முகத்தை பளபளப்பாக்க விளக்கெண்ணையே போதுமே! 

castor oil
Using Castor Oil for a Clear Face

தெளிவான மற்றும் ஆரோக்கியமான சருமத்தை அடைவது பலரது ஆசையாக இருக்கும். இதற்கு சந்தையில் கிடைக்கும் ஏராளமான தயாரிப்புகளை பயன்படுத்துவார்கள். ஆனால் சில இயற்கையான பொருட்களைப் பயன்படுத்தியே முகத்தை பளபளப்பாக மாற்றலாம். அத்தகைய இயற்கையான பொருட்களில் ஒன்றுதான் ஆமணக்கு எண்ணெய். இப்பதிவில் முகத்தை பளபளப்பாக மாற்ற விளக்கெண்ணையை எப்படி பயன்படுத்துவது எனப் பார்க்கலாம். 

சுத்தப்படுத்துங்கள்: உங்கள் முகத்தில் ஆமணக்கு எண்ணெயை பயன்படுத்துவதற்கு முன் சருமத்தை நன்கு சுத்தம் செய்ய வேண்டியது அவசியம். உங்கள் முகத்தில் உள்ள அழுக்கு, மேக்கப் போன்றவற்றை நன்கு கழுவி சுத்தப்படுத்தவும். 

பேட்ச் டெஸ்ட்: ஆமணக்கு எண்ணெய் மிகவும் கெட்டியான பதத்துடன் இருக்கும் என்பதால், அதை முகத்தில் தடவுவதற்கு முன் பேட்ச் டெஸ்ட் செய்வது நல்லது. அதாவது உங்கள் சருமத்தில் சிறிதளவு ஆமணக்கு எண்ணெய் தடவி 24 மணி நேரம் காத்திருக்கவும். இந்த நேரத்தில் ஏதேனும் ஒவ்வாமை, எரிச்சல் உள்ளதா என்பதை சரி பார்க்க வேண்டும். 

நீர்த்தல்: விளக்கெண்ணெய் மிகவும் கெட்டியாக இருந்தால் அதை தேங்காய் எண்ணெய், பாதாம் எண்ணெய் போன்றவற்றில் கலந்து நீர்த்துப் போகச் செய்யலாம். பின்னர் உங்கள் முகத்தில் தடவுவதற்கு எளிதாக இருக்கும். 

ஸ்பாட் ட்ரீட்மென்ட்: முகத்தில் உள்ள முகப்பரு அல்லது கரும்புள்ளிகள் போன்ற குறிப்பிட்ட விஷயங்களை நீக்குவதற்கு, சுத்தமான பருத்தித் துணியால் விளக்கெண்ணையை தொட்டு நேரடியாக பாதிக்கப்பட்ட இடத்தில் பயன்படுத்தலாம். 

முக மசாஜ்: முகத்திற்கு ரத்த ஓட்டத்தை மேம்படுத்த இதை முகத்தில் தடவி மசாஜ் செய்வது நல்லது. 

தொடர் பயன்பாடு: உங்களது சரும பராமரிப்புக்கு விளக்கெண்ணையை பயன்படுத்தும்போது தொடர்ச்சியாக சில காலம் பயன்படுத்த வேண்டியது முக்கியமானது. அதன் முழு பலனையும் அனுபவிக்க குறைந்தது ஒரு மாதமாவது முகத்தில் பயன்படுத்த வேண்டும். குறிப்பாக ஒவ்வொரு இரவும் தூங்குவதற்கு முன் விளக்கெண்ணெய் பயன்படுத்தினால், நல்ல பலன் கிடைக்கும். 

இதையும் படியுங்கள்:
மழைக்காலத்தில் சாப்பிட வேண்டிய மற்றும் தவிர்க்க வேண்டிய உணவுகள்! 
castor oil

ஆமணக்கு எண்ணெயை முகத்திற்கு பயன்படுத்துவதால் சருமத்தின் இயற்கையான ஈரப்பதம் பராமரிக்கப்படும். மேலும் இதில் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் இருப்பதால், முகப்பருவை உண்டாக்கும் பாக்டீரியாக்களை எதிர்த்து போராட உதவும். அதன் அழற்சி எதிர்ப்பு பண்புகள் முகப்பரு, வறண்ட சருமம், சருமம் சிவந்துபோதல் மற்றும் வீக்கம் போன்றவற்றை குறைக்க உதவுகிறது. உங்கள் முகத்தில் உள்ள அதிகமான எண்ணெய் உற்பத்தியை கட்டுப்படுத்தி, சருமத்தை பளபளப்பாக மாற்றும். மேலும் தொடர்ச்சியாக நீங்கள் முகத்திற்கு பயன்படுத்திவந்தால், உங்களது வயதாகும் தோற்றத்தை குறைக்கும் ஆற்றல் விளக்கெண்ணைக்கு உண்டு. 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com