அழகான ஜா லைன்(Jaw line) வேண்டுமா? சூயிங்கம் சாப்பிடுங்க!

Want a beautiful jaw line?
Want a beautiful jaw line?
Published on

சிறு வயதிலிருந்து நிறைய சூயிங்கம் சாப்பிட்டிருப்போம். அதில் இருக்கும் இனிப்பு சிறிது நேரம் வரை இருக்கும். பிறகு அதுவே சுவையிழந்து போய்விடும். அவ்வளவுதான் சூயிங்கம்மை பற்றி நாம் அறிந்ததாக இருக்கும்.

வேறு என்ன சூயிங்கம்மை சாப்பிடுவதால் நன்மை ஏற்பட்டு விட போகிறது என்ற நினைத்தவர் களுக்காகத்தான் இந்தப் பதிவு.

தினமும் சூயிங்கம்மை சாப்பிடுவதால் அழகான ஜா லைன் உருவாகும் என்று சொன்னால் நம்புவீர்களா?

அழகுக்காக நாம் கடைப்பிடிக்க கூடிய டையட்டும், ஜிம்மிற்கு சென்று செய்யும் உடற்பயிற்சியையும் மீறி முகத்தில் இருக்கும் சதைகளை குறைப்பது சற்று கடினமான காரியமாகவேயுள்ளது.

சூயிங்கம் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்:

சூயிங்கம் சாப்பிடுவதால் முகத்தில் உள்ள எலும்புகளை வழுப்படுத்த உதவுகிறது.

சூயிங்கம்மை அடிக்கடி சாப்பிடுவதால் தெளிவான ஜா லைன் தெரியும்.

முகத்தில் உள்ள இரட்டை தாடை பிரச்னைகள் சரியாகும்.

முகத்தில் இருக்கும் தேவையில்லாத கொழுப்பை அகற்றி முக அழகை அதிகரிக்கும்.

சந்தையில் நிறைய சூயிங்கம் கிடைக்கிறது. அதில் சிறந்ததை வாங்கி பயன்படுத்துவது நல்லது. சுகர் பிரீ சூயிங்கம்களை பயன்படுத்துவது சிறந்தது. ஏனெனில் அடிக்கடி இனிப்பு சாப்பிடுவது பற்சொத்தை உருவாவதற்கு காரணமாகிவிடும்.

pixabay.com

மஸ்த்தி கம் மிகவும் கடினமாக இருப்பதால் அதை மெல்லுவதும் கடினமாகவேயிருக்கும். அது தாடைக்கு சிறந்த பயிற்சியாக அமையும்.

தினமும் 20 முதல் 30 நிமிடம் சூயிங்கம்மை சாப்பிடுவது நல்லது. அதிகமாக பயிற்சி செய்வது தாடை வலியை ஏற்படுத்தும்.

மியூவிங் பயிற்சி எப்படி செய்வது?

வாயை நன்றாக மூடிக்கொண்டு நாக்கை வாயின் மேல் பகுதியில் படும்படி செய்ய வேண்டும், இந்த நுட்பத்திற்கு பெயர் மியூவிங்காகும்.

இப்படி செய்வதால் ஜா லைன் உருவாகும் என்று கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து செய்வதால் தாடை வலி, பேச்சுதிறன் குறைப்பாடு ஆகியவை சரியாகுமென்று கூறப்படுகிறது.

இதையும் படியுங்கள்:
இப்படி ஒரு முறை மசாலா ஆப்பம் செஞ்சி பாருங்க!
Want a beautiful jaw line?

மியூவிங் செய்வதால் எந்த பாதிப்பும் இல்லை என்றாலும், நேரம் அதிகமாக செலவழியும். இதனால் ஏற்படும் பலனை கண்கூடாக பார்க்க இரண்டு வருடங்கள் வரை ஆகலாம்.

இதையும் தவிர அழகான ஜா லைன் வேண்டுமென்றால் தாடை அறுவை சிகிச்சை செய்து கொள்ளலாம். அந்த சிகிச்சை செய்து கொள்வதால் முகத்தை சிறியதாக காட்டும்.

அதுமட்டுமில்லாமல் இந்த சிகிச்சை செய்து கொள்வதால், அழகான சிறந்த வடிவத்திலான தாடையை செயற்கையாக பெற முடியும். அதனால் நிறைய இளசுகள் இந்த சிகிச்சையை செய்து கொள்ள ஆர்வம் காட்டுகிறார்கள்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com