எண்ணெய் பசையுள்ள தலையை ஆரோக்கியமாக வைத்திருக்கும் வழிகள்! 

oily scalp
Ways to keep an oily scalp healthy!
Published on

எண்ணெய் பசை உள்ள கலை என்பது மரபணு ஹார்மோன் மாற்றங்கள் உணவு பழக்கங்கள் மற்றும் சுற்றுச்சூழல் போன்ற பல்வேறு காரணங்களால் ஏற்படுகிறது. எண்ணெய் பசை மிகுந்த தலை பொடுகு முடி உதிர்வு தோல் அலர்ஜி போன்ற பிற பிரச்சனைகளை ஏற்படுத்தும். ஆனால் சரியான தலை முடி பராமரிப்பு மற்றும் வாழ்க்கை முறை மாற்றங்களின் மூலம் எண்ணெய் பசையைக் கட்டுப்படுத்தி ஆரோக்கியமான தலையைப் பெற முடியும். 

தலையில் எண்ணெய் பசை ஏன் ஏற்படுகிறது? 

உச்சந்தலையில் உள்ள செபேசியஸ் சுரப்பிகள் அதிகப்படியான செபம் எனப்படும் எண்ணையை உற்பத்தி செய்வதால், எண்ணெய் பசை ஏற்படுகிறது. இதற்கு மரபணு, ஹார்மோன் மாற்றங்கள், உணவுப் பழக்கங்கள், சுற்றுச்சூழல், தவறான முடி பராமரிப்பு போன்றவை முக்கிய காரணங்களாக அமைகின்றன. 

தலையில் எண்ணெய் பசையைக் கட்டுப்படுத்தும் வழிகள்: 

  • எண்ணெய் பசையைக் கட்டுப்படுத்த தலைமுடியை ஒவ்வொரு இரண்டு மூன்று நாட்களுக்கு ஒரு முறை மிதமான ஷாம்புவைப் பயன்படுத்தி கழுவ வேண்டும். குறிப்பாக, ஷாம்புவில் சல்பேட் இல்லாமல் பார்த்துக் கொள்ளுங்கள். 

  • தலைக்கு கண்டிஷனர் பயன்படுத்தும்போது உச்சந்தலையில் பயன்படுத்தாமல் முடி நுனிகளில் மட்டும் பயன்படுத்தவும். அவ்வப்போது, தலையில் தயிர் பேக் போடுவது நல்லது. தயிர் தலைமுடியை மென்மையாக்கி எண்ணெய் பசையைக் குறைக்கும். வாரத்திற்கு ஒருமுறை தயிரை உச்சந்தலையில் பூசி 30 நிமிடங்கள் கழித்து கழுவவும். 

  • எலுமிச்சை சாறு, எண்ணெய் பசையைக் குறைத்து முடியை பொலிவாக்கும். எலுமிச்சை சாற்றை தண்ணீரில் கலந்து தலையில் தடவி சிறிது நேரம் கழித்து கழுவுவது உச்சந்தலையை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும். 

  • ஆப்பிள் சைடர் வினிகர் தலைமுடியின் pH அளவை சமநிலைப்படுத்தி, எண்ணெய் பசையைக் குறைக்கும். அதிக கொழுப்பு, சர்க்கரை உள்ள உணவுகளைத் தவிர்த்து பழங்கள், காய்கறிகள், தானியங்கள் நிறைந்த உணவுகளை உண்ணவும். தினசரி போதுமான அளவு தண்ணீர் குடிப்பது, உச்சந்தலையை ஈரப்பதமாக வைத்து எண்ணெய் உற்பத்தியைக் குறைக்கும். 

  • அதிகப்படியாக ஸ்டைலிங் பொருட்களைப் பயன்படுத்துவது எண்ணெய் பசையை அதிகரிக்கச் செய்யும். எனவே, தலையில் அவற்றை குறைவாகவே பயன்படுத்துங்கள். உச்சந்தலையை மசாஜ் செய்வது ரத்த ஓட்டத்தை அதிகரித்து எண்ணெய் உற்பத்தியை கட்டுப்படுத்தும்.‌

இதையும் படியுங்கள்:
எண்ணெய் வழியும் முகமா? பள்ளங்கள் விழுந்த முகச் சருமமா? No worries..!
oily scalp

எண்ணெய் பசையுள்ள தலை என்பது எளிதாக சரி செய்யக்கூடிய ஒரு பிரச்சனைதான். சரியான தலைமுடி பராமரிப்பு, வாழ்க்கை முறை மாற்றங்கள் மூலம் எண்ணெய் பசையைக் கட்டுப்படுத்தி, ஆரோக்கியமான தலையைப் பெற முடியும். எனவே, மேலே உள்ள வழிமுறைகளைப் பின்பற்றி, எண்ணெய் பசை பிரச்சினைகளில் இருந்து விரைவில் விடுபடுங்கள். 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com