
மாம்பழம் என்றாலே அதன் சுவைக்கும், ருசிக்கும் அடிமை என்போம். மாம்பழம் உணவிற்கு பயன்படுவதை போல நம் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் பலவிதங்களில் பயன்தருகிறது.
மாம்பழத்தில் வைட்டமின் ஏ, சி சத்துக்கள் உள்ளன. இவை நம் சருமத்திற்கு போஷாக்கு அளித்து இந்த வெயிலினால் ஏற்படும் கருமை மற்றும் சுருக்கத்தை சரிசெய்கிறது. சரும வறட்சியை போக்கி, பொலிவைத் தருகிறது.
இதிலுள்ள வைட்டமின் சி கொலாஜன் உற்பத்தியை அதிகரிக்க உதவுகிறது. அத்துடன் ஃப்ரீரேடிகல் களிலிருந்து சருமத்தை பாதுகாக்கிறது. இதில் ஆன்டி ஆக்ஸிடென்ட்டுகள் அதிகம் உள்ளது. ஆதலால் முகப்பருவை உண்டாக்கும் பாக்டீரியாக்களை எதிர்த்து போராடுகிறது.
மாம்பழத்தை கூழாக்கி அதை ஃபேஸ்பேக் காக போட முகவீக்கம் மற்றும் முகப்பருக்கள் வருவது குறையும். மாம்பழ ஃபேஸ்பேக் கரும்புள்ளிகளை குறைத்து சருமத்தை நிறமாக்கும்.
மாம்பழத்தில் உள்ள வைட்டமின்.கே கண்களைச் சுற்றியுள்ள கருவளையங்கள் மற்றும் வீக்கத்தைக் குறைக்கிறது. இதில் உள்ள வைட்டமின் ஏ சருமத்தை ஈரப்பதத்தோடு வைப்பதோடு சரும வறட்சியையும் போக்குகிறது.
சருமம் முதிர்ச்சியாவ தை தடுக்கிறது. இது சருமத்தை மென்மையாகவும், மிருதுவாகவும் ஆக்கி, கறைகளைப் போக்குகிறது. இதிலுள்ள ஆக்ஸிஜனேற்றிகள் முகத்தின் சுருக்கங்களை, வடுக்களை போக்கி வயதான தோற்றத்தை போக்குகிறது.
மாம்பழத்தின் சதைப்பகுதியை முல்தானிமிட்டியுடன் சேர்த்து பேக் ஆக போட்டு ஊறியதும் கழுவ சருமம் புத்துணர்ச்சி பெறும்.முகம் பொலிவு பெறும்.
மாம்பழக் கூழ், 2டீஸ்பூன் கற்றாழை ஜெல், 1டீஸ்பூன் தயிர், தேன் சேர்த்து கலந்து முகத்தில் பூசி சிறிது நேரம் கழித்து கழுவ வெயில் பட்டு கருத்த சருமம் நிறம் மாறி பளிச்சிடும்.
2டேபிள் ஸ்பூன் மாம்பழக் கூழுடன், 2டீஸ்பூன் பால் பவுடர், 1, டீஸ்பூன் எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து முகத்தில் தடவி சிறிது நேரம் கழித்து கழுவ முக அழகு மேம்படும்.
இவ்வாறு பலவிதங்களில் நம் சருமத்திற்கு போஷாக்கு தரும் மாம்பழம் பயன்படுத்தி ஆரோக்கியம் காப்போம்.
இவை அனைத்தும் நான் வீட்டில் செய்து கொள்வது. நல்லபலனைத் தரும் இதன்மூலம் எந்தவித சரும அலர்ஜியும் வராது.