பலரும் விரும்பும் ஜாகர் (Jogger pant) பேண்ட்டுகளில் அப்படி என்னதான் இருக்கு?

Jogger pant
Jogger pantImage credit - pixabay.com

ஜாகர் பேண்ட்டுகள் அனைத்து வயதினரும் விரும்பி அணியக்கூடிய ஒரு ஆடையாகும். காரணம் அதை அணிவதில் உள்ள வசதி, அதனுடைய ஸ்டைலிஷ் தோற்றம், பலதரப்பட்ட வண்ணங்களில் கிடைக்கிறது. இந்த வகையான பேண்ட்டுகள் கேஷுவல் உடைகளுக்கும் வெளியில் அணிந்து செல்லவும் ஏற்றது. அதனுடைய சிறப்புகளை பற்றி இந்த பதிவில் பார்ப்போம். 

1. அணிவதற்கு சௌகரியமானவை;

இவற்றை பலரும் விரும்பி அணிவதற்கு முக்கியமான காரணம், இவை அணிவதற்கு சௌகரியமானவை என்பதாகும். பாரம்பரியமான ஜீன்ஸ் அல்லது வழக்கமான பேண்ட் போன்று அல்லாமல் ஜாகர்கள் பருத்தி அல்லது பாலியஸ்டர் கலந்த மென்மையான பொருட்களிலிருந்து தயாரிக்கப்படுகிறது. இதை அணிந்திருக்கும் போது ஈரத்தை எளிதாக உறிஞ்சி சருமத்திற்கு பாதுகாப்பாக விளங்குகிறது.

இதையும் படியுங்கள்:
ஆடை மற்றும் அணிகலன்கள் நழுவாமல் ‘நச்’ என்று இருக்க இந்த ஃபேஷன் டேப் பெஸ்ட்!
Jogger pant

2. எல்லா சந்தர்ப்பங்களுக்கும் ஏற்றது;

ஜாகர் பேண்ட்டுகளை எல்லா சந்தர்ப்பங்களிலும் அணிந்து கொள்ளலாம். எந்த விதமான ஆடைகளுடனும் இதை மேட்ச் செய்து கொள்ள முடியும். வீட்டில் ஓய்வாக இருக்கும் போதும் ஜிம்மிற்கு சென்று வொர்க் அவுட் செய்யும் போதும், விருந்துக்கு அணிந்து செல்லவும் இது பொருத்தமான உடையாக இருக்கிறது. கேஷுவலாக அணியும்போது ஒரு டீ சர்ட் மற்றும் ஸ்னீக்கர் உடன் சேர்ந்து அணிந்து கொள்ளலாம்.  அலுவலகத்துக்குச் செல்லும்போது ஃபார்மல் சட்டைகள் மற்றும் ஃலோபர்  ஷூக்களுடன் அணிந்து கொள்ளலாம். விருந்துகளுக்கு செல்லும்போதும் இதை அணிந்து கொள்ளலாம் என்பது இதனுடைய சிறப்பு.

3. இதனுடைய தனித்துவமான அமைப்பு;

இதனுடைய தனித்துவமான அமைப்பு இதன் சிறப்பாகும். எலாஸ்டிக் வைத்த நெகிழ்வான இடுப்பு பட்டைகளைக் கொண்டிருக்கும். ஜிப் வைத்த பாக்கெட்டுகள் இருக்கும்.  அணிந்து கொள்ள வசதியாக மட்டுமல்லாமல், பயணத்தில் இருக்கும் போது சாவிகள் அல்லது போன் போன்ற சிறிய பொருட்களை சேமிக்கவும் உதவுகிறது. 

4. விளையாட்டு வீரர்களுக்கு ஏற்றது;

விளையாட்டு வீரர்களுக்கு மிகவும் பொருத்தமான ஆடையாக திகழ்கிறது.  மேம்படுத்தப்பட்ட வசதிகளை தருகிறது.  ஜாகர் பேண்டுகளை அணிந்து கொண்டு உடற்பயிற்சி, ஜாகிங், யோகா செய்யும் போதும்,  பளு தூக்கும் போதும் ஜாகர் பேண்ட்  வியர்வையால் உடலோடு ஒட்டிக் கொள்ளாமல் காக்கிறது. ஈரப்பதத்தை உறிஞ்சும் பண்புகளுடன் வடிவமைக்கப்பட்டுள்ளதால் உடற்பயிற்சியின்போது அவர்களை குளிர்ச்சியாகவும் உலர்வாகவும் வைத்திருக்கிறது.

ஜாகர் பேண்ட்
ஜாகர் பேண்ட்Image credit - pixabay.com

5.  ஃபேஷன் சின்னம்

ஜாகர் பேண்ட்டுகளை அணிவது ஃபேஷன் சின்னமாக இருக்கிறது. பலதரப்பட்ட வண்ணங்கள் வடிவங்கள் மற்றும் வடிவமைப்புகளில் இவை கிடைக்கின்றன.  வயதானவர்கள் முதல் சிறியவர்கள் வரை அனைவரும் விரும்பக்கூடிய டிசைன்களில் கிடைக்கிறது. அதனால் இது பலதரப்பட்ட மக்களைக் கவர்ந்ததில் ஆச்சரியம் இல்லை. இந்த ஜாகர் பேண்ட்டுகளை அணிந்திருப்பவரை அழகாகவும் ஆளுமை தன்மையோடும் வெளிப் படுத்துகிறது. இது வயது மற்றும் பாலின எல்லைகளை தாண்டி பல அலமாரிகளில் ஜாகர் பேண்ட்டுகள் இடம் பிடித்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. 

6. பராமரிக்க எளிதானது

இவற்றை பராமரிப்பது மிகவும் எளிதானது. இவற்றை வாஷிங் மெஷின் அல்லது கையால் துவைக்கலாம். பலமுறை துவைத்து அணிந்தாலும் அதன் தரம் நீடித்திருக்கும். இதில் அதிகப்படியான தேய்மானமும் கிழிசலோ ஏற்படாது. எனவே பல ஆண்டுகள் அவற்றை அணிய முடியும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com