முகத்தில் தேவையற்ற முடிகளா? இதோ எளிய இயற்கை தீர்வுகள்!

Beauty tips in tamil
Unwanted facial hair?
Published on

சினிமா நடிகைகளின் முகத்தைப் பார்த்தால் சருமம் அவ்வளவு மென்மையாகவும் முகத்தில் ஒரு முடிகூட இல்லாமலும் இருக்கும். எப்படி அவர்கள் முகத்தை பராமரிக்கிறார்கள் என்று நீங்கள் யோசித்ததுண்டா? முகத்தில் உள்ள முடிகளை அகற்றும் சில வழிகளை இந்தத் தொகுப்பில் பார்ப்போம்.

டெர்மாபிளேனிங்: (Dermaplaning)

பிரத்யேகமான 10D  டெர்மாபிளேனிங் ப்ளேட் (10D Dermaplaning Blades) டெர்மாபிளேனிங் ப்ளேட் பயன்படுத்தி முகத்தில் உள்ள முடிகளை நீக்கும் முறை. முடிகள் மட்டும் அல்லாது தேவையற்ற செல்கள், சருமத்தில் மேல் தங்கியிருக்கும் அழுக்குகள் ஆகியவற்றையும் நீக்கும். இது உங்கள் சருமத்திற்கு எந்த பாதிப்பையும் விளைவிக்காது. 

ப்ளேட் பயன்படுத்துவதால் சற்றுக் கூடுதல் கவனத்துடன் செய்வது நல்லது. அதிகப்பட்சம் 30 நிமிடங்கள்வரை நிதானமாகவே செய்யலாம். இது நீங்கள் வீட்டில் செய்வதோடு நிபுணர்களிடம் செய்துக்கொள்வது மிக நல்லது. எனெனில் அவர்கள் முதலில் சில கிரீம்கள் பயன்படுத்தி நமது முகத்தை சுத்தமாக்கிய பின்தான் டெர்மாபிளேனிங் செய்வார்கள்.

த்ரெடிங்: (Threading)

து அனைவருக்கும் தெரிந்த ஒரு பொதுவான முறைதான். நூல் பயன்படுத்தி முகத்தில் உள்ள முடிகளை நீக்குவர்.  த்ரெடிங் நம் புருவங்களின் தேவையற்ற முடிகளை நீக்கி அழகான வளைந்த புருவமாக மாற்றும். அதேபோல்தான் நம் முகத்தில் உள்ள முடிகளை இது சுத்தமாக நீக்கிவிடும். கண்களுக்கு கீழ் உள்ள பகுதிகள் மிகவும் மென்மையானவை. , ஆகையால் அந்த இடத்தில் கவனமாக த்ரெட் செய்ய வேண்டும். முதல் முறை செய்பவர்களுக்கு சிறிது வலி ஏற்படும்.

இதையும் படியுங்கள்:
இனி பியூட்டி பார்லர் செலவே இல்லை! இளமை தரும் 'மேஜிக்' பழம்!
Beauty tips in tamil

மேலும், உடம்பில் உள்ள மற்ற பாகங்களை விட முகம் மிகவும் மென்மை வாய்ந்தது. ஆகையால் முதலில் ஒரு இடத்தில் மட்டும் த்ரெட் செய்து, அரிப்பு எதும் ஏற்படுகிறதா என்பதைப் பார்த்துவிட்டு முகம் முழுவதும் த்ரெட் செய்ய வேண்டும்.

வாக்ஷிங்: (Washing)

வாக்ஷிங் என்பது கடைகளில் விற்கப்படும் ஒரு நல்ல வாக்ஷ் கிரீம் அல்லது வாக்ஷ் பவுடர் பயன்படுத்தி முடிகளை அகற்றும் முறை. முதலில் முகத்தில் வாக்ஷ் தடவ வேண்டும். பின் உடனே அதனை நீக்கிவிட வேண்டும். முகத்திலிருந்து வாஷை  நீக்கும்போதே அதனுடன் சேர்ந்து முடிகளும் நீங்கிவிடும். வாக்ஷிங் செய்யும்போது கூசுவது போல் இருக்கும். வாஷிங் செய்தபின்பு வெகுநாட்கள் மென்மையாகவும் அழகாகவும் இருக்கும்.

டெப்பிலேட்டரி: (Depilatory Cream)

டெப்பிலேட்டரி கிரீமில் இரசாயனப் பொருட்கள் கலந்திருக்கும். க்ரீம் நன்றாக தடவிவிட்டு நீக்கினால் முடிகள் இருந்த இடமே தெரியாமல் போய்விடும். இதில் இரசாயனம் இருப்பதால் உங்கள் சருமத்திற்கு ஏற்ற க்ரீம் தேர்ந்தெடுத்து பயன்படுத்த வேண்டும்.  ஒருமுறை பயன்படுத்திப் பார்த்துவிட்டு வாங்குவது நல்லது.

எலெக்ட்ரிக் ட்ரிம்மர்ஸ்: (Electric Trimmers)

து முகத்தில் எந்த எரிச்சலும் இல்லாமல் முடிகளை சுத்தமாக நீக்கிவிடும். மேலும் எளிதாகவும் சீக்கிரமாகவும் செய்யக்கூடிய ஒன்று. இந்த முறை பயன்படுத்தி முடிகளை நீக்கினால் பிறகு வெகு நாட்களுக்கு மீண்டும் முடிகளை எடுக்க அவசியம் இருக்காது. மேலும், இந்த முறையில் எந்த வலியும் ஏற்படாது.

இதையும் படியுங்கள்:
குளிர்காலத்தில் சருமத்தை பராமரிக்கும் 12 வழிமுறைகள்!
Beauty tips in tamil

இந்த ஐந்து முறைகளில் எது உங்களுக்கு எளிதாகவும் வலியில்லாமலும் இருக்குமோ அதனைத் தேர்ந் தெடுங்கள். எந்த முறை தேர்ந்தெடுத்தாலும் முதலில் சோதனை செய்துப் பார்க்கவேண்டும். முடிகளை நீக்கியவுடன் மாய்ஸ்டரைஸர் அல்லது க்ளென்சரில் எதாவது ஒன்றை பயன்படுத்துவது அவசியம்.

-பாரதி

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com