
சருமம் பூப்போல மிருதுவாகவும், பொலிவாகவும் இருக்க வேண்டும் என்று ஆசைப்படாத பெண்கள் இருக்கவே முடியாது. அதற்காக அவர்கள் செய்ய வேண்டியதெல்லாம் இரவு நேர சருமப் பராமரிப்பில் கவனம் செலுத்துவது ஆகும். இரவு நேர பராமரிப்பு சருமத்தில் உள்ள அசுத்தத்தை நீக்குகிறது, நாள் முழுவதும் ஏற்பட்ட சேதத்தை குறைக்கிறது, சருமத்தில் இருக்கும் கோடுகள், கரும்புள்ளிகளை நீக்குகிறது, பொலிவான சருமத்திற்கு வழிவகுக்கிறது. இதைப்பற்றி விரிவாக இந்தப் பதிவில் காண்போம்.
1.சியா எண்ணெய்.
சியா எண்ணெய்யில் நிறைய ஊட்டச்சத்துக்கள் இருக்கின்றன. இதில் வைட்டமின் ஏ, வைட்டமின் ஈ, கொழுப்பு அமிலங்கள் சருமத்தில் ஆழமாக சென்று மெல்லிய கோடுகளை நீக்கும், சருமத்தை ஈரப்பதமாக வைக்க உதவுகிறது, சருமத்தில் ஏற்படும் வறட்சியை போக்குகிறது.
2.கற்றாழை.
கற்றாழை இரவு நேர சருமப்பராமரிப்பில் பயன்படுத்தும் முக்கிய பொருளாகும். இதில் இருக்கும் அழற்சி எதிர்ப்பு மற்றும் ஆக்சிஜனேற்றம் பண்புகள் கொலாஜெனை அதிகரித்து சருமத்தை ஈரப்பதத்துடன் வைக்க உதவுகிறது. சரும எரிச்சல், சருமத்தில் உள்ள கோடுகளை நீக்கி பொலிவான சருமத்தை தருகிறது.
3.ரோஸ் வாட்டர்.
ரோஸ் வாட்டர் சருமத்தில் பயன்படுத்துவதால், அதில் இருக்கும் ஆன்டி ஆக்ஸிடென்ட் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் சருமத்தில் ஏற்படும் வீக்கம், சருமம் சிவப்பது போன்ற பிரச்னைகளை சரிசெய்யும். மேலும், சருமத்தில் உள்ள PH ஐ சமன்படுத்தி பொலிவான சருமத்திற்கு வழிவகுக்கிறது.
4.இயற்கை எண்ணெய்கள்.
சருமத்திற்கு பயன்படுத்தக்கூடிய இயற்கையான எண்ணெய்களான ஆர்கன் ஆயில், தேங்காய் எண்ணெய், ஜோஜோபா ஆயில் சருமத்தை ஈரப்பதமாக வைப்பது மட்டுமில்லாமல் சருமத்திற்கு தேவையான ஊட்டச்சத்துக்களை வழங்குகிறது. இந்த எண்ணெய்களை பயன்படுத்துவதால் சருமத்தில் உள்ள மெல்லிய கோடுகள் மறைந்து சருமம் புத்துணர்ச்சியாகவும், பளபளப்பாகவும் மாறும்.
5.கிரீன் டீ.
இரவு நேர சருமப்பராமரிப்பில் கிரீன் டீ மிகவும் முக்கியமாகும். அதில் இருக்கும் கேடசின்கள் ப்ரீ ரேடிக்கல்களை தடுத்து சருமம் சேதப்படாமலும், சருமத்தில் தோல் அழற்சி வராமலும் காக்கிறது. இந்த கிரீன் டீயை சருமத்தில் டோனராக பயன்படுத்துவதால் சரும நிறத்தை பிரகாசமாக்குகிறது. எனவே, இந்த டிப்ஸ்களை உங்கள் இரவு நேர சருமப் பராமரிப்பில் சேர்த்துக்கொண்டு ஜொலியுங்கள்.