மழைக்காலத்தில் சாப்பிட வேண்டிய மற்றும் தவிர்க்க வேண்டிய உணவுகள்! 

Foods Eating
Foods to Eat and Avoid During Rainy Season

கோடைகாலம் முடிந்து மழைக்காலம் தொடங்கப் போகிறது. இப்போதே தென் தமிழகத்தில் பல இடங்களில் மழை பெய்யத் தொடங்கியுள்ள நிலையில், இது சில உடல் நல பாதிப்புகளையும் ஏற்படுத்தலாம். இந்த நேரத்தில் நம் உடலில் நோய் எதிர்ப்பு குறைவாக இருக்கும் என்பதால் தொற்று நோய்கள் நம்மை எளிதில் தொற்றிக்கொள்ளும். இத்தகைய அபாயங்களை எதிர்த்து போராட நமது உணவில் நாம் கவனம் செலுத்த வேண்டியது அவசியம். இப்பதிவில் மழைக்காலத்தில் ஆரோக்கியமாக இருக்க சாப்பிட வேண்டிய மற்றும் தவிர்க்க வேண்டிய உணவுகள் பற்றி பார்க்கலாம். 

மழைக்காலத்தில் சாப்பிட வேண்டிய உணவுகள்:  

  • ஆரஞ்சு, எலுமிச்சை, திராட்சை போன்ற சிட்ரஸ் பழங்களில் விட்டமின் சி நிறைந்துள்ளது. இது நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்த உதவுவதால், மழைக்காலங்களில் இவற்றை உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள். 

  • கீரை வகைகளை உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலமாக இரும்புச்சத்து, விட்டமின்கள் மற்றும் ஆக்ஸிஜனேற்றங்கள் போன்ற அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் உடலுக்கு கிடைக்கின்றன. இந்த ஊட்டச்சத்துக்கள் நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலுவாக்கி, தொற்று நோய்களிலிருந்து நம்மை பாதுகாக்கிறது. 

  • பூண்டு அதன் ஆன்டிவைரஸ் மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகளுக்கு பெயர் பெற்றது. இது நோய்த் தொற்றுக்களை எதிர்த்து போராடவும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் உதவும். 

  • இஞ்சியில் சக்தி வாய்ந்த அழற்சி எதிர்ப்பு மற்றும் ஆக்ஸிஜனேற்றப் பண்புகள் உள்ளன. இது மழைக்காலத்தில் செரிமானத்தை மேம்படுத்தவும் சுவாசத்தொற்று அபாயத்தை குறைக்கவும் உதவுகிறது. எனவே மழைக்கு இதமாக இஞ்சி டீ போட்டு குடிப்பது உங்களது ஆரோக்கியத்திற்கு பெரிதளவில் உதவும். 

மழைக்காலத்தில் தவிர்க்க வேண்டிய உணவுகள்: 

  • மழைக்காலத்தில் தெரு உணவுகளை தவிர்ப்பது நல்லது. ஏனெனில் அவை சுகாதாரமான சூழ்நிலையில் தயாரிக்கப்படாது. மழைக்காலங்களில் தெரு உணவுகளில் பாக்டீரியாக்கள் இனப்பெருக்கம் செய்யும் இடமாக இருக்கலாம். இது உணவு மூலம் பரவும் நோய்களின் அபாயத்தை அதிகரிக்கும். 

  • காய்கறிகளை பச்சையாக சாப்பிடுவதைத் தவிர்க்கவும். ஏனெனில் அதில் அழுக்கு, பாக்டீரியா மற்றும் பிற அசுத்தங்கள் இருக்கலாம். தொற்று நோய்களின் அபாயத்தைக் குறைக்க காய்கறிகளை உண்ணும் போது நன்கு கழுவி சமைத்து சாப்பிடவும். 

இதையும் படியுங்கள்:
மாமிச உண்ணிகளின் வயிற்றை விட, தாவர உண்ணிகளின் வயிறு பெரிதாக இருப்பது ஏன் தெரியுமா? 
Foods Eating
  • மழைக்காலத்தில் அனைத்தும் எளிதில் மாசு ஆகிவிடும் என்பதால் பழைய உணவுகள் உட்கொள்வதைத் தவிர்க்கவும். ஈரப்பதமான சூழ்நிலையில் பாக்டீரியாக்கள் விரைவாக பெருகும். இது ஃபுட் பாய்சன் மற்றும் செரிமான பிரச்சனைக்கு வழிவகுக்கும். 

  • குளிர்ச்சியான நீர் உள்ளிட்ட குளிர்பானங்களை மழைக்காலத்தில் குடிக்க வேண்டாம். இதனால் செரிமானம் பாதிக்கப்பட்டு நோய் எதிர்ப்பு சக்தி குறையும் அபாயம் உள்ளது. 

இந்த பருவ காலத்தில் சரியான சுகாதார நடைமுறைகளை கடைபிடித்து, ஆரோக்கியமான உணவுகளை சாப்பிடுவது மூலமாக, எந்த நோய் நொடியும் இல்லாமல் என்றும் ஆரோக்கியத்துடன் இருக்கலாம். 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com