அழகுக்கலை நிபுணராக வேண்டுமா.? இதோ... உங்களுக்கான வாய்ப்பு!

அழகுக்கலை நிபுணர் வசுந்தரா
அழகுக்கலை நிபுணர் வசுந்தரா
Published on

ற்போது, பிரபலமாகிக் கொண்டு வரும் தொழில்களில் அழகுக்கலையும் ஒன்று.  நம் வாழ்க்கையோடு சேர்த்து பிறரின் வாழ்க்கையையும் அழகாக்கும் தொழிலே இந்த அழகு கலை.  குறிப்பாக, பெண்களுக்கு இந்தத் துறையில் பல்வேறு வாய்ப்புகள் கொட்டிக் கிடக்கின்றன. இந்த துறையில் பயின்றால், சுய தொழில் ஆரம்பிக்கலாம். முழு நேர வேலை செய்யலாம் அல்லது ஃப்ரீலான்ஸ் கூட பண்ணலாம். ஆகவே, பெண்கள் தங்கள் எதிர்காலத்தை நிர்ணயிக்க தேர்ந்தெடுக்கும் துறைகளுள் அழகுக்கலைக்கு என்று ஒரு தனி இடம் உண்டு.

அழகுக்கலை என்ற ஒற்றை வார்த்தைக்குள் இந்தத் துறையை அடக்கிவிட முடியாது. மற்ற துறைகளைப் போலவே இதிலும் பல பிரிவுகள் உள்ளன. இதுகுறித்து, அழகுக்கலை நிபுணர் வசுந்தரா அவர்களிடம் கேட்டபோது, அவர் கூறியதாவது…

அழகுக்கலை நிபுணர் பயிற்சி எடுத்துக் கொள்வதற்கும், இது சார்ந்த பயிற்சி வழங்கும் நிறுவனம் நடத்துவதற்கும் தேவையான அழகுக்கலை பயிற்சிகளில் நிறைய வகைகள் உள்ளன. முதலில், Full course பற்றி தெரிந்துகொள்வோம்.

Skin care, Hair care, Cosmetic preparation, அரோமா தெரபி, மேக்கப் மற்றும் Body care போன்றவற்றிற்கான பயிற்சிகள் இதில் அடங்கும். இதற்கான பயிற்சியின் கால அளவு ஒரு மாதம். மெதுவாக கற்றுக்கொள்பவர்களுக்காக 15 நாள்கள் அதிகமாக பயிற்சி வழங்கப்படும்.

Skin care: Skin care பயிற்சியில் Galvanic, Ultrasonic, face lifting போன்ற Facial gadget-களை பயன்படுத்தும் முறை, ஒருவரின் skin type-பை கண்டறிவது, Skin tester, அதன் மூலமாக வாடிக்கை யாளருக்கு ஸ்கின் கேர் பற்றி டிப்ஸ் வழங்குவது, Skin பிரச்சனைகளுக்கு ஏற்ற டிரீட்மெண்ட்ஸ், வாடிக்கை யாளரை எப்படி அணுகுவது, அவர்களை comfortable-லா எப்படி வைத்துக்கொள்வது போன்ற பயிற்சிகள் இதில் அடங்கும்.

Hair care: Hair structure, Hair type, Hair problems, மற்றும் அதற்கு ஏற்ற Hair treatments பற்றி இதில் கற்றுக்கொள்ளலாம். Hair treatments பொறுத்தவரை கெமிக்கல் சார்ந்த சிகிச்சை முறையும், சூடான ஆயில் மஜாஜ், ஸ்பா, இந்திய ஹெட் மசாஜ் போன்ற Herbal சார்ந்த சிகிச்சை முறையும் கற்றுக் கொடுக்கப்படும். இது தவிர வெவ்வேறு வகையான ஹேர் ஆயில், ஹேர் பேக் தயாரித்தல் போன்றவற்றிற்கான பயிற்சியும் அளிக்கப்படும்.  ஹேர் கட்ஸ், மற்றும் Hair care சம்பந்தப்பட்ட எல்லா விஷயங்களையும், நுணுக்கங்களையும் கற்றுக்கொள்ளலாம்.

இதையும் படியுங்கள்:
சொற்களின் வல்லமையை வெற்றிக்கு பயன்படுத்துங்கள்!
அழகுக்கலை நிபுணர் வசுந்தரா

Body care: Body spa, வெவ்வேறு வகையான Body treatments, Body பாலிஷிங், Body மசாஜ், Body பேக்ஸ் தயாரித்தல் போன்றவற்றைப் பற்றி கற்றுக்கொள்ளலாம்.

