கொரிய பெண்களைப்போல Silky hair வேண்டுமா? இப்படி ட்ரை பண்ணிப் பாருங்கள்!

Hair care of korean women
Hair care of korean womenImage Credits: Freepik
Published on

கொரிய பெண்களின் அழகு  உலகம் முழுக்க பிரசித்திப் பெற்றதாகும். அவர்கள் அழகை பராமரிப்பதற்காகவே தனிச் சிரத்தை எடுத்துக் கொள்வது ஆச்சர்யமாக உள்ளது. எனினும், நேரத்தை செலவு செய்து முகத்திற்கும், கூந்தலுக்கும் தனித்தனியாக பராமரிப்பை மேற்க்கொள்வதால்தான் அனைவரும் பொறாமைப் படக்கூடிய அழகை பெற்றிருக்கிறார்கள் என்றே சொல்ல வேண்டும். எப்படி அவர்களைப் போல Silky hair பெறுவது? அதற்கான பராமரிப்பு முறைகள் என்னென்ன? என்பதைப் பற்றி விரிவாக இந்தப் பதிவில் காண்போம்.

1.Double cleansing method.

முகத்திற்கு எப்படி Double cleansing செய்கிறோமோ? அதேபோல தலைமுடிக்கும் செய்ய வேண்டியது மிகவும் அவசியமாகும். முதலில் Pre shampoo treatment செய்ய வேண்டியது அவசியமாகும். தேங்காய் எண்ணெய் 2 தேக்கரண்டி எடுத்துக்கொண்டு தலையில் நன்றாக தடவி மசாஜ் செய்ய வேண்டும். பிறகு தலைமுடியில் இருக்கும் சிக்குகளை நீக்கிவிட்டு காட்டன் டவலை எடுத்து தலைமுடியில் சுற்றி வைத்துவிட்டு சிறிது நேரம் கழித்து Sulphate free shampoo வை பயன்படுத்தி குளிக்கவும். இதனால் தலையில் இருக்கும் அழுக்குகள் நீங்கி தலை சுத்தமாகும்.

2.Korean hair mask.

கொரியர்களின் கூந்தல் பராமரிப்பில் மிகவும் முக்கியமானது Hair mask ஆகும். இதில் Argan oil, shea butter, ginseng extract போன்றவை உள்ளதால் இது கூந்தலை உறுதியாகவும், ஈரப்பதத்துடனும் வைத்துக் கொள்ள உதவுகிறது. கூந்தலின் வேர் முதல் நுனிவரை Hair mask போட்டு 20 நிமிடம் கழித்து குளித்தால் கூந்தல் Silky Smooth ஆக இருக்கும்.

3.Scalp care.

தலைமுடியின் ஆரோக்கியம் உச்சந்தலையை எப்படி பராமரிக்கிறீர்கள் என்பதிலேயே உள்ளது. Scalp exfoliate செய்வது என்பது மிகவும் அவசியமாகும். இப்படி செய்வது ரத்த ஓட்டத்தை மேம்படுத்த உதவுகிறது. ரத்த ஓட்டம் மேம்பட்டால், கூந்தலும் ஆரோக்கியமாக வளரும். எனவே, Scalp serum or tonic பயன்படுத்தலாம்.

4.Essence and serum.

சருமப்பராமரிப்பிற்கு மட்டுமே சீரம் பயன்படுத்துவதில்லை. கொரியர்கள், கூந்தல் பராமரிப்பிற்கும் சீரம் பயன்படுத்துகிறார்கள். Ceramides,  hyaluronic acid, collagen போன்றவை பயன்படுத்துவதால் கூந்தலுக்கு ஈரப்பதமும், பளபளப்பும் கிடைக்கிறது.

இதையும் படியுங்கள்:
Cataract பிரச்னை ஏன் அதிகமாக வயதானவர்களையே தாக்குகிறது தெரியுமா?
Hair care of korean women

5. Heat protection.

தலைமுடியை ஸ்ரெயிட்டென் செய்ய அதிகமான வெப்பத்தை தலைமுடியில் பயன்படுத்துவதால், முடியின்ஆரோக்கியம் பாதிக்கப்படுகிறது. இதை தடுப்பதற்கு தலைமுடியில் வெப்பமான கருவிகளை பயன்படுத்துவதற்கு முன் Heat protectant spray or serum பயன்படுத்துவது நல்லதாகும். இது வெப்பத்தில் இருந்து கூந்தலுக்கு பாதுகாப்பை தந்து கூந்தலைக் காக்கிறது.

6.Glossy hair oil.

கூந்தலில் Argan, jojoba, camellia போன்ற எண்ணெய்களை பயன்படுத்துவதன் மூலம் பளபளப்பான கூந்தலை பெற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த 6 குறிப்புகளையும் சரியாக பின்பற்றினால், நீங்களும் கொரிய பெண்களைப்போல Silk smooth கூந்தலை பெறலாம். முயற்சித்துப் பாருங்கள்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com