பிளவுஸ் பிட்ஸ் யூஸ்ஃபுல் டிப்ஸ்!

Designing Blouse
Designing Blouse
 • ஒல்லியாக உள்ள பெண்களுக்கு 80 செ.மீட்டர் பிளவுஸ் பிட்டு (துணி), நார்மல் மற்றும் கொஞ்சம் குண்டாக உள்ள பெண்களுக்கு 1 மீட்டர் பிளவுஸ் பிட்டும் வாங்க வேண்டும். பிட்டு துணியாக வாங்கும்போது பிளவுஸ் பிட் அகலம் குறைவாக இருக்கும். கொஞ்சம் குண்டாக உள்ள பெண்களுக்கு 1 மீட்டர் போதாது. அதனால் பீஸில் வெட்ட வேண்டும். அப்போது 1 மீட்டர் போதும். ஆனால் மிகவும் பருமனாக இருப்பவர்களுக்கு 1.20 மீட்டர் துணி வாங்க வேண்டும்.

 • பிளவுஸ் பிட் வாங்கும்போது துணியை விரித்துப் பார்த்து ஏதாவது டேமேஜ் உள்ளதா எனக் கவனித்து வாங்க வேண்டும். அதேபோல் டிசைன் பிளவுஸ் தைப்பதாக இருந்தால் 20 சென்டிமீட்டர் துணி அதிகம் வாங்க வேண்டும்.

 • இரண்டு கலர் கொடுத்து டிசைன் பிளவுஸ் தைப்பதாக இருந்தால், கைக்கு ¼ மீட்டர் துணியும், உடம் புக்கு ¾  மீட்டர் என்று வேறு கலர் துணியும் மாற்றி வாங்கலாம். அதாவது, பார்டர் கலருக்குக் கை பிட்டும், உடம்பு கலருக்கு உடம்பு பிட்டும் வாங்கி, புடைவைக்குத் தகுந்தாற்போல் பிளவுஸ் தைக்கலாம்.

 • ஜரிகை பார்டர் பிளவுஸ் என்றால், ஜரிகை பார்டர் இரண்டு பக்கமும் உள்ள பிளவுஸ் பிட்டை வாங்கலாம். ஆனால் ஒரு சைடு மட்டும் ஜரிகை பார்டர் என்றால் பிளவுஸ் தைக்கும்போது கைக்குத் தைக்கச் சில சமயம் துணி போதாது. அதனால், 20 சென்டி மீட்டர் அதிகம் வாங்கவும்.

 • லைனிங் துணியை அப்படியே வெட்டி உள்ளே கொடுத்துத் தைக்கக் கூடாது. சீக்கிரம் கிழிந்துவிடும். லைனிங் துணியை இரவு முழுவதும் தண்ணீரில் ஊறவைத்து, மறுநாள் பிழியாமல் உலர்த்தி, அயர்ன் செய்து, அதன் பின்புதான் வெட்டித் தைக்க வேண்டும்.

 • புடைவைக்கு பிளவுஸ் பிட் வாங்கும்போது, கொஞ்சம் டார்க் கலர்தான் வாங்க வேண்டும். லைனிங் பிட் வாங்குவதாக இருந்தால் புடைவை பிட்டை விடக் கொஞ்சம் டார்க் கலராகப் பார்த்து வாங்கவும்.

 • பிளவுஸ் பிட் வெட்டுவதற்கு முன்னால் பிளவுஸ் பிட்டை விரித்துப் பார்த்து எங்காவது டேமேஜ் இருந்தால் அந்த இடத்தில் பாக்ஸ்போல போட்டுக் கொள்ள வேண்டும். அப்போதுதான் கட்டிங் செய்யும்போது பார்த்து வெட்ட முடியும்.

