தினசரி உணவுடன் வெள்ளரி விதைகளை சேர்த்து உண்பதால் கிடைக்கும் 7 ஆரோக்கிய நன்மைகள்!

Cucumber Seed Health Benefits
Cucumber Seed Health Benefits
Published on

ம் உடலுக்கு ஆரோக்கியம் தரக்கூடிய சூப்பர் உணவுகளில் பாதாம், முந்திரி, வேர்க்கடலை, எள், சூரியகாந்தி விதைகள், பூசணி விதைகள், வெள்ளரி விதைகள்  போன்ற தாவர வகைக் கொட்டைகளும் விதைகளும் முக்கிய இடம் பெறுபவை. இவை அனைத்திலுமே வைட்டமின்கள், கனிமச் சத்துக்கள், ஆரோக்கியமான கொழுப்புச் சத்துக்கள் போன்ற உடலுக்கு நன்மை தரக்கூடிய ஊட்டச் சத்துக்கள் அதிகம் உள்ளன. இதில் வெள்ளரி விதைகளிலிருந்து கிடைக்கக்கூடிய 7 ஆரோக்கிய நன்மைகள் என்னென்ன என்பதை இந்தப் பதிவில் பார்க்கலாம்.

1. வெள்ளரி விதைகளில் உள்ள சிங்க் சத்து உடலின் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும். இம்யூன் (immune) செல்களின் ஆரோக்கியமான வளர்ச்சிக்கும் செயல்பாடுகளுக்கும் சிங்க் சிறந்த முறையில் உதவக்கூடியது. வெள்ளரி விதைகளை உண்பதால் நோய்க் கிருமிகளை எதிர்த்துப் போராட உடலுக்கு அதிக சக்தி கிடைக்கும்.

2. வெள்ளரி விதைகளில் டயட்டரி ஃபைபர் அதிகம் உள்ளது. இது ஆரோக்கியமான செரிமானத்துக்கு உதவும். மேலும், நார்ச்சத்துக்கள் குடல் இயக்கத்தை சிறப்புற நடைபெறவும் மலச்சிக்கல் நீங்கவும் உதவி புரியும்.

3. வெள்ளரி விதைகள் அதிகளவு நீர்ச்சத்து நிறைந்தவை. நீர்ச்சத்தானது உடலின் உஷ்ண நிலையை சமநிலையில் வைத்துப் பராமரிக்கவும், மூட்டுக்களில் உராய்வு ஏற்படாமல் ஈரப் பசையுடன் கூடிய நெகிழ்வுத் தன்மை கொண்டு இயங்கவும் நல்ல முறையில் உதவும்.

4. வெள்ளரி விதைகள் எடைப் பராமரிப்பிற்கும் சிறந்த முறையில் உதவக் கூடியது. இது குறைந்த கலோரி அளவு கொண்ட ஓர் உணவு. இதிலுள்ள அதிகளவு நார்ச்சத்தானது வயிற்றில் அதிக நேரம் தங்கி பசி உணர்வை தள்ளிப்போகச் செய்யும். இதனால் உட்கொள்ளும் உணவின் அளவு குறைந்து எடை அதிகரிக்காமல் பார்த்துக்கொள்ள முடியும்.

இதையும் படியுங்கள்:
மஹாபலியின் ஆச்சரியமூட்டும் ஆசார்ய பக்தி!
Cucumber Seed Health Benefits

5. இதில் ஆன்டி ஆக்ஸிடன்ட்களும் அதிகம் உள்ளன. இவை ஆக்ஸிடேட்டிவ் ஸ்ட்ரெஸ்ஸை எதிர்த்துப் போராடி செல்கள் சிதைவடைவதைத் தடுத்துப் பாதுகாக்க உதவும். ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் உடலில் கேன்சர் மற்றும் இதய நோய் போன்ற நாள்பட்ட வியாதிகள் வரும் அபாயத்தைத் தடுக்கவும் உதவும்.

6. வெள்ளரி விதைகளில் உள்ள பொட்டாசியம் மற்றும் மக்னீசியம் சத்துக்கள் இதய ஆரோக்கியம் காக்க சிறந்த முறையில் உதவும். இவை இரத்த அழுத்தத்தை சமநிலையில் வைக்கவும் இதயத் துடிப்பு சீராக நடைபெறவும் உதவும்.

7. இதிலுள்ள வைட்டமின் E மற்றும் கொழுப்பு அமிலங்கள் சரும ஆரோக்கியத்தைக் காக்க உதவுபவை.

வைட்டமின் E ஃபிரீரேடிகல்களினால் சரும செல்கள் சிதைவடையாமல் பாதுகாக்க உதவும். கொழுப்பு அமிலங்கள் சருமத்தில் ஈரத் தன்மையும், எலாஸ்டிசிட்டியும் குறையாமல் பாதுகாக்க உதவும்.

மற்ற விதைகளைப் போல் வெள்ளரி விதைகளையும் சாலட், ஸ்மூத்தி போன்ற உணவுகளோடு சேர்த்து உட்கொண்டு ஆரோக்கிய மேன்மையடைவோம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com