ணீரில் ஊறவிடவும். அத்துடன் தயிர் சேர்த்து நன்கு கலக்கவும். இந்தக் கலவையை முகத்தில் தடவி சிறிது நேரம் மென்மையாக மசாஜ் செய்வதன் மூலம் முகத்தில் உள்ள அதிகப்படியான எண்ணெய் பசை நீங்கி, பருக்கள் வருவதும் குறையும். சப்ஜா விதைகள் குளிர்ச்சியானவை. இவற்றை உள்ளுக்கும் எடுத்துக் கொள்ளலாம்; பேஸ்டாக்கி மேல் பூச்சாகவும் பயன்படுத்தலாம்.

சிறந்த மாய்சரைசராக செயல்படும் தர்பூசணி விதை ஃபேஸ் பேக்:

தர்பூசணி விதைப் பொடி 1 ஸ்பூன்

தேன் 1/2 ஸ்பூன்

எலுமிச்சை சாறு 1 ஸ்பூன்

இதையும் படியுங்கள்:
40% பேர் அதிக எடை! இந்த லிஸ்ட்டில் நீங்கள் இருக்கிறீர்களா? தப்பிப்பது எப்படி?
natural-seed-face-packs

காய்ந்த தர்பூசணி விதைகளை நன்கு பொடித்து வைத்துக்கொள்ளவும். பளபளப்பான சருமத்திற்கு தயிர் கலந்து முகத்தில் தடவலாம். எண்ணெய் சருமத்திற்கு தேன் கலந்துபோடலாம். முகத்தில் உள்ள தழும்புகள் மறைய எலுமிச்சைசாறு கலந்து ஃபேஸ் பேக் போடலாம். இந்த பேக்கை முகத்தில் தடவி 20 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரில் கழுவி வர நல்ல பலன் கிடைக்கும்.

இதில் உள்ள புரதம் மற்றும் விட்டமின்கள் சரும செல்களை சரி செய்ய உதவும். சருமத்தில் உள்ள வடுக்கள் மறையவும் பயன்படுத்தலாம். இதில் உள்ள ஒமேகா 6 மற்றும் ஒமேகா 9 கொழுப்பு அமிலங்கள் சருமத்தை மென்மையாகவும் பளபளப்பாகவும் மாற்ற உதவும்.

logo
Kalki Online
kalkionline.com