 • தையல் பயிற்சி பெறும் பெண்கள் முதன்முதலில் பிளவுஸ் தைக்கும்போது ரேஷன் கடை புடை வையில் வெட்டித் தைக்கக்கூடாது. அப்படிச் செய்தால் சரியான அளவில் மற்ற பிளவுஸைத் தைக்க முடியாமல் போய்விடும். காட்டன் பிட்டில்தான் தைத்துப் பழக வேண்டும்.

 • முதலில் பிளவுஸ் வெட்டும்போது துணியில் அளவுகளை மார்க் செய்து வெட்டக்கூடாது. சார்ட்டில் பின்பக்கம், முன்பக்கம், கை பிட் அனைத்தும் வெட்டிக்கொண்டு அதை வைத்துத்தான் துணியில் வரைந்து வெட்ட வேண்டும். ஏனெனில், சார்ட்டில் மாற்றம் செய்துகொண்டு அதன் பின்பு அடுத்த பிளவுஸ் தைத்தால் மிகவும் இருக்கும்.

 • சரியான அளவில் ஒரு பிளவுஸ் அமைந்துவிட்டால் அந்த சார்ட்டை ஃபைல் செய்துவிடவும். அந்த சார்ட்டை வைத்துப் பின்பக்கம் தேவையான கழுத்து டிசைன்கள் கட் செய்ய முடியும். அதேபோல் முன்பக்கம் பாம்பே மாடல். கட்டோரி மற்றும் பிரின்சஸ் கட்டிங் எல்லாம் செய்துகொள்ளலாம். அதேபோல கை பிட்டில் சமோஸா கை, வங்கி மாடல், ரோஜா மொட்டுக் கை என்று தேவையான டிசைன்கள் செய்ய முடியும்.

 • நிறைய இடங்களில் X மார்க் செய்துவிட்டால், இடதுபுறமும், வலதுபுறமும் சரியான அளவில் கை பிட், முன் பிட் வெட்ட முடியும். இல்லாவிட்டால் தவறாகிவிடும். அதன் பிறகு சரிசெய்ய முடியாது.

 • கை பிட், உடம்பு பிட், முன்பகுதி வெட்டியபின்பு தைப்பதற்கு முன்னால் R.Side, L.Side என்று எழுதிக் கொள்ளவும். அப்போதுதான் தைப்பதற்கு சுலபமாக இருக்கும். துணியின் உட்புறம் எழுதவும்.

 • துணியின் கரை உள்ள பக்கம்தான் உயரமாக வைக்க வேண்டும். கரை இல்லாத பக்கம் வெட்டித் தைத்தால் தண்ணீரில் நனைத்தபிறகு சுருங்கி விடும். ஏனெனில் கரை உள்ள பக்கத்தில்தான் இழையோட்டல் நெருக்க மாக இருக்கும்.

இதையும் படியுங்கள்:
ஒல்லியாகத் தெரிய வேண்டுமென்றால் ஆடைகளை இனி இப்படி உடுத்துங்கள்!
Designing Blouse
 • அளவு பிளவுஸைவிட, தைக்கப் போகும் பிளவுஸ் உயரம் அதிகம்  தேவைப்பட்டாலோ அல்லது கை பிட் உயரம் அதிகம் தேவைப்பட்டாலோ 20 சென்டிமீட்டர் துணி அதிகம் வாங்க வேண்டும்.

 • பிளவுஸ் வெட்ட துணி போதாவிட்டால், பின்பக்க உயரத் தையலுக்கு ½"மட்டும் சேர்த்துப் பட்டிக்கு வேறு துணி 2" அளவில் கட் செய்து உள்ளே கொடுத்துத் தைக்கலாம். கை பிட் உயரம் ½" மட்டும் சேர்த்து பைப்பிங் கொடுத்தும் தைக்கலாம்.

 • புடைவையில் உள்ள பிளவுஸ் பிட் வெட்டுவதற்கு முன்னால் புடைவை எத்தனை மீட்டர் உள்ளது என அளந்து பார்க்கவும். அல்லது வேறு புடைவையை வைத்து அளந்து பார்த்துக் கவனித்து வெட்டவும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com