

நாம் எல்லோருமே நம்முடைய முகத்தை நல்ல பளபளப்பாகவும், கருமை திட்டுகள் இல்லாமலும், பொலிவாக வைத்திருக்க தான் ஆசைப்படுவோம். ஆனால் ஒரு சில நேரங்களில் நமது முகம் கருத்துப் போகின்றன. வெளியே செல்லும் போது, சூரிய ஒளியிலிருந்து வரும், நமது உடலுக்கு தீங்கு விளைவிக்க கூடிய கதிர்வீச்சுகள் நமது தோலை பாதிக்கிறது. இதனால் முகத்தில் சுருக்கங்கள், கருமை, வறட்சி போன்ற பிரச்சனைகள் ஏற்படுகின்றன.
அதுமட்டுமில்லாமல், ஹார்மோன் மாற்றங்களாலும், முகத்தில் முகப்பருக்கள் வருவது சுலபம். அந்த முகப்பருக்கள் வந்த பிறகு கருமை நிற தழும்புகளையும், திட்டுகளையும் விட்டு செல்கின்றன. எனவே முகத்திலுள்ள கருமை திட்டுகளையும், பிக்மென்டேஷனையும் கட்டுப்படுத்த இந்த ஒரு ஃபேஸ் பேக் உங்கள் முகத்திற்கு ஏதுவாக இருக்கும்.
அது மட்டுமல்லாமல் தோலை மிருதுவாகவும், மென்மையாகவும், பளபளப்பாகவும் ஆக்குகின்றன. அது என்ன ஃபேஸ் பேக்? என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.
தேவைப்படும் பொருள்கள்.
வெள்ளை முழு உளுந்து-2 ஸ்பூன்.
பசும் பால்-உளுந்து முங்கும் அளவு.
ஒரு பழுத்த தக்காளி.
தேன்-1 ஸ்பூன்
பேஸ் பேக்கை எப்படி செய்வது?
முதலில் ஒரு கிண்ணத்தில் முழு உளுந்து எடுத்துக் கொள்ளவும். உளுந்து முங்கும் அளவிற்கு பசும்பால் சேர்க்கவும். குறைந்தது 2 மணி நேரம் அப்படியே ஊற விடவும். பிறகு பாலில் ஊறிய அந்த உளுந்தை பாலோடு சேர்த்து மிக்ஸியில் போட்டுக் கொள்ள வேண்டும். பிறகு ஒரு பழுத்த தக்காளியையும் சேர்க்க வேண்டும். மிக்ஸியில் நன்கு அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். அரைத்த பேஸ்ட்டை ஒரு பாத்திரத்திற்கு மாற்ற வேண்டும். இப்போது, அதில் ஒரிஜினல் தேனை ஒரு ஸ்பூன் சேர்க்கவும். இப்போது நன்கு கலக்கவும். ஃபேஸ் பேக் தயார்.
முகத்தில் எப்படி போடுவது?
முதலில் முகத்தை தண்ணீரில் கழுவி விட வேண்டும்.இப்போது கிடைத்திருக்கும், இந்த ஃபேஸ் பேக்கை மெதுவாக சர்குலர் மோஷன்ல முகத்தில் அப்ளை பண்ணவும். மெதுவாக முகத்தில் தடவ வேண்டும். அப்படியே இருபது நிமிடம் முகத்தை காய விட வேண்டும். காய்ந்த பிறகு தண்ணீரில் முகத்தை கழுவ வேண்டும். அதுவும் மெதுவாக மசாஜ் செய்தபடி முகத்தை கழுவ வேண்டும். ஒரு காட்டன் துணியை எடுத்து முகத்தை அழுத்தி துடைக்காமல், மெதுவாக பொத்தி பொத்தி எடுக்கவும். ஏனென்றால்; எப்பொழுதுமே முகத்தை துடைக்கும் பொழுது அழுத்தம் கொடுக்கக் கூடாது. இந்த ஃபேஸ் பேக்கை வாரத்திற்கு இரண்டு அல்லது மூன்று முறை உங்கள் வசதிக்கேற்ப போட்டுக் கொள்ளுங்கள்.
முக்கிய குறிப்பு.
உடலுக்கு தேவையான தண்ணீரை அருந்தி, சரிவிகித உணவை எடுத்துக்கொண்டு, உடற்பயிற்சி செய்தால் நமது தோல் வயதானாலும் என்றும் இளமையாகவே இருக்கும். மேலும் இந்த ஃபேஸ் பேக்கில் கூறப்பட்டுள்ள செய்திகள் அனைத்தும் உடனடி தீர்வைத் தருமே தவிர, நிரந்தர தீர்வை தராது. அதற்கு மேல் நிரந்தர தீர்வுகளுக்கான விவரங்களுக்கும், சிகிச்சைகளுக்கும் உங்களது தோல் மருத்துவரை அணுகுவது மிகவும் சிறந்தது.