அரோமா தெரபி: அரோமா தெரபியில் பிரச்சனைக்கான ஆயிலை கண்டறிவது, ஆயிலுடன் என்னென்ன பொருள்களை சேர்த்தால் பிரச்சனை சரியாகும் என்பதற்கான பயிற்சிகள் இந்த கோர்ஸ்ஸில் வழங்கப்படும்.

Cosmetology: Cosmetology கோர்ஸ்ஸில் ஆயில், face பேக், லிப் பாம், ஷாம்பூ போன்ற காஸ்மெட்டிக் பொருள்கள் தயாரித்தல் பற்றி கற்றுக்கொள்ளலாம்.

மேக்கப்: சில பேருக்கு மேக்கப் பற்றி மட்டும் கற்றுக்கொள்ள விருப்பம் இருக்கும்.  எல்லாருக்குமே ஒரு selfconfidence தரக் கூடிய சக்தி மேக்கப்புக்கு உண்டு.

Visible difference
Visible difference

தற்போது, எவ்வளவு வயதானாலும் ஒரு லேசான மேக்கப் கட்டாயமாக தேவைப்படுகிறது. இந்த கோர்ஸ்ஸில் சரும பிரச்னை களுக்கு தகுந்தவாறு மேக்கப்பை தேர்வு செய்வது, பார்ட்டி மேக் ஓவர், சிம்பிள் மேக் ஓவர், திருமண மேக் ஓவர், போட்டோஷூட் மேக் ஓவர், ஹை டெபினிஷன் மேக்கப், ஏர் பிரஷ்  மேக்கப்  போன்ற அனைத்து வகையான மேக்கப் பயிற்சிகள் அடங்கும். இந்த கோர்ஸ் முடித்தவர்கள் பார்லர் வைக்கவேண்டும் என அவசியமில்லை. பிரீலான்ஸாக மேக்கப் செய்து கூட பணம் சம்பாதிக்கலாம்.

தனித்தனியாகவும் இதற்கான பயிற்சிகளை எடுத்துக் கொள்ளலாம்.  உதாரணத்திற்கு, Asthetician கோர்ஸ்ஸில் ஸ்கின் கேர் பற்றி மட்டும் கற்றுகொள்ளலாம். Cosmetology கோர்ஸ்ஸில் காஸ்மெட்டிக் பொருள்கள் தயாரித்தல் பற்றி மட்டும் தெரிந்து கொள்ளலாம்

தற்போது, Hair extension ரொம்ப பிரபலமாக இருக்கிறது. முடி உதிர்தல், அடர்த்தி குறைவான முடி போன்ற பிரச்சனைகளுக்கு இது ஒரு சிறந்த தீர்வாகப் பார்க்கப்படுகிறது. Hair extension-னில் ரியல் ஹேர் (Real hair), ஹை ஹீட் பைபர் (High heat fiber), சிந்தெடிக் (Synthetic) ஹேர் என பல வகைகள் உள்ளன. Hair extension பற்றிய அனைத்து விஷயங்களும் கற்றுக் கொள்ளலாம்.  நீங்கள் Hair extension வாங்கி விற்கவும் செய்யலாம். ரியல் ஹேர் (Real hair) விலை சற்று அதிகமானது. ஹை ஹீட் பைபர் (High heat fiber) ஒரிஜினல் முடி மாதிரி இருக்கும். கொஞ்சம் விலை அதிகமானது. சிந்தெடிக் (Synthetic) வகை Hair extension-களை டெம்ப்ரரியாகப் பயன்படுத்தலாம்.

இந்த பயிற்சிகள் கூட சேர்ந்து தேர்வுகளும் நடத்தப்பட்டு மத்திய அரசின் அங்கீகரிப்புடன் சான்றிதழ்கள் வழங்கப்படும்.  இதன் உதவியோடு தொழில் தொடங்குவதற்கு வங்கிகளில் லோன் வாங்கிக் கொள்ளவும் முடியும். ஒரு சில கல்லூரி மாணவர்களுக்கும், பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கும் இது போன்ற தொழில் சார்ந்த படிப்புகளும் பாடப் புத்தகங்களைத் தாண்டி கூடுதலாக கற்றுக்கொடுக்கப்படுகிறது. அப்புறம் என்ன வெயிட்டிங் கத்துக்க ஆரம்பிக்கலாமா.?

Visible difference
Visible difference

-தொகுப்பு; மணிமேகலை

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com