பிரசவத்துக்குப் பின் ஏற்படும் முடி உதிர்வைத் தடுக்கும் வழிகள்!

hair loss
hair loss
Published on

பிரசவம் என்பது ஒரு பெண்ணின் வாழ்வில் மிக முக்கிய கட்டமாகும். ஆனால், இந்த அற்புதமான அனுபவத்திற்குப் பிறகு பல பெண்கள் எதிர்கொள்ளும் ஒரு பொதுவான பிரச்சனைதான் முடி உதிர்வு. கர்ப்ப காலத்தில் அடர்த்தியாகவும், பளபளப்பாகவும் இருக்கும் முடி பிரசவத்திற்குப் பிறகு ஏன் உதிரத் தொடங்குகிறது? இதற்கான காரணங்கள் என்ன? வாருங்கள் இந்தப் பதிவில் தெரிந்து கொள்ளலாம். 

கர்ப்ப காலத்தில் பெண்களின் உடலில் ஈஸ்ட்ரோஜன் மற்றும் புரோஜெஸ்ட்டிரோன் போன்ற ஹார்மோன்களின் அளவு அதிகமாக இருக்கும். இந்த ஹார்மோன்கள் முடியின் வளர்ச்சியை அதிகரித்து, முடியை அடர்த்தியாகவும் பளபளப்பாகவும் காட்டும்.‌ ஆனால், பிரசவத்திற்குப் பிறகு இந்த ஹார்மோன்களின் அளவு திடீரென்று குறையும். இதனால், முடியின் வளர்ச்சி சுழற்சி பாதிக்கப்பட்டு அதிக அளவில் முடி உதிர்வுக்கு வழிவகுக்கும். 

கர்ப்ப காலத்தில் மற்றும் பிரசவத்திற்கு பிறகு பெண்களின் உடல் பல ஊட்டச்சத்துக்களை இழக்கிறது. இரும்பு, துத்தநாகம், வைட்டமின்கள் போன்ற சத்துக்கள் முடியின் ஆரோக்கியத்திற்கு மிகவும் முக்கியமானவை. இந்த சத்துக்களின் குறைபாடு முடிவை அதிகரிக்கச் செய்யும். மேலும், புதிதாகப் பிறந்த குழந்தையைப் பராமரிப்பது பெரும்பாலான பெண்களுக்கு மன அழுத்தத்தை ஏற்படுத்துகிறது. தூக்கமின்மை, உணவு பழக்க வழக்கங்களில் மாற்றம் போன்றவை கூடுதல் அழுத்தத்தை ஏற்படுத்தி முடி உதிர்வுக்கு வழிவகுக்கும். 

பிரசவத்திற்கு பின் முடி உதிர்வைத் தடுக்கும் வழிகள்: 

இரும்பு, துத்தநாகம், வைட்டமின்கள் நிறைந்த பச்சைக் காய்கறிகள், பழங்கள், நட்ஸ், விதைகள், இறைச்சி போன்ற உணவுகளை உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள். முடியை அடிக்கடி கழுவ வேண்டாம். மிகவும் இறுக்கமாக இருக்கும் சிகை அலங்காரங்களைத் தவிர்க்கவும். மென்மையான ஷாம்பு மற்றும் கண்டிஷனரைப் பயன்படுத்துவது நல்லது. தினசரி அதிகமாக தண்ணீர் குடிக்கவும். நீரேற்றத்துடன் இருந்தாலே முடி ஆரோக்கியமாக இருக்கும். தொடர்ச்சியாக முடி உதிர்வுப் பிரச்சனை இருந்தால் தகுந்த மருத்துவரை அணுகி ஆலோசித்து சிகிச்சை பெற வேண்டும். 

இதையும் படியுங்கள்:
செம்பட்டை முடி கருகருன்னு மாறணுமா? வறண்ட கூந்தல் வளம் பெறணுமா? இதை ட்ரை பண்ணுங்க..!
hair loss

பிரசவத்திற்குப் பின் ஏற்படும் முடி உதிர்வு தற்காலிகமானதுதான். சரியான உணவு, சரியான முடி பராமரிப்பு, மன அழுத்தத்தை நிர்வகித்தல் போன்ற வழிகளைப் பின்பற்றுவதன் மூலம் இந்தப் பிரச்சனையை சமாளிக்கலாம். இருப்பினும், உங்களுக்கு எதனால் முடி உதிர்கிறது என்பதற்கான காரணத்தை அறிந்து அதற்கு ஏற்றவாறு வாழ்க்கை முறை மாற்றங்களையோ அல்லது சிகிச்சையோ செய்வது நல்லது. 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com