தர்பூசணி விதை: சருமத்தின் அனைத்துப் பிரச்சனைகளுக்கும் ஒரே தீர்வு!

Watermelon seeds
Watermelon seeds

கோடைக்காலங்களில் அதிகம் கிடைக்கும் ஒரு பழம் தர்பூசணி. தர்பூசணி சாப்பிட்டுவிட்டு, விதையைத் தூக்கி எறிகிறீர்களா? ப்ளீஸ், இனி அப்படி செய்யாதீர்கள்.

தர்பூசணி விதைகள் உடலுக்கு எவ்வளவு நல்லதோ? அதேபோல் முகச்சருமத்திற்கும் அவ்வளவு நல்லது. இவை முகச்சருமத்தில் ஏற்படும் பிரச்சனைகளை நீக்கி, முகத்தை ஜொலிக்க வைக்க மிகவும் உதவுகிறது.

தர்பூசணி விதைகளின் பலன்கள்:

தர்பூசணி விதைகளில் பால்மிடிக் அமிலம், ஒலிக் அமிலம் மற்றும் ஸ்டீரிக் அமிலம் போன்ற கொழுப்பு அமிலங்கள் ஏராளமாக நிறைந்துள்ளன. இவை சருமத்திற்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

தர்பூசணி விதைகளிலிருந்து தயாரிக்கப்படும் எண்ணெய் மற்றும் ஃபேஸ் பேக் எண்ணெய்கள், எண்ணெய் சருமம் கொண்டவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இது சருமத்தில் தூசிகள் ஒட்டாமல் பாதுகாப்பதோடு, ஏராளமான ஊட்டச்சத்துக்களையும் தருகிறது.

தர்பூசணி விதைகளில் உள்ள ஒலிக் அமிலம் மற்றும் லினோலிக் போன்றவை சருமத்திலிருக்கும் நச்சுக்களை அகற்ற உதவுகிறது. ஆகையால், சருமம் இளமையாக இருக்கும்.

சருமத்தில் பருக்கள், தழும்புகள் போன்ற பிரச்சனைகள் இருந்தால், தர்பூசணி விதைகளை முகத்தில் பயன்படுத்தலாம். இந்த விதைகளில் உள்ள லினோலிக் அமிலம் சருமத்தை நீரேற்றமாக வைக்க உதவுகிறது. மேலும் இது பல்வேறு வகையான பிரச்சனைகளிலிருந்து சருமத்தைப் பாதுகாக்கிறது.

பயன்படுத்தும் முறைகள்:

தேவையானப் பொருட்கள்:

  • தர்பூசணி விதைகள்: 2 தேக்கரண்டி

  • தயிர்: 1 ஸ்பூன்

  • முல்தானி மெட்டி: 1 தேக்கரண்டி

  • தேன்: இரண்டு முதல் மூன்று சொட்டுகள்

  • ரோஸ் வாட்டர்: 2 முதல் 3 சொட்டுகள்

செய்முறை:

முதலில் தர்பூசணி விதைகளை நன்கு அரைத்து பொடியாகத் தயார் செய்யவும். பின், இந்த பொடியில் அனைத்து பொருட்களையும் கலக்க வேண்டும். இந்த பேஸ்ட் சற்று கெட்டியான பிறகு, முகத்தில் நன்றாக தடவ வேண்டும். சுமார் 15 நிமிடங்களுக்குப் பிறகு முகத்தைக் கழுவ வேண்டும். இவை சருமத்தை பளபளப்பாக வைப்பதுடன், சருமம் தொடர்பான பல்வேறு பிரச்சனைகளைக் குணப்படுத்தவும் உதவும்.

இதையும் படியுங்கள்:
ஃபேஷன் உலகில் டிரெண்டாகி வரும் புதுவித சோக்கர் நெக்லஸ்கள் பற்றி பார்க்கலாம்!
Watermelon seeds

தர்பூசணி விதை எண்ணெய் செய்யும் முறை:

நிறைய பேர், தர்பூசணி விதைகளை எண்ணெய் முறையில் பயன்படுத்தவே விரும்புவார்கள். அதனையும் நாம் வீட்டிலேயே தயாரிக்கலாம்.

முதலில் தர்பூசணி விதைகளை சுத்தம் செய்து வெயிலில் காய வைக்க வேண்டும். இந்த விதைகள் நன்கு உலர்ந்த பிறகு வறுக்க வேண்டும். பிறகு மிக்ஸியில் நன்றாக அரைத்து, துணியின் உதவியுடன் எண்ணெயை அகற்றலாம்.

இந்த எண்ணெயை வடித்து, அதை பாட்டில் ஒன்றில் வைக்க வேண்டும். இப்போது இந்த எண்ணெயைச் சருமத்தில் தடவலாம்.

இந்த விதைகளை பயன்படுத்தினால், முகம் அழகாகும். ஆனால், தர்பூசணி அல்லது அதன் விதைகளுக்கு ஒவ்வாமை பிரச்சனை இருப்பவர்கள், இதனைப் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com